பல்லடம்: பள்ளி மாணவ, மாணவியரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்த பா.ம.க.,வினரை, பல்லடம் போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியரை அவசரம், அவசரமாக பள்ளிக்கு வேன், காரில் ஏற்றிச் சென்றனர்.
"சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகம் வசூலிப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ம.க., வினர் அறிவித்திருந்தனர். நேற்று காலை 9.30 மணிக்கே போலீசார் தாலுகா அலுவலகம் முன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10.05 மணிக்கு பல்லடம் நகர பா.ம.க., செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் புரு÷ஷாத்தமன் உட்பட 30 பேர் கட்சிக் கொடிகளுடன், தாலுகா அலுவலகம் முன் திரண்டனர். அப்போது, ஒரு வேனில் இருந்த பள்ளி மாணவ, மாணவியர் சிலரை இறக்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தனர். இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பா.ம.க., வினரை அழைத்த இன்ஸ்பெக்டர், "யாரைக்கேட்டு பள்ளிக் குழந்தைகளை ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள். குழந்தைகளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தது அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியுமா? அவர்களின் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியுமா? இது தவறான நடைமுறை. உடனடியாக, பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புங்கள்,' என எச்சரித்தார். இதைத்தொடர்ந்து ஒரு வேனிலும், காரிலும் மாணவ, மாணவியர் அவசரம், அவசரமாக ஏற்றப்பட்டு, அவர்கள் படிக்கும் பல்லடம் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்பே பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க., மாநில துணை பொது செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
போலீஸ் விசாரணையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பல்லடம் நாசுவம்பாளையத்தில் செயல்படும் ஜீவன் கருணை இல்லத்தைச் சேர்ந்த 44 பேர். இவர்களை, வேனில் பல்லடம் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளிக்கு தாலுகா அலுவலக மெயின் ரோடு வழியாக காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லும் போது, தாலுகா அலுவலகம் முன் நின்றிருந்த பா.ம.க.,வினர் சிலர் வேனை வழிமறித்துள்ளனர். வேன் டிரைவரிடம், நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சில நிமிடங்கள் மாணவர்கள் பங்கேற்றால் போதும் எனக்கூறி தாலுகா அலுவலகம் எதிர்புறம் உள்ள இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். பா.ம.க.,வினரின் இச்செயலை, டி.இ.எல்.சி., பள்ளி ஆசிரியைகள் நேரில் வந்து கண்டித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
போலீஸ் செய்தது மிகத் தவறு ! வலுவில் வந்த அருமையான சந்தர்ப்பம் ! கோட்டை விட்டு விட்டனர் ! பள்ளிக் குழந்தைகளை நைசாக, பத்திரமாக ஓரங்கட்டி விட்டு, இந்த விளங்காத பயலுகளை டின்னு கட்டியிருக்கணும் , லத்தியால ! அப்புறம் இனி ஜென்மத்துக்கும், போராட்டம் நடத்துவானா ? நடத்தினாலும், கட்சியிலேருந்து எவனாவது வருவானா ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.