ஒற்றை யானையால் ஓயாத தொல்லை! கிராம மக்கள் பீதி | ஒற்றை யானையால் ஓயாத தொல்லை! கிராம மக்கள் பீதி| Dinamalar

தமிழ்நாடு

ஒற்றை யானையால் ஓயாத தொல்லை! கிராம மக்கள் பீதி

Added : ஜூலை 17, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெ.நா.பாளையம் : சின்னதடாகம் அருகே, மாங்கரையில் ஒற்றை யானையின் தொல்லையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டுயானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அகழி, சூரிய மின்வேலி, விவசாயிகளுக்கு "டார்ச் லைட்' வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. எனினும், காட்டு யானைகளின் ஊடுருவலை முழுமையாக தடுக்க முடியவில்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை கேரளாவில் இருந்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு யானைகள் இடம் பெயருகின்றன. அப்போது, வழியோர கிராமங்களில் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. தோட்டப்பயிர்களான கரும்பு, வாழை, தென்னங்கன்றுகளை தின்று ருசி கண்ட யானைகள் கிராமங்களையொட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் நிரந்தரமாக தங்க துவங்கிவிட்டன.


இரவு நேரத்தில் தோட்டங்களை முற்றுகையிட்டு அழிகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோவை வனத்துறையினர் "ரேடியோ காலரிங் சிஸ்டம்' என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். யானைக் கூட்டத்தை வழி நடத்தி செல்லும் ஆண் அல்லது பெண் யானையை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட யானைக்கு ரேடியோ காலரிங் கருவி பொருத்தப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட யானையின் நடமாட்டத்தை சுலபமாக கண்டறிந்து, யானைகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க முடியும் என நம்புகின்றனர். போளுவாம்பட்டி வனச்சரகத்தில் பெண் யானைக்கு இக்கருவி பொருத்தப்பட்டதால், அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க முடிந்தது. இத்திட்டம் வெற்றி பெற்றதால், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் ஆண் யானைக்கு இக்கருவி பொருத்த திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் மாங்கரையில் 20 வயது ஆண் யானைக்கு மயக்க ஊசி செலுத்திய போது, மயங்கி விழுந்து இறந்தது. இதனால், இத்திட்டத்தை வனத்துறை நிறுத்தியது.


மயக்கி ஊசி போட்ட யானை இறந்ததால் பெரும் சர்ச்சையும் எழுந்தது. இச்செயலை கண்டித்து இயற்கை ஆர்வலர்கள் வனத்துறைக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். இதனால், அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் வனத்துறையினர் குழப்பமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சின்னதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தினமும் இரவு 10.00 மணிக்கு மேல் இங்குள்ள செங்கல் சூளைகளில் உள்ள குடியிருப்புகளின் முன் ஒற்றை யானை நடமாடுகிறது. கிராமவாசிகள் பட்டாசு வெடித்தாலும், பலத்த ஓசை எழுப்பினாலும் நகருவதில்லை. இரண்டு நாட்களுக்குமுன் சின்னதடாகத்தில் ஆனந்தன் என்பவரின் வீட்டு முன் இருந்த மாமரத்தை ஓடித்த யானை அங்கிருந்த தண்ணீர் தொட்டி, குடிநீர் குழாயை மிதித்து சேதப்படுத்தியது. இதேபோன்று சோமையனூர், காளையனூர், தண்ணீர் பந்தல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ள தென்னை, வாழைகளையும் மிதித்து சேதப்படுத்தியது. காட்டு யானையின் ஊடுருவலை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X