வெளிநாட்டிற்கு செல்லும் ஆத்தங்குடி "டைல்ஸ்' மூன்று தலைமுறை தயாரிப்பிலும் "மவுசு' | வெளிநாட்டிற்கு செல்லும் ஆத்தங்குடி "டைல்ஸ்' மூன்று தலைமுறை தயாரிப்பிலும் "மவுசு'| Dinamalar

தமிழ்நாடு

வெளிநாட்டிற்கு செல்லும் ஆத்தங்குடி "டைல்ஸ்' மூன்று தலைமுறை தயாரிப்பிலும் "மவுசு'

Added : ஜூலை 01, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காரைக்குடி :காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் தயாராகும் பூக்கல் "டைல்ஸ்' சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக பூக்கல் (டைல்ஸ்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 8க்கு 8, 10க்கு 10 என மூன்று அளவில் பலவித "டிசைன்களில்' தயாராகும் பூக்கல் மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. தவிர, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இக்கல்லின் மகத்துவம் உணர்ந்து பூக்கல்லை வாங்கி செல்கின்றனர். தற்போது, கோடை முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் இந்த கல்லிற்கு மவுசு சற்று அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் தற்போது வீடுகட்டும் சாதாரண மக்களால் "டைல்ஸ்' கற்களை வாங்கி பதிப்பது என்பது இயலாத காரியம். இதனால், குறைந்த விலையில் நீண்ட உழைப்பு தரக்கூடிய ஆத்தங்குடி பூக்கல்லை வாங்கிச் செல்கின்றனர்.


* சண்முகா பிளவர் "டைல்ஸ்' மில் உரிமையாளர் ஏ.பெத்துராஜ் (28) கூறுகையில், "" ஆத்தங்குடியில் மூன்று தலைமுறையாக பூக்கல் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள வாரிமண் இக்கல் தயாரிப்பில் முக்கிய அம்சமாக உள்ளது. 4,000 "டிசைன்களில்' கல் தயாரித்து வருகிறோம். செட்டிநாட்டு நகரத்தார்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையில் வசிக்கின்றனர். "வெப்சைட்' மூலம் "டிசைன்' செய்து அனுப்பப்படும் பூக்கல்லை தயாரித்து கப்பல் மூலம் அனுப்புகிறோம். நீண்ட உழைப்பு, எளிதில் சாயம் போகாமல் இருப்பது, மிதமான குளிர்ச்சி போன்றவை இக்கல்லின் சிறப்பியல்பு. ஆர்டரின் பேரில் 40 நாட்களுக்குள் தயாரித்து கொடுப்பது வழக்கம். ஆண்டுகள் கடந்தாலும் இந்த கல்லிற்கு மவுசு கூடிக் கொண்டே தான் இருக்கிறது'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X