Caste names in villages removed: TN Govt., | ஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை

Updated : ஆக 22, 2011 | Added : ஆக 22, 2011 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திண்டுக்கல்: ஊர்களில் ஜாதி பெயரை நீக்கி, அழகுத் தமிழ் பெயர் சூட்ட, அரசு முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் பல கிராமங்கள், ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது.இதற்கு, அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும்.


அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தீண்டாமை சட்டத்தில், ஜாதியின் பெயரை சொல்லி அழைப்பது குற்றம். ஆனால் சில ஊர்களுக்கு அது தொடர்பான பெயர்கள் உள்ளன. முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gajapriya - chennai,இந்தியா
22-ஆக-201119:53:20 IST Report Abuse
gajapriya வழிபடும் ஆலயங்களிலே ஜாதி உள்ளது....குறிப்பிட்ட ஜாதியினர் குறிப்பிட்ட ஜாதி கடவுள்களையே வணங்குகின்றனர்....பின் எங்கே ஜாதி உணர்வு போவது?வெறும் ஊர் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை...ஜஸ்ட் டைம் வேஸ்ட்....
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - mettur,இந்தியா
22-ஆக-201119:48:14 IST Report Abuse
s.maria alphonse pandian தேர்தலில் வேட்பாளாரை நிறுத்தும்போது ஜாதி பார்த்து தானே எல்லோரும் நிறுத்துகிறார்கள்....ஜாதி உணர்வு படித்து முன்னேறிய சமூகத்தினரிடம் கூட அதிகமாக உள்ளது ....வெறுமனே ஊர் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை..இது வெறும் ஸ்டன்ட்...சில குறிப்பிட்ட ஜாதிகளின் பெயரில் ஊர்கள் இல்லை...எனவே அவர்கள் தங்கள் ஜாதி பெயரில் ஊர்கள் இல்லையே என்று இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க செய்கிறார்கள்..இதான் உண்மை
Rate this:
Share this comment
Cancel
S.P.KUMAR - tirunelveli,இந்தியா
22-ஆக-201119:10:27 IST Report Abuse
S.P.KUMAR இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் ஜாதி பெயர் தேவையா ? கழுதையும் குதிரையும் பார்க்க ஒன்றாக தான் தெரியும். ஆனால கழுதை கழுதை தான், குதிரை குதிரை தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X