UPA govt weakening federal structure: BJP‎ | கூட்டாட்சி தர்மத்தை மீறி செயல்படுகிறது காங்கிரஸ் அரசு : பாரதிய ஜனதா கட்சி கடும் குற்றச்சாட்டு | Dinamalar

கூட்டாட்சி தர்மத்தை மீறி செயல்படுகிறது காங்கிரஸ் அரசு : பாரதிய ஜனதா கட்சி கடும் குற்றச்சாட்டு

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கூட்டாட்சி தர்மத்தை மீறி செயல்படுகிறது காங்கிரஸ் அரசு : பாரதிய ஜனதா கட்சி கடும் குற்றச்சாட்டு


லக்னோ : "மாநிலங்களைப் பலவீனப்படுத்துவது, அவற்றுக்கான அரசியல் சாசன உரிமைகளை மறுப்பது போன்றவற்றின் மூலம், கூட்டாட்சித் தர்மத்தை மீறி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுகிறது' என, பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் துவங்கிய பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான நேற்று, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசைக் கண்டித்து, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:மாநிலங்கள் மீதான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தாக்குதல்கள், வெறுப்பையும், விரோதத்தையும், நயவஞ்சகத்தையும், அரசியல் சாயத்தையும் காட்டுவதாக உள்ளன. கூட்டாட்சி முறையைக் குலைக்க, ஒன்றன் பின் ஒன்றாக பல நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஒதுக்கப்படாத, ஆனால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கூட, ஐ.மு., கூட்டணி பறித்துக் கொண்டுள்ளது.அரசியல் சாசனத்தின் 154வது பிரிவு, மாநில அரசுகளுக்கான அதிகாரங்களையும், 246 வது பிரிவு, மாநில மற்றும் மத்திய அரசுகள் பகிர்ந்து கொள்ளக்கூடிய அதிகாரங்களையும் தெளிவுபடுத்தியுள்ளன. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இரண்டு அரசுக்கும் பொதுவான அதிகாரங்கள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.மாநில ஆட்சிப் பரப்பு மற்றும் நிதி விவகாரங்களில் தலையிடுவதன் மூலமும், மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து, மத்தியில் குவிப்பதன் மூலமும் கூட்டாட்சிக்கு மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கியுள்ளது ஐ.மு.கூட்டணி அரசு. ராஜிவ் காலம் துவங்கி இன்று வரை, மாநிலங்களின் அதிகாரங்களை, திட்டமிட்டு முறைப்படுத்தி, மத்திய அரசிடம் குவிப்பது தொடர்ந்து நடக்கிறது. குடிநீர் முதல் எண்ணெய் வித்துக்கள் வினியோகம் வரை, கட்டுப்பாடுகளை தன் பிடியில் வைத்திருக்கும் மத்திய அரசின் போக்கு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களான கிராமப்புற சுகாதாரத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புத் திட்டம், கல்வி பெறும் உரிமை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றுக்கான பெருமளவு செலவுகளை மத்திய அரசின் உதவியின்றி, மாநில அரசுகள் தான் ஏற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான சம்பளத் தொகையில், 85 சதவீதத்தை மத்திய அரசு முன்னர் வழங்கி வந்தது. தற்போது அதை 65 சதவீதமாகக் குறைத்து விட்டதால், மாநில அரசுகள் சிரமப்பட வேண்டியுள்ளது.இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் பற்றி செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, அம்மாநிலத் தலைவர் ராகுல் சின்கா தன் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால், இது போன்ற விவகாரங்களில் பொறுப்பு என்பது ஒருவருக்கு மட்டுமே உரித்தானதல்ல என்று கூறி, கட்சித் தலைவர் நிதின் கட்காரி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Doss - Pollachi,இந்தியா
05-ஜூன்-201123:31:32 IST Report Abuse
Hari Doss நமது மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு சாதகமாக செயல்படுவதா அல்லது கூட்டணி தத்துவத்திற்கு சாதகமாக செயல்படுவதா என தலையை பிய்த்துகொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை