Manohar elected new Speaker of Andhra assembly | ஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்வு | Dinamalar

ஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்வு

Added : ஜூன் 04, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்வு

ஐதராபாத் : ஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல், நேற்று நடந்தது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டனர். மனோகர், 158 ஓட்டுகளும், கிருஷ்ணமூர்த்தி, 90 ஓட்டுகளும் பெற்றனர்.இதையடுத்து, 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மனோகர், 47, புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்றுள்ள மனோகர், 2009ல், துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை