ம.பொ.சி., பிறந்த நாள் விழா | ம.பொ.சி., பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ம.பொ.சி., பிறந்த நாள் விழா

Added : ஜூன் 28, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தமிழறிஞர் ம.பொ.சி., பிறந்த நாள் விழா, மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவில், ம.பொ.சி.,யின் மகள் மாதவி பாஸ்கரன் எழுதிய, "அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி.,' என்ற நூலை, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி வெளியிட்டார்.


மாநில தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசியதாவது: ம.பொ.சி., மிகுந்த தமிழ் பற்றாளர். அவர் உயிருடன் இருந்திருந்தால், தமிழகத்தின் பல பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் இருந்திருக்கும். நாட்டு மக்களின் நிலை அறிந்து தேசிய விடுதலைக்கு வித்திட்டவர். மேலும், கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டு, கலைஞர்களை ஊக்குவிப்பவர். ம,பொ.சி., அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், வக்கீல் மாரியப்பன் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை