அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.


பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.


ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.


கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.


கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.


கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.


சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


- நமது நிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vallanadu mani - tirunelveli,இந்தியா
07-ஜூலை-201106:22:29 IST Report Abuse
vallanadu mani இதுக்கு பெத்தவர்களும்தான் காரணம். நம்ம கலாச்சாரம், பக்தி, ஒழுக்கம் இவையெல்லாம் சொல்லிதரணும். கூடவே அரசும், பக்தியின் அவசியத்தை அறிவுருத்தனும். அதான், பகுத்தறிவின் தவறான வழிகாட்டுதலே, இப்படி மோசமான விளைவிகளை கட்டுப்பாடு இல்லாத, வாழ்க்கையை முடிவை எடுக்க தூண்டுகிறது. . சும்மா மொழி வெறி, இனவெறி என உணர்ச்சிகளையும் பணம் பண்ணும் வழிகளையும் சமுதாயம் தூண்டுவதை நிறுத்திவிட்டு வாழ்க்கைகல்வியை சொல்லிதந்தாலே இந்த நிலை மாறும். அதுக்கு, அவரவர் சார்ந்த மதங்களை முழுவதும் வழிபட்டாலே ஒழுக்கம் தானா வரும். இந்த தலைமுறைக்கு அது அவ்வளவா இல்லை என்பதின் வெளிப்பாடுதான் இந்த புள்ளிவிபரம் தரும் விளக்கம். இது அறிவுரை அல்ல, மதங்களையும் பெற்றோர்களையும் மதித்து வணங்க ஆரிம்பித்தாலே போதும்.
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
07-ஜூலை-201104:45:37 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN விவாக ரத்து செய்பவர்கள் ,ஒன்றை யோசிக்க மறந்து விடுகிறார்கள். பறி போன கற்பை, அவர்களால் மீட்க முடியுமா? சமூகம், அவர்களை பார்த்து சிரிக்காதா? ஏதோ பயணத்தை ரத்து செய்வது மாதிரி, சிறுபிள்ளை விளையாட்டு தேவை தானா?
Rate this:
Share this comment
Jennifer Bryan - chennai,இந்தியா
10-ஜூலை-201114:12:52 IST Report Abuse
Jennifer Bryankarpaa???? Karpu is in mind,,,and not in body. Its for men as well and not for women alone. Its always better to divorce and live seperately rather than crying daily and getting beaten up. She can atleast live her life happily....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
07-ஜூலை-201103:06:02 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை இதுக்குதான் நான் நேத்தே சொன்னேன் சாப்வேர் கம்பனிகளால நம் தமிழ் கலாச்சாரமே கெட்டுட்டு வருதுன்னு , இவங்களால வாடக ஏறிப்போச்சு , வீட்டு விலை ஏறிப்போச்சு , காலி நிலம் விலை ஏறிப்போச்சு , இவனுங்க கைல பணம் கோடிக்கணக்குல கொட்டி கிடக்கு ஆனா திருமண வாழ்வில் சந்தோசம் இல்லை காரணம் பல ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டதுதான்
Rate this:
Share this comment
Cancel
mohamed amin - paris,பிரான்ஸ்
07-ஜூலை-201101:48:34 IST Report Abuse
mohamed amin பெண்களுக்கு "ஈகோ'மனப்பான்மை அதிகம் ஏற்ப்படுகிறது காரணம் தாங்கள் வேலை, படிப்புத்தான்,தன்மை இப்போழ்து உள்ள பெண்களிடம் இல்லை,கண்ணியம் எப்பொழுதே மலை ஏறிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்