Actor Ravichandran passes away | நடிகர் ரவிச்சந்திரன் மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்

Updated : ஜூலை 25, 2011 | Added : ஜூலை 25, 2011 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்."காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன்,71. இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அதே கண்கள், அருணாச்சலம், ரமணா <உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில்,"டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.<உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில், அவருக்கு கடந்த 19ம் தேதி இரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால், செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டுமகன்களும் உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாதனா - சென்னை,இந்தியா
25-ஜூலை-201123:52:33 IST Report Abuse
சாதனா நடிகர் ரவிச்சந்திரன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
chandru - sivagangai,இந்தியா
25-ஜூலை-201123:14:24 IST Report Abuse
chandru ஆழ்ந்த அனுதாபங்கள் ..........இரண்டு தமிழ் james bond கள் ...... ஒன்று ஜெய ஷங்கர் ..... அடுத்தது ரவி சந்திரன் ..............இருவர் மரணமும் பழைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு ....
Rate this:
Share this comment
Cancel
Pulikutty - Mumbai,இந்தியா
25-ஜூலை-201122:24:51 IST Report Abuse
Pulikutty ரவிச்சந்திரன் மிகச்சிறந்த நடிகர். ஊமை விழிகள் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அவருடைய மறைவுக்கு ரசிகராகிய என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X