Who is that "Bad friendship"? | "கூடா நட்பு' கருத்து காங்கிரசை குறிப்பதா? அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"கூடா நட்பு' கருத்து காங்கிரசை குறிப்பதா? அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டி

Updated : ஜூன் 06, 2011 | Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் பிறந்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும், வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அன்று மாநிலம் முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அறிவாலயத்தில் கூடுவர். கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பர். தங்களால் முடிந்த பரிசுகளை வழங்கி மகிழ்வர். ஐந்து ஆண்டுகள், ஆட்சியிலிருந்த போது, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் வரிசையில் காத்திருந்து, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணி படுதோல்வியை சந்தித்ததும், தொண்டர்கள் சோர்வடைந்தனர். அவர்களை ஊக்குவிக்க, கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட, கட்சியினர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். பிறந்த நாளுக்கு முந்தைய தினம் இரவு, கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

"எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் நான் இல்லை. எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, என்னை சந்திக்க வேண்டும் என கட்சியினர் வற்புறுத்த வேண்டாம். வீட்டிற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாததற்காக, மன்னிக்க வேண்டும்' என, அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, பிறந்த நாள் அன்று யாரையும் சந்திக்கவில்லை. மகள் கனிமொழி ஜாமின் கிடைக்காமல், சிறையில் வாடிக்கொண்டிருக்கும் போது, தன் பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் கருணாநிதி இல்லை. எனவே, யாரையும் சந்திக்கவில்லை.

அன்று, அண்ணாதுரை நினைவிடத்திற்கு வந்த கருணாநிதியிடம், பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என, பத்திரிகையாளர்கள் கேட்டனர். "சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை மறந்து விடாமல் பணியாற்ற வேண்டும்' என்று பதிலளித்தார்.அவரது பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "கூடா நட்பு' என கருணாநிதி குறிப்பிட்டது யாரை, என்ற கேள்வி, அனைவரிடமும் எழுந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், மாஜி மத்திய அமைச்சர் ராஜா, மகள் கனிமொழி ஆகியோர் கைதாகி, ஜாமினில் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

மத்தியில் ஆட்சியில் உள்ள, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் வழக்கில் உதவி செய்யாமல் பாராமுகமாக உள்ளது. இவ்வழக்கில், மேலும் சில தி.மு.க., பிரமுகர்கள் கைது செய்யப்படுவர் என்று கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு, தி.மு.க.,விற்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்தது. விரும்பிய தொகுதிகளை மிரட்டி வாங்கியது. தேர்தலில் தி.மு.க., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால், காங்கிரஸ் கட்சி தங்களை உறவாடி கெடுக்கிறதோ என்ற எண்ணம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கருணாநிதி,"கூடா நட்பு' என மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டதாக, பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்ட, மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடனான நெருங்கிய நட்பு காரணமாகவே, கனிமொழியும் வழக்கில் சிக்க வேண்டியதாகி விட்டது. கலைஞர் "டிவி'க்கு பணம் அனுப்பிய நிறுவனங்களுடன் ஏற்பட்ட நட்பை பற்றித் தான், கருணாநிதி கூறியதாகவும் சிலர் கருதுகின்றனர்.ஆட்சியிலிருந்த போது, கருணாநிதியை சுற்றியிருந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே, ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட காரணம் என்ற கருத்தும் உள்ளது. எனவே, அதுபோன்ற நபர்களைப் பற்றித் தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தி.மு.க.,வினர் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய கருணாநிதி கூறிய ஒரு வார்த்தைக்கு, அரசியல் வட்டாரத்தில் பல விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவருக்கு நெருக்கமானவர்களும் அவர் யாரை குறிப்பிட்டார் என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Chennai,இந்தியா
06-ஜூன்-201100:16:40 IST Report Abuse
Kundalakesi ஹாய் முக்தர் திமுக வ யாராலையும் அழிக்க முடியாத . எலெக்சன் ரிசல்ட்க்கு அப்பறோம் அப்படி ஒரு கட்சி இருக்குதானே தெரியலையே
Rate this:
Share this comment
Cancel
vijaya sriram - TRICHY,இந்தியா
05-ஜூன்-201122:13:08 IST Report Abuse
vijaya sriram திருக்குவளை தீயசக்தி இனி எடுபடாது
Rate this:
Share this comment
Cancel
Ramesh Src - Salem,இந்தியா
05-ஜூன்-201121:36:35 IST Report Abuse
Ramesh Src என்ன பேசறதுன்னு தெரியாம pesaraaru விடுங்கப்பா...........
Rate this:
Share this comment
Cancel
BALU - HOSUR,இந்தியா
05-ஜூன்-201121:02:25 IST Report Abuse
BALU தி மு க- வை கலைஞர் குடும்பத்தை தவிர வேறு யாராலும் அழிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
rajan - chennai,இந்தியா
05-ஜூன்-201119:44:57 IST Report Abuse
rajan காங்கிரஸ் அதன் பாரம்பரியத்தை திமுக்கவுடன் கூட்டு வைத்தன்மூலம் எல்லாவர்ட்டையும் அழித்து விட்டது. இனியாவது தோற்றாலும் பரவாயிள்ளஎன்று தனித்து நிர்ப்பது நாட்டுக்கும் கட்ச்சிக்கும் நல்லது. திமுகா போன்ற கட்ச்சிகளை அறவே புறக்கணிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Anand - Erode,இந்தியா
05-ஜூன்-201118:45:16 IST Report Abuse
Anand தெளிவா புரிந்துள்ளார் தாதா.....
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
05-ஜூன்-201117:09:20 IST Report Abuse
sitaramenv பூணூல் என்று புலம்ப ஆரம்பித்தாய்......ஆரியர்..என்று ஒப்பாரி வைத்தாய்.....தமிழ் தமிழ் என்ற போர்வையில் சகல திருட்டுத்தனங்களையும் செய்தாய்...... தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ் பழமொழியை மறந்துவிட்டாயே .....
Rate this:
Share this comment
mukhtar - london,யுனைடெட் கிங்டம்
05-ஜூன்-201119:14:23 IST Report Abuse
mukhtarதிமுகவா யாரால்லும் அள்ளிக முடியாது...
Rate this:
Share this comment
RAVI.A. - SALEM,இந்தியா
05-ஜூன்-201120:51:51 IST Report Abuse
RAVI.A."தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது" ஆமாம், அவர்களால் மட்டுமே முடியும்....
Rate this:
Share this comment
mugavai mainthan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-201110:36:51 IST Report Abuse
mugavai mainthanஆமாம் மற்றவர்களால் அழிக்க முடியாது... அவங்களாலேயே, அவங்க ஆட்களாலே அழிக்கப் படும்.....
Rate this:
Share this comment
Cancel
Radhakrishnan.A. - Perth,ஆஸ்திரேலியா
05-ஜூன்-201117:03:19 IST Report Abuse
Radhakrishnan.A. Dear Sekar Sekaran, I have been reading your comments regularly. They are simply superbs. Please keep it up. Thanks. Radhakrishnan.A. Australia.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-ஜூன்-201115:26:21 IST Report Abuse
villupuram jeevithan ராசா வாய திறக்க போகிறாராமே?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-ஜூன்-201115:09:52 IST Report Abuse
villupuram jeevithan மன குழப்பத்தில் இருப்பவர்களின் கூற்றுக்கு அர்த்தம் பார்க்காதீர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை