SC sets up special team to investigate black money‎ | கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்| Dinamalar

கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூலை 06, 2011 | Added : ஜூலை 04, 2011 | கருத்துகள் (47)
Advertisement
கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட் SC sets up special team to i

புதுடில்லி: வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க, அதிக அதிகாரங்களுடன் கூடிய, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.,) நியமித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அரசின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.


நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிச்சார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரச்னை என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு தவறி விட்டது.கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, திரும்ப, திரும்ப கோர்ட் வலியுறுத்தியது. ஆனாலும், மத்திய அரசும், அதன் ஏஜன்சிகளும், இது தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தரவில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாகவே, இது கருதப்படுகிறது. ஹசன் அலி தொடர்பான வழக்கில், கோர்ட் தலையிட்ட பின்னரே, அரசு நடவடிக்கை எடுத்தது.வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது, இங்குள்ள அதிகாரிகளின் இயலாமையை பிரதிபலிப்பதாக உள்ளது. வருமான வரியை வசூலிப்பது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. நம் நாட்டு பணம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதால், நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.


வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும், கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான விசாரணையையும் கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த புலனாய்வுக் குழுவின், துணைத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா செயல்படுவார்.கறுப்புப் பணம் பதுக்கலை கண்டுபிடிப்பதற்காக, மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியானது, புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும். கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த புலனாய்வுக் குழு, கோர்ட்டுக்கு நேரடியாக அறிக்கைகளை அளிக்கலாம்.


கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக, ஏற்கனவே சிலரிடம் விளக்கம் கேட்டு, விசாரணை அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை, பகிரங்கமாக வெளியிட வேண்டும். எனினும், கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படாதவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகள் பற்றிய விவரங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


சிறப்பு புலனாய்வு குழு : சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் ரெட்டி, 1991முதல், 1997 வரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின், 15வது சட்ட கமிஷனின் தலைவராகவும், 16வது சட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினர்.கடந்த, 2001ல், சட்ட கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சட்ட மறு சீராய்வு செயல்பாட்டு குழு உட்பட, பல்வேறு துணை குழுக்களின் தலைவராகவும், இவர் பதவி வகித்துள்ளார். துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஷாவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.


மத்திய அரசு மழுப்பல் : கறுப்புப் பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, முழுமையாக அறிந்து கொள்ளாமல், எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது தான், இறுதியான முடிவு. ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தான், இறுதியான கோர்ட்.கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் மட்டுமே, தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. உத்தரவை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு பின், அவசியம் ஏற்பட்டால், அரசின் செய்தித் தொடர்பாளர், இதுகுறித்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


"அரசின் முகத்தில் விழுந்த அடி' : சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இதை, பா.ஜ., வரவேற்கிறது. கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, அரசு எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, மத்திய அரசின் முகத்தில் விழுந்த, பலத்த அடி என, பா.ஜ., கருதுகிறது' என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh A.S - Chennai,இந்தியா
10-ஜூலை-201117:05:47 IST Report Abuse
Venkatesh A.S கேக்கறதுக்கு என்னமோ நல்லாத்தான் இருக்கு. ஆனால்...?
Rate this:
Share this comment
Cancel
ramnaduRamu - ramanathapuram,இந்தியா
06-ஜூலை-201111:02:27 IST Report Abuse
ramnaduRamu mr கவி, நீங்க இலவசத்துக்கு ஆசை படுரிங்கனு உங்க கருத்து மூலம் தெரிகிறது. நான் சொல்வது இன்னும் பல கிராமங்கள் நல்ல சாலை வசதி இல்லாமலும்,தண்ணீர் வசதி இல்லாமலும், கழிப்பிடவசதி இல்லாமலும்,பள்ளி கூடங்களில் ஆசிரியர்கள் இல்லாமலும் அவதி படுறாங்க,இலவச திட்டங்களால் இளைஞர்களையும்,உழைப்பாளிகளையும் சோம்பேறிகளாக ஆக்க நான் விரும்பவில்லை.இலவசதிட்டங்களுக்குப் பதில் தொழில் புரட்சியை ஏற்படுத்தணும்,வேலைவாய்ப்பை உருவாக்கணும்.இதுதான் நம்மைப்போல் தேசனலவிரும்பிகளுக்கு அழகு.நம்மால் முடியும் நமக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்த "சுவாமிஜி"தற்போது "கலாம்,ஹசாரே"போன்ற நல்வழிகாட்டிகள் இருக்கும் போது வீரமும், விவேகமும் உள்ள நாமே இப்படி சிந்தித்தாள்? தகுதியான வேலை, ஊதியம் இல்லாமல் தான் நீங்க சௌதியில் உள்ளீர்கள்.நீங்கள் அங்கு எவ்வளவு கஷ்ட்டப் படுரீங்கனு நான் நன்றாக அறிவேன். காரணம் தேச துரோகிகள் செய்யும் துரோகசெயலே!
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
05-ஜூலை-201122:07:12 IST Report Abuse
g.k.natarajan எப்பாலவுமுறை உச்சநீதிமன்றம்எடுத்து சொன்னாலும் இந்த அரசாங்கத்திற்கு, வெட்கம் மானம் இல்லை!, வேண்டுமென்றே செய்கிறார்கள்!தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவதுபோல்!!! நடராசன்.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
05-ஜூலை-201120:21:35 IST Report Abuse
Vijay Kumar யார் யார் மேல் சந்தேகம் உள்ளதோ அவர்களின் தொலைபேசி (மொபைல் போன்) மற்றும் கணினி செயல்பாடுகளை முழுவதும் கண்கானிதாலே போதும். ஒர்வனும் தப்பி விட முடியாது. தொலிழ்நுட்பம் வளர்ந்த நிலையில் இன்னும் ஏன் பழைய முறைகள்? call the best ethical hackers and trace all activities of their PC and mobile phones. Simply you can catch them even they change the bank accts to some other banks...
Rate this:
Share this comment
Cancel
Gajendiran - Chennai,இந்தியா
05-ஜூலை-201118:24:23 IST Report Abuse
Gajendiran தி மு க மினிஸ்டர் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே இந்திய வல்லரசு ஆகி விடும்
Rate this:
Share this comment
Cancel
vijayakumar - COIMBATORE,இந்தியா
05-ஜூலை-201117:57:08 IST Report Abuse
vijayakumar Unless the lokpal bill is passed in the loksaba, the question of bringing back the black money is impossible. Unless all politicians are answerable this is not possible. A situation shouled be created so that if the government run by the politician does not take action, he will be removed from office by the lokepal. If this is the situation, automatically black money will come to INDIA
Rate this:
Share this comment
Cancel
sai - tiruppur,இந்தியா
05-ஜூலை-201117:29:25 IST Report Abuse
sai காங்கிரஸ் மந்திரி திக் விஜய சிங், சிதம்பரம், பிரணாப் இவர்கள் அனைவரும் மாறி மாறி ஊலறி கொண்டே இருக்கிறார்கள் .நாட்டில் பணவீக்கம் அதிகமாகி கொண்டே போகிறது .காங்கிரஸ் அரசு உடனடியா ஆட்சி விட்டு இறங்க வேண்டும். இதற்கு மேல் இவ்வளவு கேவலமா யாரும் ஆட்சி செய்யமுடியாது .கருப்பு பணம் அனைத்தும் காங்கிரஸ் மந்திரிகளிடம் தான் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sakthi - chrnnai,இந்தியா
05-ஜூலை-201117:18:22 IST Report Abuse
Narayanan Sakthi சுப்ரீம் கோர்ட் - உச்ச நீதிமன்றம், ஏஜன்சிகளும்-முகமையாளர்கள்,கோர்ட்-நீதிமன்றம். இந்த தமிழ் விளக்கம் போதுமா? இல்லை வேண்டுமென்றால் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். தமிழ் பத்திரிக்கைகளிலாவது முழுதும் தமிழாக இருக்கட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Tea Coffee - melbourne,ஆஸ்திரேலியா
05-ஜூலை-201115:27:20 IST Report Abuse
Tea Coffee no money no honey... no money in swiss bank, for past 15-20 years, government allowed to bring gold and silver in kilos (5kg-100kg).(after paying a small duty/tax), how many people buy this much gold and silver with their own money? all are so called black money. from dubai, for a free air ticket plus some thousand ruppees, so many poor workers brought in all gold and silver. the sup.court has to order/investgate how this much amount of gold and silver can be purchased by a ordinary person? what happen to that? where it is? who are all benefited?...... use satellite to find the under ground lockers..... jai hind. -rose melbourne
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
05-ஜூலை-201115:23:19 IST Report Abuse
Gopi அரசாங்கத்தின் முகத்தில் அரை விழவில்லை, சோனியாவின் முகத்திலும், சிங்கின் தலையில் குட்டும் விழுந்துள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை