Mamata rebuild the office with his own property | சொந்த செலவில் அலுவலக அறையை சீரமைத்த முதல்வர் | Dinamalar

சொந்த செலவில் அலுவலக அறையை சீரமைத்த முதல்வர்

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சொந்த செலவில் தன் அலுவலக அறையை சீரமைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி, திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. புதிய முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலக அறையில் அண்மையில் சீரமைப்பு பணிகள் நடந்தன. பிரவுன் கலரில் இருந்த அலுவலக சுவர்களின் நிறம் வெண்மையாக்கப்பட்டது.மர வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்த தரை மாற்றப்பட்டு, கார்பெட் விரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மர நாற்காலிகளுக்கு பதில், தோல் மற்றும் பஞ்சு பயன்படுத்தப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முதல்வரின் மேஜை அரைவட்ட வடிவத்தில் செய்யப்பட்டுள்ளது. அறையில் இருந்த "டிவி' அகற்றப்பட்டு, பத்திரிகையாளர்கள் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்புப் பணிகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் செலவானது. இந்த தொகையை முதல்வர் மம்தா பானர்ஜி, தன் சொந்த பணத்திலிருந்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:முந்தைய முதல்வர் இந்த அலுவலகத்தை அவரது விருப்பத்திற்கேற்ப அலங்கரித்து வைத்திருந்தார். அது பிடிக்காமலோ அல்லது அவரது அழகுணர்ச்சியை மட்டம் தட்டுவதற்காகவோ இந்த மாற்றங்களை நான் செய்யவில்லை. இந்த அலுவலக அறையில் அமர்ந்த நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது.எனவே, அதற்கான சூழ்நிலை அறையில் இருக்க வேண்டும் என கருதியே இந்த சீரமைப்பு பணிகளை செய்துள்ளேன். முந்தைய முதல்வர் அவரது விருப்பத்திற்கு, அறையை அலங்காரப்படுத்தி வைத்திருந்தார். தற்போது, என் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்துள்ளேன். இதற்காக, அரசு பணத்தை செலவழித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்த விரும்பாமல், என் சொந்த பணத்தை செலவு செய்துள்ளேன். "டிவி'யில் பெரும்பாலும் செய்திகளை மட்டுமே பார்ப்பேன். என் மொபைல் போனில் இணைய வசதி உள்ளதால், அதிலேயே செய்திகளை பார்த்து கொள்கிறேன். எனவே, என் அறையில் இருந்த "டிவி' பத்திரிகையாளர் அறையில் வைக்க கொடுத்து விட்டேன்.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - Mumbai,இந்தியா
06-ஜூன்-201101:01:49 IST Report Abuse
raman இந்த செய்தி ஜெயாவை தான் சொல்றாகலோனு ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆய்ட்டேன் போங்க
Rate this:
Share this comment
Cancel
Rama - NJ,யூ.எஸ்.ஏ
05-ஜூன்-201111:19:24 IST Report Abuse
Rama ஜெயா-இக்கு இந்த பக்கம் மட்டும் ஒரு காப்பி எடுத்து அனுப்புங்க ... வந்த அன்னைக்கு 1500 கோடி ரூபாய் செலவு இன்னும் எவ்வளவு ...
Rate this:
Share this comment
Cancel
A.Sethupathi - chennai,இந்தியா
05-ஜூன்-201106:17:44 IST Report Abuse
A.Sethupathi தமிழ்நாட்டில் இதுவே 150 கோடிக்கு பொதுமக்கள் பணத்தில் செய்யப்படும்
Rate this:
Share this comment
Cancel
karamadaian - karamadai,இந்தியா
05-ஜூன்-201104:52:02 IST Report Abuse
karamadaian " என் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்துள்ளேன். இதற்காக, அரசு பணத்தை செலவழித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்த விரும்பாமல், என் சொந்த பணத்தை செலவு செய்துள்ளேன்" - இது மம்தாவின் ஸ்டைல். நம்ம ஊர் ஸ்டைல் ?????
Rate this:
Share this comment
H Narayanan - Hyderabad,இந்தியா
05-ஜூன்-201107:39:36 IST Report Abuse
H Narayananரயில்வே துறையில் அடிச்சதை இங்க உபயோகப் படுத்தறாங்க.. இவங்க மொபைலில் இன்டர்நெட் வசதி இருக்குதாம். ஆனால் முன்னாள் மேற்குவங்க முதல்வரிடம் அது கிடையாது.. 35000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் வைத்து இருப்பதால் 12000 மதிப்புள்ள கலர் டிவி தேவையில்லை என்கிறார். நம்ம ஊரு ஸ்டைல் பற்றி கேட்டுள்ள காரமடையான் அவர்களே..BSNL மூலமாக 323 தொலைபேசி இணைப்புகளை அதுவும் வருடக் கணக்கில் பணம் கட்டாமல் இலவசமாக உபயோகப் படுத்துவதுதான் நம்ம ஊரு ஸ்டைல்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை