Ramdev's demands are 'unrealistic', says Omar | ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை : சொல்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா | Dinamalar

ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை : சொல்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை :  சொல்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர் : ""ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறையில் செயல்படுத்துவதற்கு ஒவ்வாதவை,'' என, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான பாபா ராம்தேவின் கவலை நியாயமானது தான். ஆனால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், அதற்கு உடனடியாக எப்படி தீர்வு காண முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவரது கோரிக்கைகளும், நடைமுறையில் செயல்படுத்துவதற்கு ஒவ்வாதவை. நினைத்த உடனே, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வருவது என்பது யாராலும் முடியாது. அதே போன்று 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு உடனடியாக தடை விதிக்கவும் முடியாது. அதில், நடைமுறை சிக்கல் ஏராளமாக உள்ளன.ஊழல் செய்பவர்களுக்கு மரண தண்டனை என்பதெல்லாம் நம்ப முடியாதது என, நினைக்கிறேன். ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அறிவித்திருக்கிறார். அவரது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறாரா என்பதும் புரியவில்லை. ஏனென்றால், அவரது கோரிக்கைகள் நிறைவேற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். கறுப்பு பணத்திற்கு எதிராக போராடும் ராம்தேவ், அவருக்கு வரும் நன்கொடைகள் உள்ளிட்டவைகளை சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தான் பெற்றுக் கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும்.இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Doss - Pollachi,இந்தியா
05-ஜூன்-201123:18:54 IST Report Abuse
Hari Doss பாபா தவறாக கோரிக்கை வைத்துள்ளார். கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்களுக்கு பாரத் ரத்னா போன்ற மிக உயர்ந்த பட்டதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தால் இவர்கள் அவரை மனதார போற்றி விழா நடத்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Abk Abk - niyoma,அல்பேனியா
05-ஜூன்-201121:46:36 IST Report Abuse
Abk Abk இந்திய நாட்டு கொடிய கூட பறக்க வுடல, இதுக்கு வாய பாரு
Rate this:
Share this comment
Cancel
Yuvaraj Velusamy - Karur,இந்தியா
05-ஜூன்-201120:03:40 IST Report Abuse
Yuvaraj Velusamy நல்ல விசயங்களுகாக யாரு வேணும்னாலும் போராட்டம் நடத்தலாம். யோகா மாஸ்டர்கு தகுதி இல்லன்னு பேசி தப்பிக்க பார்க்கும் அரசியல் வாதிகளிடம் ஜாக்கிரதையா இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
velmurugan - male`,மாலத்தீவு
05-ஜூன்-201117:25:52 IST Report Abuse
velmurugan கருப்பு பணத்தை மீட்கும் வரை உண்ணாவிரதம் இருபாரா என்று கேட்கும் நீ, எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருகிறாய் என்று எனக்கு தெரியல, கருப்பு பணத்தை மீட்க உடனே சட்டம் இயட்ற வேண்டும் என்றும் அந்த பணத்தை அரசுடமையாக அறிவிக்க வேண்டும் என்றும் ராம்தேவ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார், இது நடக்காத காரியமா?, அவருக்கு வரும் நன்கொடைகள் பற்றி கேட்கும் நீ உன்கட்சிக்கும் உனக்கும் வரும் நிதி பற்றி கணக்கு வச்சுருக்கியா?, அப்பன் பதவி மகனுக்கு என்று வம்சாவழி ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் நீ எல்லாம் கருத்து சொல்வது காலத்தின் கொடுமை. ஊழலிடம் ஊழலை பற்றி கேள்விகேட்டால் இப்படிதான் பதில் வரும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-ஜூன்-201115:17:56 IST Report Abuse
villupuram jeevithan ஆமாம், திருடன் தன கைக்கு தானே விலங்கிட்டுக் கொள்வானா?
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
05-ஜூன்-201113:25:02 IST Report Abuse
naagai jagathratchagan ஊழல் செய்வது காங்கிரசுக்கு ஒத்து வருமா ..எது ஒத்து வருதோ அதைசெயுங்கள் ..காங்கிரஸ் கொள்கைகளை யாருக்கும் எதற்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் ...நடைமுறைக்கு ஒத்து வராத ஊழலை வளர்ப்பவர்களுக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர்கள் என்ற புதிய பதவியை தொடருங்கள்..வாழ்க பாரதம் வளர்க காங்கிரஸ் புதல்வர்கள்
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
05-ஜூன்-201112:25:04 IST Report Abuse
S.M.Noohu அவருடைய கோரிக்கைகள் உங்களை போன்றோருக்கு ஒத்துவராது தான், அவர் சொன்ன கோரிக்கைகளிலே என்னை போன்றோருக்கு பிடித்தமானது உழல் செய்தவனுக்கு மரணதண்டனை, சரியான கோரிக்கைதான், இது எப்படி இன்றைய அரசியல் (வியாதி) வாதிகள் விரும்புவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jeevan Kalyan - Dindigul,இந்தியா
05-ஜூன்-201111:59:11 IST Report Abuse
Jeevan Kalyan ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கும் எதிரான சட்டம் கொண்டு வருவது மிகவும் கடினம் ஏன் எனில் ஊழலில் சிக்கி உள்ளவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தான். தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ள யார்தான் உடன்படுவார்கள் ? இந்த நிலை மாற நாட்டு பற்று மிக்க சர்வாதிகாரியின் ஆட்சி நடந்தால் மட்டுமே முடியும் .
Rate this:
Share this comment
Cancel
R.BALASUBRAMANIAM - MADURAI,இந்தியா
05-ஜூன்-201111:43:14 IST Report Abuse
R.BALASUBRAMANIAM என்ன செய்வது? ஊழல் ஊழலுக்குதானே சப்பைகட்டுகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
தாராசுரத்தான் - Bentonville,யூ.எஸ்.ஏ
05-ஜூன்-201109:17:56 IST Report Abuse
தாராசுரத்தான் ஊழல் செய்பவர்களைவிட இவர் மாதிரி ஆட்கள்தான் ஆபத்தானவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை