.lathicharging sleeping people is absolutely unethical;Kiran Bedi | ஜனநாயக உரிமைக்கு மறுப்பு ; நெருக்கடி நிலையா ? அத்வானி கண்டனம்: மாலையில் அமைதி போராட்டம்| Dinamalar

ஜனநாயக உரிமைக்கு மறுப்பு ; நெருக்கடி நிலையா ? அத்வானி கண்டனம்: மாலையில் அமைதி போராட்டம்

Updated : ஜூன் 05, 2011 | Added : ஜூன் 05, 2011 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவர் மீதும், இவரது ஆதரவாளர்கள் மீதும் போலீ்சார் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்‌கப்பட்டுள்ளது. மேலும் அமைதிப்பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யோகா மற்றும் பஜனைபாடல்களுடன் ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். பெருகி வரும் ஆதரவு காரணமாக அசாதாரண சூழல் ஏற்படும் என அறிந்த மத்திய அரசு நேற்று நள்ளிரவில் போலீசார் ஆயிரக்கணக்கில் ராம்லீலா மைதானத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். தொடர்ந்து யோகாகுருவை அப்புறப்படுத்தினர். இந்நேரத்தில் ஏற்பட்ட மோதலில் போலீசார் மற்றும் போராட்டக்ககாரர்கள் பலர் காயமுற்றனர். கண்ணீர்புகை குண்டுவீச்சு, தடியடியுடன் முடிந்தது.

‌‌நெருக்கடியை நினைவுபடுத்துகிறது: இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசார் நடந்து கொண்ட விதம் ஒரு நெருக்கடியை நினைவுப்படுத்தியதாக லோக்பால் மசோதாவில் உறுப்பினராக உள்ள சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில். சாதாரண குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது என்றார். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.,எஸ்., அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இன்று இரவில் சத்தியாகிரக போராட்டம் துவங்குகிறது: இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இந்த சம்பவத்திற்கு மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இன்று லக்னோவில் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி, அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கூறுகையில்., கறுப்பு பணவிவகாரம் குறித்து பா.ஜ., நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. யோகாகுரு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கண்டனத்திற்குரியது,. அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் நெருக்கடியை நினைவுபடுத்துவதாக உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். நாடு தழுவிய அமைதி பேரணி நடத்தப்படும். டில்லி ராஜகாட்டில் உள்ள காந்திசமாதி முன்பு இரவு 7 மணி முதல் தர்ணா போராட்டம் துவங்குகிறது. இந்த அறப்போராட்டத்தில் பா.ஜ., முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜயசிங், ராம்தேவ் போராட்டம் தேவையற்றது என்றும் அவருக்கு யோகா நடத்துவதற்கான அனுமதிதான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் போராட்டமாக மாற்றிக்கொண்டார். இது கண்டனத்திற்குரியது என்றார்.

மேதா பட்கர் - கிரண்பேடி கண்டனம்: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி கூறுகையில்; மைதானத்தில் பலரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் போலீசார் புகுந்து எடுத்த நடவடிக்கை முற்றிலும் தவறானது. பாபா யாரையும் வன்முறைக்கு தூண்டவில்லை. குறைந்தபட்சம் காலை வரையாவது போலீஸ் பொறுத்திருக்கலாம். இது கண்டனத்திற்குரியது என்றார்.


சமூக ஆவர்லர் மேதா பட்கர் தனது கருத்தில் ., போலீசார் எடுத்த நடவடிக்கை மனிததன்மையற்ற காட்டுமிராண்டித்தனம். அறப்போராட்டம் நடத்துவோரை எப்படி கையாள வேண்டும் என்று கூட இந்த அரசுக்கு தெரியாமல் போனதுதான் வேதனை. இதில் இருந்து தெரிவது என்னவெனில் அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை அலட்சியம் செய்கிறது என்பது தான் இவ்வாறு பட்கர் கூறியுள்ளார்.


பாபா ராம்தேவ் எங்கே., ? : நேற்று இரவில் அப்புறப்படுத்தப்பட்டு அழைத்து செல்லப்பட்ட யோகா குருராம்தேவ் எங்கே இருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இவர் டில்லியில் இருந்தால் மேலும் சிக்கல்கள் வலுக்கும் என்ற காரணத்திற்காக போலீசார் அவரை ஹெலிகாப்டர் மூலம் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஹரித்துவாரில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.அரசியல் ஆசனம் கற்றுக்கொடுக்க கூடாது : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் அளித்துள்ள பேட்டியில் , அரசின் நடவடிக்கை சரியானதுதான். இது அனைவருக்கும் பாடமாக அமையும். யோகாகுரு யோகாசனம் கற்றுக்கொடுக்காமல் அரசியல் ஆசனம் கற்றுக்கொடுக்க முயல்கிறார் என்றார்.

அன்னாஹசாரே அளித்துள்ள பேட்டியில் ,. அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தை தகர்ந்து எறிந்திருக்கிறது மத்திய அரசு. இது ஜாலியான்வாலபாக் படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்து போல் உள்ளது என்றார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இது ஐக்கிய முற்போக்கு அரசின் முடிவு துவங்கியிருப்பதை காட்டுகிறது என வர்ணித்துள்ளார்.

அத்வானி சென்னையில் சிறப்பு பேட்டி: இது குறித்து மூத்த பா.ஜ., தலைவர் அத்வானி சென்னையில் சிறப்பு பேட்டி அளித்தார். கூறுகையில்., ராம்தேவ் மீது எடுத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 1975 ம் ஆண்டின் நெருக்கடி நிலையை போல் உள்ளது. கறுப்பு பண விவகாரம் தொடர்பாக ஒழிக்க பா.ஜ., கடும்முயற்சி மேற்கொண்டுள்ளது. கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது மத்திய அரசின் கடமை . சமீபத்திய ஊழல் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை பா.ஜ., ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த்கேம்ஸ் ஊழல் ஆகியவற்றில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியதால்தான் உத்தரவிடப்பட்டது. ராம்தேவ் மீதான நடவடிக்கையை கண்டித்து இன்று டில்லி காந்திசமாதியில் தர்ணா போராட்டம் நடக்கிறது. இதில் நான் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அரசு அந்த அளவிற்கு அடக்குமுறையை கையிலெடுத்துள்ளது. ராம்தேவ் மீதான இந்த நடவடிக்கைக்கு பிரதமர், மற்றும் சோனியா நாட்டுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இதனை பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்க கூடாது, செயல்பட வேண்டும். அவசரமாக பார்லி., கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்கப்பட வேண்டும் இவ்வாறு அத்வானி கூறினார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthirapathy.G - singapore,சிங்கப்பூர்
06-ஜூன்-201107:08:12 IST Report Abuse
uthirapathy.G கொள்ளை அடிச்சவன் சொகுசா இருக்கான் பாதுகாபோட,அப்பாவிங்க மக்கள் அகிம்சை வழில போராடுனா தடியால அடிக்கிறாங்க இதுவா ஜனநாயகம்? இதுகா நாங்க ஓட்டு போட்டோம்
Rate this:
Share this comment
Cancel
guna DVR - chennai,இந்தியா
05-ஜூன்-201120:17:43 IST Report Abuse
guna DVR காங்கிரஸ் கட்சிக்கு அழிவு காலம்
Rate this:
Share this comment
Cancel
இராசாராமன் வெங்கடராமன் - ஹைதராபாத்,இந்தியா
05-ஜூன்-201119:41:18 IST Report Abuse
இராசாராமன் வெங்கடராமன் விநாச காலே விபரீத புத்தி
Rate this:
Share this comment
Cancel
Sikandar - GEorge town,யூ.எஸ்.ஏ
05-ஜூன்-201119:40:48 IST Report Abuse
Sikandar இந்த அடக்கு முறை மக்களுக்கு சாதகமானதே, இப்படி அரசு செயல் பட்டாள் தான் எமேர்கேன்சி வரும், ஜனாதிபதி அட்சி வரும். அப்ப தான் அரசியல் வாதி, அதிகரி எல்லோரையும் தண்டிக்க முடியும். எனவே இது முதல் சச்செச்ஸ், தொடர்ந்து போராடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
shiva - COIMBATORE,இந்தியா
05-ஜூன்-201119:25:49 IST Report Abuse
shiva நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரி கட்டினால் அதை அவர்களே பதுக்கி வைத்து நம் makkalai எஅமற்றுகிரர்கள் எங்கள partha yepdi தெறித்து நீங்க எல்லாம் அறிவாளி நாங்க எல்லாம் ? bledy f****
Rate this:
Share this comment
Cancel
Nimesh Reghu - chennai,இந்தியா
05-ஜூன்-201119:06:49 IST Report Abuse
Nimesh Reghu எமெர்ஜென்சி என்று இந்திரா செய்த தவறை இன்று சோனியா செய்கிறார் .பாவம் இந்திரா காந்தி மேடம் .. ஹலோ சோனியா ஜி .. உங்களுக்கும் .....சங்கு தான்...
Rate this:
Share this comment
Cancel
rajkumar - chennai,இந்தியா
05-ஜூன்-201119:02:05 IST Report Abuse
rajkumar காங்கிரஸ் வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
Ak Gopal - chennai,இந்தியா
05-ஜூன்-201118:37:54 IST Report Abuse
Ak Gopal காங்கிரசின் முடிவு ஆரம்பித்து விட்டது .. bye bye ..
Rate this:
Share this comment
Cancel
muruga - covai,இந்தியா
05-ஜூன்-201118:28:47 IST Report Abuse
muruga காங்கிரசை ஆட்சியை கலைத்து விட்டு மாற்று அரசு உடனடியாக தேவை, ஜனநாயக உரிமை இல்லைய மக்களுக்கு ஊழலை ஆதரிக்கும் கட்சி இந்தியாவிற்கு தேவை இல்லை, மக்களின் வரி பணத்தை ஏமாற்றி தங்களின் சுய தேவைக்கு பயன்படுத்துவதை கேட்டால் கைது செய்வீர்களா அராஜக ஆட்சி நடதுகிரீர்களா?
Rate this:
Share this comment
Cancel
madhan kumar - yanbu,சவுதி அரேபியா
05-ஜூன்-201118:06:22 IST Report Abuse
madhan kumar மத்திய அரசு தன்னுடைய பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. பாபா அவர்கள் போரட்டத்திற்கு என் காங்கிரஸ் செவி சாய்க்க வில்லை என்றால் அங்கு உள்ள மொத்த பணமும் காங்கிரசுக்கு சொந்தம் அதனால் தான் அவர்களுக்கு இதில் சம்மதம் இல்லை. ஏனென்றால் அவர்கள் தான் இன் நாட்டை அதிகமாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய பணம் தான் நிறைய இருக்கும். நாட்டில் நடந்த மிக பெரிய ஊழல்கள் எல்லாம் காரணம் காங்கிரஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை