Youth Federation to end corruption : Abdul kalam | லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்

Updated : ஜூன் 08, 2011 | Added : ஜூன் 06, 2011 | கருத்துகள் (96)
Advertisement
Youth Federation to end corruption : Abdul kalam,லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' :  அப்துல் கலாம்

விழுப்புரம் : நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.


இது, மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தக் கூடிய திட்டம். அறிவியல் தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்க, அறிவியல் கண்காட்சி அமைத்திருப்பது சிறப்பு. இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை கண்டெடுத்து அவர்களது திறனை வெளிக்கொணர்வது, இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கும்.உங்கள் முயற்சி, ஒரு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்து, தமிழகத்தை ஒரு வளமான நாடாக்கும் திட்டத்தில் முதல் மாவட்டமாக செயல்பட்டு திருப்புமுனையை ஏற்படுத்தும்.


மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.


அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.


நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.


ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandha krishnan - chennai,இந்தியா
17-ஜூன்-201112:22:37 IST Report Abuse
anandha krishnan we have to stop corruption from our own house. if our dad or mom get bribe and spending for us we have to sak them. if person is held for corruption, there should be law to cancel the studies which was done by their kids, basically all are doing corruption for their familys, so family person also resposible for that.
Rate this:
Share this comment
Cancel
GParthiban - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201120:47:41 IST Report Abuse
GParthiban மக்கள் தான் ஓட்டளித்து சட்டசபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் உறுபினர்களை அனுப்பி வைகின்றனர், அவ்வாறு செல்லும் உறுப்பினர்கள் மக்களை அறவே மறந்து விட்டு லஞ்சம் ஊழல் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். அதனால் எவ்வாறு மக்களுக்கு சட்டசபை,நாடாளுமன்றங்களுக்கு உறுப்பினர்களை அனுப்பும் உரிமை உள்ளதோ அதேபோல் அவர்களை திரும்பபெறும் உரிமையும் வழங்கப்படவேண்டும் அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பயம் வரும்.இதை சட்டமாக கொண்டுவரவேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
Gayathri - coimbatore,இந்தியா
15-ஜூன்-201110:08:40 IST Report Abuse
Gayathri சார், தமிழக மக்களை சாராயத்தின் பிடியிலிருந்தும் சினிமாக்காரன் பிடியிலிருந்தும் முதலில் விடுவியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Christopher Alexander - chennai,இந்தியா
13-ஜூன்-201110:08:51 IST Report Abuse
Christopher Alexander need to bring our money back.
Rate this:
Share this comment
Cancel
Christopher Alexander - chennai,இந்தியா
13-ஜூன்-201110:06:47 IST Report Abuse
Christopher Alexander If leaders like Sir.Kalam is ready to clean the politic by engaging themself into it, then India is behind them. not only youth, all the indian need to fight for the 2nd freedom.
Rate this:
Share this comment
Cancel
கிரி அனகை. சென்னை. - Chennai,இந்தியா
13-ஜூன்-201107:46:46 IST Report Abuse
கிரி அனகை. சென்னை. சட்டம் இயற்றும் அதிகாரத்தை, பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு மட்டுமே அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. வெளியிலிருந்து ஐந்தாயிரம் பேரோ அல்லது ஆறாயிரம் பேரோ உத்தரவிட்டால், அதற்கு பார்லிமென்ட் கட்டுப்பட முடியுமா........கண்டிப்பாக முடியாது.............ஏற்கனவே மக்கள் கொதித்து போயுள்ளார்கள். இவர்கள் செய்யும் இப்போராட்டம் காங்கிரஸின் அழிவுக்கு தான் வழி செய்யும்... காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டும் முடிவில் நீங்களும் சோனியா சிதம்பரம் கபில்சிபல் திக்விஜயசிங் இருக்கும்போது ஐந்தாயிரம் பேரோ அல்லது ஆறாயிரம் பேரோ என்ன செய்துவிட முடியும். ஊழல் வேண்டும், என போராட்டம் நடத்தட்டும் அப்போ தான் காந்தி கண்ட கனவு நிஜமாகும்.ஊழலைப் பற்றி கருப்பு பணத்தை பற்றி பேச யாரும் வந்தால் அவர்களை களங்க படுத்துவது தான் இந்த ஊழல் காங்கிரஸ் கட்சியின் வே‌லை.
Rate this:
Share this comment
Cancel
Shankar M - chennai ,இந்தியா
12-ஜூன்-201120:27:52 IST Report Abuse
Shankar M நல்லவர் பின்னால் மக்கள் செல்லும் காலம் வந்துவிட்டது. இனி நல்லதே நடக்கும் என நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
vels - newyork,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201120:05:35 IST Report Abuse
vels வணக்கம் . இதோ என்னோட கருத்தையும் பாருங்க * ஜாதி சான்றிதல் , பிறப்பு சான்றிதல் , வெளியூர் செல்ல - s.e.t.c டிக்கெட்டுக்கு லஞ்சம் , register ஆபிசில் லஞ்சம் , காவல் நிலையத்தில் passport clearance பெற லஞ்சம் , பள்ளி & கல்லுரி இடம் வாங்க லஞ்சம் இதுல முதல் குற்றவாளி நாம் தானுங்க ... அப்புறம்தான் வி எ ஒ , ஆர் ஐ , தாசில்தார் , கண்டக்டர் , சார் பதிவாளர் , பியூன் , போலீஸ் , ......
Rate this:
Share this comment
Ajaykrishnaa - chenai,இந்தியா
13-ஜூன்-201114:43:56 IST Report Abuse
Ajaykrishnaaநல்ல கருத்து இது....
Rate this:
Share this comment
Cancel
sagotharan - Clermont Ferrand,பிரான்ஸ்
12-ஜூன்-201103:25:43 IST Report Abuse
sagotharan இளைஞர் கள் மட்டுமல்ல ஒவ்வொரு அரசியல்வாதியும் வருடத்தில் ஒரு வாரம் ஆவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும். அதாவது நிலத்தில் விழுதோ, நடவு செய்தோ இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற பட வேண்டும். இது படித்த இளைஞர்களுக்கும் பொருந்தும். வருடத்தில் ஒரு வாரமாவது உங்களுடைய படிப்பை மறந்து சராசரி படிக்காத மனிதனாக ஒரு ஏழை விவசயிடம் இலவசமாக ஒரு வாரம் வேலை செய்யுங்கள் . இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்யத்தை தரும்
Rate this:
Share this comment
Cancel
Ramki Ram - madurai,இந்தியா
10-ஜூன்-201116:33:22 IST Report Abuse
Ramki Ram முறையாக RTI பயன்படுத்தினாலே லஞ்சம் கட்டுப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை