சொத்து பட்டியல் வெளியிடப்படும் : கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவனந்தபுரம் : "முதல்வர், அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், தனி செயலர்கள், உயரதிகாரிகள் ஆகியோரது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். அரசின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்கும். தலைமைச் செயலகத்தில் தேங்கிக் கிடக்கும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பைல்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் தேங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் பைல்கள், நூறு நாட்களில் பைசல் செய்யப்படும்' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிரடியாக அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி தலைமையில், அரசின் நூறு நாட்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்த அமைச்சரவை கூட்டம் நடந்தது.அப்போது அவர் பேசுகையில், "முதல்வர், அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர், அமைச்சர்களின் தனி செயலர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், அட்வகேட் ஜெனரல், அரசு வக்கீல், மூத்த உயர் அதிகாரிகள் ஆகியோர், தங்களது சொத்துக்கள் குறித்த விவர பட்டியல் வெளியிடப்படும்.இதன் மூலம் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு காலத்தில் ஊழல், முறைகேடுகள் தடுக்கப்படும். மாநிலத்தில் எங்கு ஊழல் நடந்தாலும், அது குறித்து அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு பரிசும், முழு பாதுகாப்பு வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க வசதியாக, முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.மாநிலத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கக்கோரி மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அரசிடம் தேங்கிக் கிடக்கின்றன. நூறு நாட்களில் அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அதற்கு பின் விண்ணப்பித்த அன்றே, ரேஷன் கார்டுகள் கிடைக்க வசதி ஏற்படுத்தப்படும். அரசின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்கும்.
தலைமைச் செயலகத்தில் தேங்கிக் கிடக்கும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பைல்கள், பிற துறைகளில் தேங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் பைல்கள் ஆகியவை, நூறு தினங்களில் பைசல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து உத்தரவுகளும் உடனுக்குடன் வலை தளத்தில் வெளியிடப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு முன்பாக, கிலோ ஒரு ரூபாய்க்கு 25 கிலோ அரிசி வழங்கப்படும்' என அதிரடியாக அறிவித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்