E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

03 ஆக
2011
02:32
பதிவு செய்த நாள்
ஆக 01,2011 23:45

கொழும்பு:இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, அப்பாவி மக்களை கொத்துக் குண்டுகள் வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என்ற உலக நாடுகளின் குற்றச்சாட்டை, முதன்முறையாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கையில், 2009ல் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அப்பாவி மக்கள் மீது ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசியது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.


உலக நாடுகள் குற்றச்சாட்டு:இதுகுறித்து உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை, ஐ.நா.,வின் போர்க் குற்ற அறிக்கையும் உறுதிப்படுத்தியிருந்தது. போரின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், 75 ஆயிரத்தில் இருந்து மூன்று லட்சத்து ஐந்தாயிரம் பேர் வரை இருந்திருக்கலாம் என, ஐ.நா., அறிக்கை கூறியுள்ளது.போரில் மனித உரிமை மீறல் நடந்ததை, பிரிட்டனில் இருந்து வெளிவரும் "சேனல் 4' ஆதாரப்பூர்வமான வீடியோக்கள் மூலம் நிரூபித்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு, இதுநாள் வரை மறுத்துவந்தது.


இலங்கை ஒப்புதல் அறிக்கை:இந்நிலையில், நேற்று இலங்கை அரசு வெளியிட்ட "மனிதாபிமான நடவடிக்கைகள்: உண்மை பகுப்பாய்வுகள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளது.


இலங்கை ராணுவச் செயலரும், அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம், போர்ப் பகுதிகளில் இருந்த மக்களைப் பாதுகாக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. போரின் போது மக்களில் ஒருவர் கூட கொல்லப்படக் கூடாது என்பது தான், அரசின் கொள்கை முடிவு.இது பல்வேறு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, போர்ப் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தபய விளக்கம்: ஐ.நா.,வின் இலங்கை போர்க்குற்ற அறிக்கையில், "சரண் அடைய வந்த விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதிப் பிரிவுச் செயலர் புலித்தேவன் இருவரையும், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக' தெரிவிக்கப்பட்டிருந்தது.


இலங்கை அரசின் தற்போதைய அறிக்கையை வெளியிட்டுப் பேசிய கோத்தபய இதுகுறித்துக் கூறியதாவது:உறுதிமொழி அளிக்கப்பட்டனவோ இல்லையோ, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், சரண் அடைந்தனர். அவர்கள் சமூகத்தோடு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நடேசனும், புலித்தேவனும் சரண் அடையப் போகின்றனர் என்பது பற்றி, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு யாரும் தெரிவிக்கவில்லை.
அப்போது, ராணுவச் செயலராக இருந்த என்னையும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. மனிதாபிமான நடவடிக்கைகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும், மறுவாழ்வு முகாமில் கொண்டு வந்தோம். அவர்களை எவ்வளவு தூரம் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமோ அதையும் செய்தோம். அவர்கள் இயற்கை மரணம் எய்தும் வரை கவனித்து வந்தோம். இதேபோன்ற கவனிப்புகள் தான், மற்ற விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கும் அளித்து வருகிறோம். பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் செல்வாக்குடன் இருந்த கடற்புலிப் பிரிவின் தலைவர் சூசை, இலங்கை கடற்படை வீரர்கள் பலரது சாவுக்குக் காரணமானவர்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், மற்றொரு விடுதலைப் புலித் தலைவரான ரூபனின் குடும்பமும், படகு மூலமாக இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, கடற்படையினர் அவர்களை வழிமறித்து மீண்டும் முகாம்களுக்குக் கொண்டு வந்தனர். அன்றில் இருந்து அவர்கள் கடற்படையினரால் நன்கு கவனிக்கப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் மறைந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்தார், கொழும்பில் சவுகரியமாக வாழ்ந்து வருகின்றனர்.போரின் போது 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை. வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதைக் கணக்கிடுவது மிகக் கடினம்.இவ்வாறு கோத்தபய தெரிவித்தார்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டெல்லி பாலா - Tiruppur,இந்தியா
03-ஆக-201100:02:23 IST Report Abuse
டெல்லி பாலா டெல்லி'யா இந்தியால இருந்து பிரிக்கணும் நண்பர்களே... இந்த மதிய அரசை வைத்து கொண்டு நாம் எதுவும் பண்ண முடியாது போலிருக்கே!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manickasankar - Madurai,இந்தியா
02-ஆக-201108:44:19 IST Report Abuse
manickasankar இதெற்கெல்லாம் நாம் மத்தியஅரசின் முடிவை எதிர்பாத்து காத்துகிடபது வேதனைக்குரியது.நாம் நாடு தனி நடக்க இருந்திருந்தால் இத்தனை உயிர் போயிருக்காது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Moris - negercovil,இந்தியா
02-ஆக-201108:35:30 IST Report Abuse
Moris ஒரு கொத்துக் குண்டை ராஜபக்ஷே avan சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே தலையில் வீசி ஏறியுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
anpu - DORTMUND,ஜெர்மனி
02-ஆக-201108:23:00 IST Report Abuse
anpu gothapaya சொல்வது பொய் கருணாதி உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை கபதினர்ர்ர்ரர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
02-ஆக-201108:05:36 IST Report Abuse
Krish உலகத்திலேயே கேவலமான அரசியல் வாதி கருணா தான். இலங்கை யில் தமிழ் மக்கள் மரணம் அடையும் போதும் அரசியல், இப்போது ஜெ அவர்கள் ஹிலாரி யிடம் பேசும்போதும் அரசியல். இந்த கேவலமான ஜன்மம் US உடன் பேச, முயற்சி கூட எடுக்கவில்லை. இலங்கை அரசு இப்போது உண்மையை சொல்வது போல் உண்மையாக நடித்தாலும், வரலாற்றில் ராஜ பக்ஷே வின் பெயர் இலங்கை தமிழர்களின் உதிரத்தால் எழுதப்பட்டுவிட்டது. யாருக்கு தெரியும், இலங்கை தமிழ் மக்களுக்கு நடந்த அதே நிலைமை, சிங்களவனுக்கு, சீனர்களால் வரலாம், அதை விட மோசமாக கூட இருக்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
02-ஆக-201107:57:47 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN இலங்கை அந்த காலத்திலும், இந்தியாவின் ராமபிரானுக்கு எதிரி. இப்போதும் இந்திய வம்சாவளியினரான தமிழர்களை கொன்று குவித்து, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு எதிரியாக உள்ளது .ஒரு பெரிய சுனாமி வந்தால், தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து போக கூடிய சுண்டைக்காய் நாட்டுக்கு இவ்வளவு துணிச்சலை கொடுத்தது யார்? புத்தமதத்தை பின்பற்றுவதாக சொல்லி கொண்டு திரியும் இலங்கை, நடந்து முடிந்த போரில் புத்தர் எதிரே வந்திருந்தால் கூட கொன்று போட்டிருக்கும். உண்மையை ஒப்புக்கொள்ள, இலங்கை இவ்வளவு நாள் எடுத்திருக்க தேவையில்லை. பல் வேறு கட்சிகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழக தலைவர்களால், இலங்கை தமிழனை காப்பாற்ற முடியாது. ஏனென்றால், இவர்களின் சண்டையே ஊர் சிரிக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Selva Kumar - Edmonton,கனடா
02-ஆக-201107:51:02 IST Report Abuse
Selva Kumar ravi, torronto இந்த பேர்ல ஒரு மானஸ்தர் அடிக்கடி கருத்து சொல்லுவரே......அவர் எங்கே? இந்த செய்தியை கொஞ்சம் படிக்க சொல்லுங்க...... அவங்க மானசீக தலைவர்களான சோனியா, மு க, அழகிரி, போன்றவர்களிடம் சொல்ல சொல்லுங்க.....தயவு செஞ்சி இந்த கருத்தை வெளியிடவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
02-ஆக-201106:56:56 IST Report Abuse
Pandiyan அன்று வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் எவளவோ சொன்னார்கள் இவர்களின் தீவிர போராட்டத்தினால் ஒவொரு தமிழ் மக்களும் தங்களுக்குள்ளே உள்ள குமுறலுடன் இருந்தோமே தவிர நம்மால் எதுவும் செயமுடியவில்லை இருந்தும் முத்துக்குமார் போன்ற வாலிபர்கள் எத்தனையோ பேர் தங்கள் உயிரை மாய்த்தும் தமிழ் மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் மத்திய கண்க்ரேஸ் அரசும் அபோதைய தி மு க அரசும் ஈழ தமிழர்களுக்கு உதவி புரிவது போல நடித்து மக்கள் கவனத்தை திருப்பி விட்டது தான் , செயல்படாத பிரதம மந்திரி மத்திய அரசிலும், குடும்பம் ஊழலில் குறியாக இருந்த தி மு க தலைவர் எல்லா வற்றிற்கும் மேலாக சோனியாகாந்தியின் பழிவாங்கும் எண்ணம்தான் இதனை அழிவிற்கும் காரணம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
02-ஆக-201106:12:48 IST Report Abuse
appu இதை ஒத்துகொண்ட இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி..மத்தய அரசே..சிவசங்கர் மேனனும்,நிருபமா ராவ் இது விசயமாக அங்கே(இலங்கையில்) என்ன புடுங்கிவிட்டு வந்தார்கள் என்பதை சொல்ல முடியுமா?தமிழர்கள் மேல் என் இந்த கொலைவெறி?வட இந்தியன் என்றால் இது வரை விட்டு வைத்திருப்பீர்களா?இல்லை வட இந்திய மக்கள் தான் உங்களை விட்டு வைத்திருப்பார்களா?இதற்கு தார்மீக முழு பொறுப்பு நமது மத்திய அரசே ஆகும்..நடவடிக்கை இல்லாமல் ஏமாற்றியதை கண்டு கொண்டிருந்த அன்றைய ஆளும் அரசும்,அன்றைய எதிர்கட்சிகளும் தமிழ் நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தது???வை கோ ஒரே ஆள் தான் இதற்காக குரல் கொடுத்த உண்மையான அரசியல்வாதி...இலங்கை தண்டிக்கப்படவேண்டிய நாடு..பொது மக்களை கொன்று குவித்தது,சரணடைந்த விடுதலை புலிகளை மனிதாபிமானமற்ற முறையில் கைகளை கட்டி உடைகளை அகற்றி கொடூரமாக கொன்றது...இப்போதாவது நமது மத்திய அரசு இதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை மீது எடுக்குமா?அல்லது சீனா என்ற மாபெரும் நாட்டின் மீது பயம் கொண்டு எம் தமிழ் மக்களை இப்படியே அடகு வைத்து கொள்ளுமா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jayaraman Jayaraman - kolkata,இந்தியா
02-ஆக-201106:00:12 IST Report Abuse
Jayaraman Jayaraman நமது தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது அந்த கொடூரத்திருக்கு நம் இப்போதிய மத்திய அரசும் முன்னால் மாநில அரசும் துனைநின்றது. அந்த அப்பாவி பொது மக்ளின் கண்ணீரை துடைபதற்கு உலக நாடுகள் எதுவும முன்வரவில்லை என்பதுதான் வேதனை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Srini Katchi - chennai,இந்தியா
02-ஆக-201108:40:21 IST Report Abuse
Srini Katchiநண்பரே தவறு இருபத்தி எழு நாடுகள் ஒன்று கூடி இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள், நம்முடன் தொப்புள் கொடி உறவு இல்லாதவர்கள், தமிழனின் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள், மனித உயிர்களை மதித்த சக மனித பிறவிகள் உள்ள நாடுகள், ஒன்று கூடி தீர்மானம் முன் மொழிந்தார்கள். முதலில் எதிர்த்த நாடு எனது தாய் நாடு, அடுத்த நாடு எனது தாய் நாட்டின் கூட்டாளி, அது வரை எமது தாய் நாடு ஒரு ஏழை நாடு என்றே நினைத்து இருந்தேன். எந்த பிரச்சனைக்கும் வாய் திறவாத பிரதமரையும் ஊமை என்றே நினைத்து இருந்தேன், சிங் அவர்கள் சிங்கம் கர்ஜிப்பதை போல கர்ஜித்தார் " இலங்கைக்கு பொருளாதார தடை கொண்டு வந்தால் இந்தியா அந்த இழப்பீட்டு தொகையை இலங்கைக்கு வழங்கும்" என்று ஒரு போடு போட்டார், அயல் நாடுகளின் இரையான்மையில் தலை இட கூடாது என்று கூறிய அதே நாக்குதான் இப்படியும் கூறியது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.