வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள் | வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள்

Added : ஜூன் 25, 2011 | கருத்துகள் (4)
Advertisement
வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள்

ராமநாதபுரம்: தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.


ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, இவர் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாரிச்செல்வம், அக்கா முருகவள்ளி வீட்டில் தங்கி இருந்து முத்துப்பேட்டையில் படித்து வந்தார். கடந்த நவம்பரில் முனியசாமி மூளைகட்டி நோயால் இறந்தார். கடந்த ஏப்.,4 ல் முருகவள்ளியும் இறந்தார். அடுத்தநாள் கணக்கு பரீட்சை. இதயம் முழுக்க சோகத்துடன், ஆனால் மனஉறுதியுடன், வேறுவழி இல்லாமல் தேர்வு எழுதிவிட்டு, அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அந்த கணித தேர்வில் மாரிச்செல்வம் பெற்ற மதிப்பெண் 100 க்கு 100.


தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இவர் கூறியதாவது: எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தபோது, இருதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த குழாய் சுருங்கியுள்ளது. தற்போது ஆப்பரேஷன் செய்ய முடியாது. 22 வயதுக்கு பிறகு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார். அம்மாவோ அடிக்கடி கால்வலியால் அவதிப்படுகிறார். குறித்த நேரத்தில் பஸ் இல்லாததால், வேலாயுதபுரத்திலிருந்து பள்ளிக்கு ஆம்னி வேனில் செல்ல மாதம் 400 ரூபாய் செலவாகிறது. அதை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். தற்போது சீருடைக்கு 3,000 ரூபாய் செலவாகியுள்ளது. என்னுடைய அக்கா யாரும் படிக்கவில்லை. எனவே, நான் நன்றாக படித்து அவர்களுக்கு உதவுவேன். படிப்பு செலவிற்கு பணமின்றி தவிக்கிறேன், என்றார். உதவி செய்ய விரும்புவோர் 91592 43229ல் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashta - chennai,இந்தியா
02-ஜூலை-201115:25:13 IST Report Abuse
Ashta இம்மாணவனுக்கு உதவும் இவர்களை போல் உள்ள நல்லுள்ளங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
excuseme - Edison,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201107:20:12 IST Report Abuse
excuseme I called up this mobile and this number belongs to his Brother-in-law. I asked him to open an account in a nationalized bank and provide the details. Someone already agreed to take care of his uniform expenses. He said Dr.Kuppusamy of coimbatore diagonised him. I do not know much about coimbatore and this doctor. His brother in law said, he often gets headache. I am ready to help financially for this guy. We need to help with his health issue. (Do be bother with my username)
Rate this:
Share this comment
Cancel
Subramanian - Huizhou,சீனா
25-ஜூன்-201105:11:10 IST Report Abuse
Subramanian வாசக நண்பர்கள் எல்லோரும் தங்களால் இயன்ற உதவியினை செய்ய வேண்டுகின்றேன். செல்வன் மாரிச்செல்வன் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலை அமைந்து, நல்ல உடல் நலம், மன வளம், நீண்ட ஆயுள், நிறை செல்வன் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். செல்வன் மாரிசெல்வனுக்கு உதவுவதில் நானும் பங்கு கொள்கின்றேன்
Rate this:
Share this comment
samson - Dammam,சவுதி அரேபியா
25-ஜூன்-201117:11:33 IST Report Abuse
samsonநான் இப்போதுதான் மேலே குரிபிட்டு இருந்த செல் நம்பரில் 00919159243229கூப்பிட்டு நானும் உதவி செய்வதாக கூறினேன். அன்புள்ளம் படைத்தவர்களே மாணவன் மாரிசெல்வனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவன் வாழ்க்கையில் விளக்கேற்றி வையுங்கள். அவனுடைய தலைவலி குணமடைய ஆண்டவனிடம் பிரார்தனை செய்வோம். அவன் இந்த உலகத்தில் நன்றாக படித்து பெரிய டாக்டராகவோ, இஞ்சினியராகவோ, வக்கீலாகவோ வருவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை Mமாரிசெல்வம், Mசண்முகம், அக்கௌன்ட் நம்பர் 963914907 இந்தியன் பேங்க், பெரியபட்டினம் பிரான்ச் என்ற முகவரிக்கு அனுப்பவும். இப்படிக்கு அன்புள்ள வாசகர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை