சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தினகரன் ராஜினாமா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் தினகரன். இவருக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, அதிகாரத்தை பயன்படுத்தி, நிலம் ஆக்கிரமித்தது உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டன. ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் வகையில், இந்த பிரச்னை எழுப்பப்பட்டதை அடுத்து, மூன்று பேர் கொண்டநீதிபதிகள் குழுவை அமைத்து, தினகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும்படி, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி உத்தரவிட்டார். இந்த விசாரணைக்குழு, தினகரனுக்கு எதிராக, வேறு சில குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஏப்ரல் 29ல், தினகரனுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர், நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன், இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்," ராஜ்யசபாவால் நியமிக்கப்பட்ட, மூன்று பேர் கொண்ட குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. இக்குழு தெரிவித்த குற்றச்சாட்டுகளையும் நீக்க முடியாது' என குறிப்பிட்டு இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அடுத்து, நீதிபதி தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை, மீண்டும் துவக்கவிருந்தது. இந்நிலையில், நேற்று தனது பதவியை நீதிபதி தினகரன் ராஜினமா செய்தார். தனது ராஜினமா கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பிவைத்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்," தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. நீதித்துறையில் தொடர்ந்து எனக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் வருத்தம் அடைந்துள்ளேன். ' என்றார்.



Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்