Will metro rail project survive? | கவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா?

Updated : ஜூன் 06, 2011 | Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கவர்னர் உரையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின் போது மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பின், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மோனோ ரயில் திட்டத்திற்கு மாற்றாக மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தனர். வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்; சென்ட்ரல் - பரங்கிமலை இரண்டு வழித்தடங்களில், 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை, 1,200 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. தரைக்கு மேல் ரயில் செல்வதற்காக பாலம் அமைக்கும் பணியும், தரைக்கு கீழ் சுரங்க ரயில் பாதை அமைக்க மண் பரிசோதனையும் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் கட்ட பணிகள் 2015ம் ஆண்டு முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் உரையில், "மெட்ரோ ரயில் திட்டம் 45 கி.மீ., அளவிற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மூலதன செலவு அதிகமாவதுடன், திட்டம் செயல்பாட்டிற்கு வர காலதாமதமாகும். எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும். முதல் கட்டமாக 111 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த உரையில், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எவ்வித கருத்தும் இல்லை. திட்டம் நிறுத்தப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுமா என்றும் தெரிவிக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுவரை எங்களுக்கு நிர்வாக ரீதியாக எவ்வித தகவலும் வரவில்லை. முறையாக தகவல் கிடைத்ததும் தான் இத்திட்டத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்' ஒரு வரியில் முடித்துக் கொண்டார்.

மோனோ ரயில் கொண்டு வர காரணம் என்ன? : மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடுகையில், மோனோ ரயில் குறைந்த செலவில், விரைவாக திட்டத்தை முடித்து பயன்பாட்டிற்கு வரும். மோனோ ரயில் அமைக்க விசாலமான இடம் தேவையில்லை. சாலையில் தூண்கள் அமைத்து, அதன் மேல் பாலம் அமைத்து அவற்றில் மோனோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிக்க இடத்திலும், அகலம் குறைவான சாலைகளிலும், குறைந்த செலவிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அதே சமயம், மோனோ ரயிலில் அதிகபட்சம் 700 பேர் பயணிக்கலாம். மெட்ரோ ரயிலில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும். ஒரு மணி நேரத்தில், மோனோ ரயிலில் 10,000 பேர் பயணிக்கலாம்; மெட்ரோ ரயிலில் 30,000 பேர் பயணிக்கலாம்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanniappan Kanniappan - Madurai,இந்தியா
11-ஜூன்-201115:19:30 IST Report Abuse
Kanniappan Kanniappan மோனோ ரயில் திட்டம் நம் ஊருக்கு சரிப்பட்டு வருமா? தமிழ்நாடு பல ஆயிரம் கோடி கடனிலும், அதற்கான வட்டியாக பல கோடியும் தரவேண்டிய நிலையில் எந்த வித புது திட்டங்களும் செய்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இத்தனை கோடிகள் கடனிலிருக்கும்போது புது சட்டமன்ற வளாகமும், செம்மொழி மாநாடும் நடத்தி நட்டத்தை மேலும் மேலும் பெருக்கியிருக்கக் கூடாது. இது கருணாநிதியை குளிர்விக்கும் துதியே. செம்மொழி மாநாட்டினால் சாமான்யனுக்கும், பொதுமக்களுக்கும் என்ன நன்மை? ஒரு குளிர்வசதி தனியார் பேருந்தில் பயணிப்பது பாதுகாப்பானதாக இல்லாதிருக்கும்போது, அந்தரத்தில் பறக்கும் மோனோ ரயிலை ஓட்டுவதும், பராமரிப்பதும் நடைமுறைக்கு உதவாது. யு.எஸ்' ல் சியாட்டில் நகரில் உல்லாசப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக சிறிது தூரம் மட்டுமே மோனோ ரயில் செலுத்தப்படுகிறது. கட்டணமும் அதிகமாக இருக்கும். வ.க.கன்னியப்பன்
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - london,யுனைடெட் கிங்டம்
08-ஜூன்-201114:23:03 IST Report Abuse
tamilselvan நீங்க மெட்ரோ போட்டு ஆட்டைய போட்ட, நாங்க மோனோ போட்டு ஆட்டைய போடுவோம்ல,
Rate this:
Share this comment
Cancel
MURALI RAMASAMY - VADIPATTI,இந்தியா
06-ஜூன்-201103:12:22 IST Report Abuse
MURALI RAMASAMY பழி வாங்க பல வழி உண்டு தயவு செய்து ஆரசலையோ மக்கள் வரிபணத்தையோ விண் அடிகதீர் 12000 கோடி மெட்ரோ + 1000 கோடி புதிய தலைமை செய்லகம் + 200 கோடி சமசீர் திட்டம் இது எதுவும் அவாகள் அப்பன்வீட்டுபணத்தை செலவல்லிகவில்லை மக்களின் வரிபணம் தயவு செய்து நாட்டை முன்நேற்றும் முறையில் திட்டம் வகுக்கவும் பலி வாங்கம் நோக்கோடு அல்ல தயவு செய்து உங்களுக்கு ஒட்டு போட்ட மக்களை பழி சொல்க்கு அழக்கி வீடதீர் உங்கள் வழியால் மக்கள் மனதில் வலி உண்டாகி வீடதீர் மாற்றத்தை நங்கள் தந்தோம் ஏமாற்றத்தை நீங்கள் தந்துவீடதீர்கல் மாற்றம் உங்களிLமும் வேண்டும் பழைய அட்சி காலத்தின் நன்மைகள் தொடரட்டும் புதிய அட்சியின் புதுமைகள் மலரட்டும்
Rate this:
Share this comment
Cancel
Hajee Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-201121:51:30 IST Report Abuse
Hajee Mohamed மோனோ ரயில் துபாயில் கூட 10 கிலோ மீட்டருக்கு மேல் இல்லை. மெட்ரோ ரயில்தான் உள்ளது.எனவே தேவை இல்லாமல் மக்கள் பணத்தை வீணாக்கி அரசியல் வாழ்க்கையை தொலைத்து விடாதிர்கள்.மக்கள் மிகவும் புத்திசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel
TV Sundar - banagalore,இந்தியா
05-ஜூன்-201121:10:57 IST Report Abuse
TV Sundar மோனோ ப்ராஜெக்ட் -க்கு எந்த ஒரு நிதி நிறுவனமும் பணம் அளிக்காது என்று நம்புகிறேன். மோனோ எந்த விதத்திலும் மெட்ரோ -வை விட சிறந்தது அல்ல. பாவம் சென்னைவாசிகள். முன்னேற்றம் இல்லாமல் பின்னோக்கி போகிறார்கள். எந்த ஒரு வல்லுனரும்/அதிகாரியும் வாயை திறந்து இது தவறு என்று JJ -விற்கு சொல்ல மாட்டார்களே? அப்புறம்... இந்தியாவில் எங்குமே இல்லாத மோனோ -வை வைத்து சென்னையை அழகு படுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
05-ஜூன்-201121:09:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி எல்லோருமா திண்ணையிலே உக்காந்து போகாத ஊருக்கு வழி தேடுற மாதிரி இருக்கு இந்த வெட்டிப் பேச்சுக்கள்..!!! இன்னும் கொஞ்சம் விட்டா, ரிசர்வேஷன் ஆரம்பிச்சு, டிக்கட் கூட கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க !!! ஆஹா, நமக்கு எவ்வளவு சதவீதம் கிடைக்கும் அப்படீன்னு அவனவன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அம்மா காலடியிலே கோடியை கொட்டுறான்..!!! நீங்க இங்கே பேப்பரிலே ராக்கெட்டே விட்டுக்கிட்டு இருக்கீங்க !!! நல்ல தமாஷ்..!! இந்தியாவிலே, குறிப்பா தமிழ்நாட்டிலே, அதுவும் ஜெயலலிதா ஆட்சியிலே புதுசா இந்த மாதிரியான ஒரு உள்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்துறது எவ்வளவு சாத்தியம் என்று யாராவது யோசிச்சீங்களா? சாதாரண மோட்டார் வாகனத் தொழில் ஆரம்பிக்கவே அம்மா கேட்ட பங்கிலே அவனவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் அப்பிடீன்னுட்டு ஓடினாங்க !!! அம்மா எல்லாரும் நெனைச்சிக் கிட்டு இருக்கிற மாதிரி "சக்தி" அம்சம் கிடையாது..!!!! தாண்டவம் ஆடுற "சிவபெருமான்" அம்சம்...!!! அழிக்க மட்டும் தான் செய்ய வரும்...!!! இது அவங்க தப்பு இல்லை அது...!!! மீண்டும் முதலமைச்சர் ஆக்கின நம் போன்ற வாக்காளர்கள் செய்த தப்பு...!!!!
Rate this:
Share this comment
Cancel
உதயன் - Thoothukudi,இந்தியா
05-ஜூன்-201119:29:00 IST Report Abuse
உதயன் ஒரு மணி நேரத்தில், மோனோ ரயிலில் 10,000 பேர் பயணிக்கலாம்; மெட்ரோ ரயிலில் 30,000 பேர் பயணிக்கலாம். அம்மா புத்திசாலின்னு நினைச்சிகிட்டிருந்தவங்க முகத்திலே கரி பூசிட்டாங்க.. போக்குவரத்து நெரிசலை தீர்க்க அதிக பயணிகள் கொண்டு செல்லும் திட்டம் சிறந்ததா அல்லது குறைந்த பயணிகள் கொண்டு செல்லும் திட்டமா?. ஒன்றாம் வகுப்பு மாணவன் சொல்வான்..மோனோ ரயில் திட்டம் ஒன்றும் ஒரே ஆண்டில் செயல்பாட்டில் வரக்கூடியது அல்ல.. சரி சரி ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு தேவை தான்,.... நல்லா இருங்க சென்னைவாசிகளா..
Rate this:
Share this comment
TV Sundar - banagalore,இந்தியா
05-ஜூன்-201121:16:46 IST Report Abuse
TV Sundarஒரு மோனோ வில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் பயணிப்பார்கள் என தெரிய வில்லை. ஆனால் ஒரு மோனோ -வில் ஒரே சமயத்தில் 30 பேர் வரை நின்று கொண்டு பயணிக்கலாம். வேகம் சைக்கிள் வேகம்தான். பிரியாணி கேட்பவர்களுக்கு JJ பழைய சோறு போதும் என்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
jalapino - chennai,இந்தியா
05-ஜூன்-201119:23:38 IST Report Abuse
jalapino திமுக ஒழுங்கா பிளான் போட்டு அவங்க ஆட்சியில வேலைய முடிச்சிருந்தா இவ்வளவு பிரச்சன இருந்திருக்காது. எந்த கட்சியா இருந்தாலும், வேணுமுன்னே மக்கள் பணத்த வீனடிக்கிராங்க. எனக்கு தெரிஞ்சு சென்னைக்கு மெட்ரோ திட்டம் உருப்புடியான திட்டம் தான். அரசியல் ஆதாயத்துக்கு அத நிறுத்துறது சென்னை மக்களோட கடுப்பை சம்பாதிக்கும். எந்த வேலைய செஞ்சாலும் நல்ல யோசிச்சு செய்யணும், ஏன்னா மக்களும் ஓரளவு வளந்துட்டாங்க, இத பாத்து அத மரக்குற கொழந்த மாதிரி இப்போ இல்ல, கடைசி நேரத்துல எப்பிடி வேணாலும் முடிவ மாத்திக்குவாங்க, கருணாநிதிக்கு இது நல்லாவே தெரியும்; நேரடி அனுபவம் இல்லாம ஜெயலலிதாவும் அவர பாத்து தெரிஞ்சுக்குறது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
AGEE - chennai,இந்தியா
05-ஜூன்-201118:24:09 IST Report Abuse
AGEE தனக்கு வாக்களித்த சென்னை மக்களுக்கு JJ தரும் பரிசு மெட்ரோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு.வாழ்க அவர் தொண்டு.மக்களுக்கு இது தேவைதான் .
Rate this:
Share this comment
Cancel
Muthukumar - Riyadh,சவுதி அரேபியா
05-ஜூன்-201118:08:08 IST Report Abuse
Muthukumar By Architect Muthukumar - [Riyadh - SaudiArabia] மோனோ ரயில் ஒரு வழி தடம், ஆனால், மெட்ரோ ரயில் இரண்டு வழி தடம்... அதாவது உதாரணத்துக்கு வேளச்சேரி, சைதாபேட்டை - ஆழ்வார்பேட்டை - அடையார் - திருவான்மியூர் - வேளச்சேரி என்று வைத்துகொள்வோம்.. மோனோ ரயிலில், மேலே குறிப்பிட்ட படி தான் செல்ல முடியும், அதாவது, அடையாரில் இருந்து சைதாபேட்டை செல்லனும் என்றால், அடையார் - திருவான்மியூர் - வேளச்சேரி - சைதாபேட்டை என்று தான் செல்ல முடியும்.. அடையார் -ஆழ்வார்பேட்டை - சைதாபேட்டை என்று செல்ல முடியாது.. இதை "closed circuit " நெட்வொர்க் என்று சொல்லுவார்கள் .. இவர்கள் அறிவித்திருக்கும் படி 110 கிமி "Master Plan " எப்படி என்று தெரியவில்லை.. ஒரு வேலை முன்று அல்லது நான்கு "closed circuit " நெட்வொர்க்கை இணைத்து இருக்கலாம்.. ஒரு "closed circuit " நெட்வொர்க் 1hr பயணம் தான் தகுந்தது.. அதிக பச்ச இலக்கை 1hr அடையலாம். நமது குறிகிய சாலை மற்றும் அதிக வளைவுகள் கணக்கில் கொண்டால் 30 தில் இருந்து 40 கிமி வரை ஒரு "closed circuit " நெட்வொர்க்கை அமைக்கலாம் அது தான் நல்லதும் கூட மெட்ரோ பத்தி உங்களுக்கு தெரியும், இப்போது நடைமுறையில் இருக்கும் பறக்கும் ரயில் போலத்தான். பெருகி வரும் நகர நெருசளுக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில் இரண்டு திட்டங்களும் அவசியமே.. இருந்டிலும் நல்லது கேட்டது உண்டு. அம்மா அவர்கள், மெட்ரோ திட்டத்தை கட்டாயம் நிறுத்த மாட்டார், அதற்கான அறிவிப்பு வரும் முன் நாம் இப்படி கவலை கொண்டு கண்டிப்பது தேவை அற்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை