ஐந்து நட்சத்திர சத்தியாகிரக போராட்டம்: காங்., கடும் விமர்சனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ""பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம், ஆடம்பரமான ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டமாக உள்ளது. வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது: பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், ராம்தேவ் மீதான நம்பகத்தன்மை என்ன என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த அமைப்புகள், தங்களின் பயங்கரவாதச் செயல்களில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தை, சத்தியாகிரகப் போராட்டம் என, எப்படி அழைப்பது? பாபா ராம்தேவ், ஜெட் விமானத்தில் பயணம் செய்பவர். ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் சத்தியாகிரகப் போராட்டமா? உண்ணாவிரதப் பந்தலில் "ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வேண்டுமானால், இதை, ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டம் என, அழைக்கலாம். இந்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து, அன்னா ஹசாரே மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தற்போது, உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆங்கிலம் அவசியம். ஆனால், மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை, பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என, ராம்தேவ் வலியுறுத்துகிறார். இவர் கூறுவதை நடைமுறைப்படுத்தினால், நாடு எப்படி வளர்ச்சி அடையும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஒருவிதமாகவும், பாபா ராம்தேவ் ஒருவிதமாகவும் மதிப்பிடுகின்றனர். உண்மையில் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கூற முடியுமா. ராம்தேவுக்கு, அரசின் செயல்பாடுகள் என்ன என்பது தெரியவில்லை. பா.ஜ., தலைவரைப் பார்த்து கேட்கிறேன்? ராம்தேவ் கூறுவதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா? கறுப்பு பணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் ராம்தேவ், மொரீஷியசில் எதற்கு ஆசிரமம் அமைத்துள்ளார். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (49)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramesh - Coimabtore,இந்தியா
28-ஆக-201111:21:37 IST Report Abuse
Paramesh !!!!!!! தென்றல் காற்று நம் ஜன்னலில் வீசட்டும், உலகம் நம் சரித்திரம் பேசட்டும் !!!!!!!
Rate this:
Share this comment
Cancel
Prakasam - coimbatore,இந்தியா
28-ஆக-201111:08:02 IST Report Abuse
Prakasam இவ்வளவு பேசும் காங்கிரஸ், இனி இந்தியாவில் சுத்தமா இனி வரும் காலங்களில் அழிக்கப்பட்டுவிடும். இளைய சமுதாயமே இந்த காங்கிரஸ் ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடும். ஊழல் மட்டுமே வாழ்க்கையாக கொண்ட இந்த ஆட்சியாளர்கள் இனி அழிகபடுவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasa Ragavan - chennai,இந்தியா
05-ஜூன்-201115:45:25 IST Report Abuse
Srinivasa Ragavan இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பொருளாதார நிபுணர் குருமூர்த்தி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்கள் நலன் கருதி சுருக்கமாக இங்கே கூற விரும்புகிறேன். "2007ம் ஆண்டு சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான துவக்க எண்களைக் கொண்ட இந்த தொலைபேசி இணைப்புகள் சென்னை பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் பெயரில் தரப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத இணைப்புகள் மூலம் சன் டிவி., குழுமம் மற்றும் தினகரன் நாளிதழ் அலுவலகங்கள் இணைக்கப்ட்டிருந்தன. இதனால் இந்த தொலைபேசி இணைப்புகளின் சேவையை இந்த அலுவலகங்கள் இலவசமாக பெற்றிருந்தன. இந்த இணைப்புகளுக்காக சட்ட விரோதமாக சாலைகளைத் தோண்டி கேபிள்களும் அதுவும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்த கேபிள்கள் போடப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டும் இந்த 323 தொலைபேசி இணைப்புகளில் ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சம் யூனிட் கால்கள் பேசப் (பயன்படுத்தப்) பட்டுள்ளது. அப்படியானால் தயாநிதியுடன் தொடர்புள்ள இந் நிறுவனங்கள் 323 தொலைபேசி இணைப்புகளையும் பயன்படுத்தி எவ்வளவு பேசி ( பயன்படுத்தி) இருப்பார்கள்? 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த இணைப்புகள் இருந்துள்ளன. இந்த கால கட்டத்தில் சுமார் 630 கோடி யூனிட் கால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு கால் யூனிட்டுக்கு 70 காசு என்று கணக்கிட்டுப் பார்த்தால், 440 கோடி ரூபாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதமே தயாநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ., பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
05-ஜூன்-201115:23:26 IST Report Abuse
muthu Rajendran கருப்பு பணத்தை வெளியே கொண்டுவரணும் என்றாலே ஏன் திக விஜய சிங்குக்கு எரிச்சல் வருகிறது. வெளிநாட்டில் ச்விச்ஸ் வங்கியில் இருக்கும் இந்தியர் பணத்தை எவ்வளவு என்று அறிய இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நீங்கள் கூடத்தான் காந்தி பெயரை சொல்லிவிட்டு மன்னருக்குள்ள ஆடம்பரம் செய்ய வில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
05-ஜூன்-201115:06:53 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran ராம்தேவ் பண்ணின தப்பு ஏசி கூலர் எல்லாம் போட்டுக்கிட்டு உண்ணாவிரதம் இருந்தது இல்லேன்னா நம்ப அண்ணன் திக்விஜய்சிங் கருப்பு பணத்தை அரும்பாடு பட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்திருப்பாரு.இந்த ரம்தேவிற்கு இவ்வளவு திமிர் கூடாது .அண்ணன் திக்விஜய் ,அவரு தலைவி சோனியா எல்லாம் ரத்தத்தை சிந்தி சேர்த்த பணத்த திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வரணுமாம் .அவரு ஒரு பிராடுங்க .அதனால்தான் பிரதமரே நாலு மந்த்ரிகள விமான நிலையத்திற்கு அனுப்பி பேசி பார்த்தாரு .பேரம் படியல .ஏன்யா நாங்க கஷ்டப்பட்டு கொள்ளையடிச்ச பணத்த நாட்டுக்கு கொடுத்துட்டு திகார் ஜெயிலில் களி தின்ன்னுமா
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
05-ஜூன்-201114:57:33 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran அய்யா திக்விஜய் சிங் ,ரொம்ப யோசித்து பார்த்தேன் .எப்படியாவது இந்தியாவிற்கு வெளிநாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்த கொண்டாந்திரனும்..நான் கட்டாந்தரைல உக்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கேன் .ஏசி,கூலர் ,எதுவும் வேண்டாம் .என்கிட்டே எந்த சொத்தும் இல்லை .நீங்க சொல்றபடி எல்லாம் கேட்கிறேன் ,தயவு செய்து ,உங்க கட்சிக்காரங்க ,முதலாளியம்மா ,போட்டிருக்கிற கருப்பு ,ஏழைகளின் ரத்தத்தால் சிவந்தே ரெட் பணத்த இந்தியவிற்கு கொண்டு வந்திருங்க
Rate this:
Share this comment
Cancel
Chandar - sydney,ஆஸ்திரேலியா
05-ஜூன்-201114:42:16 IST Report Abuse
Chandar 5 star or 7 star why you worried its all because you guys had a 5 star level scam somebody has started a protest like this so answer him........
Rate this:
Share this comment
Cancel
Alagu Muthu - Tutico,இந்தியா
05-ஜூன்-201114:24:26 IST Report Abuse
Alagu Muthu ௧.அனைவருக்கும் அடையாள அட்டை கொடுத்து சொத்து, நகை, பணம் ,சிவில் & கிரிமினல் வழக்குகள் , வங்கி கணக்குகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சில்லறை செலவுகளுக்கு செல்போன் முலம் பண பரிமாற்றம் என டிஜிட்டலைஸ் செய்து கருப்பு பண புழக்கத்தை நிறுத்த வேண்டும் . இதனால் கருப்பு பண புழக்கத்தை மட்டுமின்றி கொலை, களவு , தீவிரவாதம் போன்ற அனைத்து கொடுஞ் செயல்களையும் பெருமளவு கட்டுபத்த முடியும் .
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
05-ஜூன்-201114:12:54 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran திக்விஜய்சிங் ,அமர்சிங் என்ற இரண்டு கோமாளிகளை வைத்து யார் லஞ்சஊழல் கருப்பு பணத்த பற்றி கேள்வி கேட்டாலும் அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து தங்கள் குற்றங்களை மறைக்க பார்க்கும் காங்கிரஸ் அரசாங்கம் எப்போது போகிறதோ அப்போதுதான் இந்தியாவிற்கு விடிவுகாலம் .கள்ளபணம் ,கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வாடா என்றால் முள்ளங்கி என்ன விலை என்று திசை திருப்பும் திகவிஜையை இந்தியாவிலிருந்து அவர் தலைவியோடு சேர்த்து விரட்டியடிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
- avudaiyar koil,சிங்கப்பூர்
05-ஜூன்-201114:10:20 IST Report Abuse
 சமாதானம் பேசிப்பார்த்தார்கள் மசியவில்லை என்றதும் சாடுகிறார்கள் இதுதான் காங்கிரசின் அரசியல்தனம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்