IG Thachankary terror links: Probe sought | பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு | Dinamalar

பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
IG,Thachankary,terror,links,Probe,sought,கத்தாரில் பயங்கரவாதிகள்,சந்தித்தாரா,கேரள,ஐ. ஜி.,மத்திய,அரசு,அறிக்கை, கேட்கிறது ,

புதுடில்லி: கேரள போலீஸ் உயர் பொறுப்பில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி., ஒருவர் கத்தாரில் பயங்கரவாதிகளை சந்தித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. எதுவாக இருப்பினும் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரள மாநில கன்னனூர் ஐ.ஜி.,யாக பணியாற்றியவர் தாமின் தக்கன்கரே இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்.

 

இந்நிலையில் இவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது. இவர் கத்தாரில் சில பயங்கரவாதிகளுடன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.ஜி., விவகாரம் தொடர்பாக , நிருபர்கள் முதல்வர் அச்சுதானந்தனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் மத்திய அரசு என்ன கேட்கிறதோ அதனை மாநில அரசு செய்து கொடுக்கும். தலைமை செயலர் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றார்.

உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டதற்கு கடிதத்தில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் விவரமாக இதனை சொல்ல முடியாது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்றார்.

ஐ.ஜி.,தக்கன்கரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மீண்டும் ஐகோர்ட் உத்தரவுப்படி பணியில் சேர்ந்தார் . இருப்பினும் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடந்திருக்குமா என்ற கோணத்தில் ஏ.டிஜி.பி., சிபிமாத்யூ தலைமையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-201015:59:13 IST Report Abuse
 ஜி.பன்னாடை பாண்டியன் "உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டதற்கு கடிதத்தில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் விவரமாக இதனை சொல்ல முடியாது" - இப்பவே இந்த ஆளை காப்பாற்ற ஆரம்பிச்சுட்டாங்க.....இனி டெல்லியில இருக்கும் சேட்டன்களும் பெரிய சேச்சியும் பாத்துக்கும், கவலை படாதீங்க. நாடு எப்படி எல்லாம் சீரழியுதுங்க்ரதுக்கு இதுவும் ஒரு உதாரணம். வாசகர்களே உங்களுக்கு ஞாபகம் இருக்கா ....சென்னை கடவு சீட்டு அலுவலகத்தில் ஒரு அம்மையார் .... அதுதான் சுமதி (என் சுந்தரி) ன்னு இருந்தாங்களே ! அவுங்க செஞ்ச ஊழல் எல்லாம் அடிக்கிற வெய்யில்ல ஐஸ் கிரீம் மாதிரி உருகி போச்சு. இதுவும் அப்படிதான்.
Rate this:
Share this comment
Cancel
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
24-ஜூன்-201015:14:38 IST Report Abuse
 இபு பாரிஸ் ஒரு ஐஜி அரசாங்கத்துக்கு தெரியாமல் வெளிநாடு செல்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ இருக்கிறது!!!தும்பை விட்டு வாலை பிடிக்கும் கததைதான்.நல்லவேளை இவர் முஸ்லிம் இல்லை!!
Rate this:
Share this comment
Cancel
snakebabu - singapore,இந்தியா
24-ஜூன்-201015:11:08 IST Report Abuse
 snakebabu மந்திரிய தீவிரவாதி வந்து பாக்கறான். போலீஸ்காரன் போயி பார்க்கிறான். இதல்லாம் இந்தியாவில் சாதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
சுப்பு - Lagos,நைஜீரியா
24-ஜூன்-201014:33:36 IST Report Abuse
 சுப்பு ஆஹா... என்னே ... அரசாங்கம்.... ஆஹா... உளவுத்துறையின் பணிகளை எப்படி பாராட்டுவது...? இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் செயல் படும் விதம் மக்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. "பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் , தர்ம சம்ச்ச்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே.. " சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பனமஸ்து....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.