மதுரை: ஈரானைச் சேர்ந்த பெண் டாக்டருக்கும், கமுதி டாக்டருக்கும், மதுரையில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் டாக்டர் சரவணக்குமார் அமெரிக்காவில் பணிபுரிகிறார். இவரும், ஈரானைச் சேர்ந்த கரீம், பெரி தம்பதிகளின் மகள் டாக்டர் சாராவும் காதலர்கள். முஸ்லிம் பெண்ணான சாரா, இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால், இந்து முறைப்படி, காதலரை திருமணம் செய்ய விரும்பினார். முறைப்படி இந்துவாக மாறிய சாராவுக்கும், சரவணக்குமாருக்கும் மதுரையில் அர்ச்சகர் மந்திரம் ஓத, மேளதாளங்கள் முழங்க நேற்று திருமணம் நடந்தது.