சபரிமலை பக்தர்களுக்கு வசதி குறைவு : உம்மன் சாண்டி பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவனந்தபுரம் : "தென்னிந்தியாவில் பிற முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, சபரிமலையில் பக்தர்களுக்கு தற்போதுள்ள வசதி குறைபாடுகள் கேரள மாநிலத்திற்கு வெட்கக்கேடானது' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை தீர்த்த யாத்திரை நிர்வாகம் தொடர்பான சிறப்பு கூட்டத்திற்கு, மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தை முதல்வர் உம்மன் சாண்டி துவக்கி வைத்து பேசியதாவது:சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, முன்பெல்லாம் நிலம் இல்லை என்ற காரணம் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அப்பிரச்னை இல்லை. போதுமான நிலம் இருந்தும் வசதிகள் செய்து கொடுக்காமல் ஐந்தாண்டுகள் பாழாகி விட்டது. மேலும், புல்மேடு போன்ற துயர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. அங்கு தற்போது பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அடுத்த சபரிமலை சீசன் துவங்குவதற்கு இன்னும் ஐந்தரை மாதங்களே உள்ள நிலையில், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளோம். அதற்குள் அங்கு சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதி ஆகியவை மேம்படுத்தப்படும். பம்பை முதல் சாலக்கயம் வரை, தார் சாலை ரப்பர் கலந்த உயர்தர சாலையாக அமைக்கப்படும்.தென்னிந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில், பக்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளை ஒப்பிட்டு பார்க்கையில், சபரிமலையில் வசதிகள் குறைவு தான். இது, கேரள மாநிலத்திற்கு வெட்கக்கேடானது.இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vsrinivasan - pondicherry,இந்தியா
05-ஜூன்-201116:01:05 IST Report Abuse
vsrinivasan IN SABARI MALA TEMPLE SANITORY CONDITION POOR. FOREST PIGS WANDERING IN TEMPLE PREMISES. BAD SMELL , POOR DRAINAGE, NON AVAILABILITY OF AT MORNING ON THE RE OPENING OF THE TEMPLE , EVEN POLICE TEMPLE STAFF AVAILABLE ONLY AFTER FIVE PM . PRIESTS AND TEMPLE STAFF ARE EATING FOOD. PILCRIMGES CAN EAT FOOD AFTER EVENING SINCE THE FOOD SUPPLIED ONLY EVENING ON THE OPENING DAY. FACILITY VERY VERY POOR . காட்டு பன்றிகளின் புழுக்கை ஏராளம் . நாற்றம் தாங்க முடிய வில்லை ! சுகாதாரமே இல்லை . மலையில் மாலையில் தான் உணவு தயார் செய்கிறார்கள் முதல் நாளில் ! இவ்வளவு வருமானம் கொடுக்கும் கோவிலில் பக்தர்களுக்கு நல்ல வசதி செய்து கொடுக்க கூடாதா தெவசம் போர்டு !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்