E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ராஜிவ் கொலையாளிகள்‌ தூக்கு தண்டனை: தலையிட முடியாது- சட்டசபையில் முதல்வர் ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 ஆக
2011
14:15
பதிவு செய்த நாள்
ஆக 29,2011 11:22

சென்னை: ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.

ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார்.


தற்கொலை செய்ய வேண்டாம் முதல்வர் ஜெ., : இது தொடர்பாக சபையில் அவர் பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இதில் நான் தலையிட முடியாது. 3 பேரும் மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்த செங்கொடி சம்பவம் வருத்தமளிக்கிறது. யாரும் தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம்.

கபட நாடகம் ஆடுகிறார் கருணாநிதி ஜெ., தாக்கு: ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்னையை அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது .இதில் நளினி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருப்பதால் இவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம், ஏனைய 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றி கடிதம் ஒன்றை கவர்னருக்கு எழுதியது. பின்னர் கவர்னர் அந்த கடிதத்தை ஏப்ரல் 28 ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. மத்தியஅரசும் ஜனாதிபதியும் கருணை மனுவை 2011 ஆக., 12 ம் தேதி நிராகரித்து விட்டது.

இவ்வாறு மரணத்தண்டனையை உறுதி செய்துவிட்டு, செய்ததையெல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல கருணாநிதி தற்போது காப்பாற்ற கோரிக்கை வைக்கிறார். இதனை பித்தலாட்டம், கபட நாடகம், இரட்டை வேடம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? எனக்கு ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது போல அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, ஜனாதிபதி கருணை மனு நிராகரித்த பின்னர் முதல்வராக எனக்கு இதில் குறுக்கிட எந்தவித அதிகாரமும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தி.மு.க., ம.தி.மு.க,. பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 3 பேரை காப்பாற்ற வேண்டும் என கோரி வந்த நிலையில் முதல்வர் அறிவிப்பின் மூலம் தூக்கு நிறைவேற்றுவதில் எதுவும் பிரச்னை இருக்காது என தெரிகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி காங். தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி காப்பாற்ற கோரியுள்ளார். ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ இந்த விஷயத்திற்காக முதல்வரை சந்திக்க தயங்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் இருந்திருந்தால் காப்பாற்றி இருப்பார் என்கிறார் கருணாநிதி: 3 பேரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி; மரணப்பிடியில் இருந்து இவர்களை காப்பாற்ற வேண்டும். பலரது விடுதலைக்கு காரணமாக இருந்தவன் என்ற முறையில், கேட்கிறேன். தூக்குமேடையில் இருந்தவர்கள் அன்று முதல் எத்தகைய தூய வாழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிந்தவன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எவ்வித பயனும், விளைவும் ஏற்பட போவதில்லை. குற்றத்தை எண்ணி வாழ்நாள் முழுவதும் வருந்துவது தான் தூக்கை விட கடினமானதாக இருக்கும். ராஜிவ் உயிரோடு இருந்திருந்தால் 3 பேரின் உயிரை காப்பாற்றி இருப்பார். இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்டவர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட இப்போதைய தமிழக அரசால் முடியாதா என மு.க., ஸ்டாலின் கூறியுள்ளார்.



19 பேர் விடுதலையாயினர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய புலிகள் இயக்கம் இவர்களது ஆதரவாளர்கள் 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் கர்ப்பிணியாக இருந்த நளினி என்பவருக்கான தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை: இந்நிலையில் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. 11 வருட நிலுவையில் இருந்த கருணைமனு தள்ளுபடியை ஏற்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டில்லியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என தெரிகிறது.தூக்கில் போடப்படுவது குறித்து கைதிகள் 3 பேர் குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இவர்களுடைய குடும்பத்தினர் இன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்த்து பேசவுள்ளனர்.

வேலூர் சிறை முற்றுகையிட அழைப்பு: பா.ம.க., கட்சி சார்பில் வரும் 8 ம்‌ தேதி வேலூர் சிறையை முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளார். சேலம் , மதுரை , தஞ்சாவூர் கோர்ட்டை வக்கீல்கள் புறக்கணி்த்துள்ளனர். சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல்கள் 3 பேர் உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர்.



ராம்ஜெத்மலானியின் ஜூனியர்கள் கைதிகளுடன் சந்திப்பு : பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியின் ஜூனியர் வக்கீல்கள் , டில்லியை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கைதிகளை சந்தித்து சில விவரங்கள் கேட்டறிந்தனர். நாளை ஐகோர்ட் விசாரணைக்கு இன்றைய தகவல்கள் பயன் அளிக்கும் என வக்கீல்கள் நம்புகின்றனர். திருப்பூரில் ரயில் மறியல் செய்ய முயற்சித்த தலித் விடுதலை கூட்டமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.





தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (207)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mari - Dharmapuri,இந்தியா
31-ஆக-201109:18:13 IST Report Abuse
Mari கடவுளின் நீதிமன்றத்தில் மன்னிப்பே அதிகபட்ச தண்டனை. தயவு காட்டுதல் தண்டனையை விட பெரியது. வாழ வாய்ப்பு கொடுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g kannan - Bangalore,இந்தியா
29-ஆக-201118:19:22 IST Report Abuse
g kannan இப்போது இந்த முன்று பேர்களுக்காக போராடும் தமிழக கட்சிகள், ராஜீவ் காந்தியுடன் இறந்த அப்பாவி போலீஸ் மற்றும் சாதாரண குடிமக்கள் குடும்பத்தை பற்றி கவலைபட்டர்களா? இந்த குடும்பத்தினரை சந்தித்தார்கள அல்லது எதாவது உதவி செய்தார்கள ? இந்த 20 வருடங்களில். . இந்த குற்றவாளிகளை மன்னிக்க வேண்டியவர்கள் அந்த குடும்பத்தை சேர்த்தவர்கள் மட்டுமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
29-ஆக-201118:19:08 IST Report Abuse
raja இருநூறு உயிர்களை கொன்ற அஜ்மல் கசாபை இன்னும் தூக்கில் இடாமல் மத்திய அரசு இருக்கும் போது இந்த மூன்று பேரை மட்டும் தூக்கில் இட இந்த மத்திய அரசு ஏன் துடிக்கிறது?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
srinivasan - mumbai,இந்தியா
29-ஆக-201117:55:34 IST Report Abuse
srinivasan என்னையா பேசி கொண்டு இருக்கிறீர்கள் எல்லோரும் ? நம் நாட்டின் பிரதம மந்திரியை கொன்றதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்கள்(அவர் நல்லவரா, கெட்டவரா என்பது வேறு விஷயம் ). ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டிற்கு எதிராக செய்ய படும் மிகபெரிய குற்றம். எல்லா அரசியல் கட்சியும் வோட்டுக்காக பிதற்றி கொண்டிருக்கிறார்கள். என்னமோ இவர்கள் மூன்று பெரும் தமிழகத்தின் கெளரவம் காத்தவர்கள் போல. குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மூவரின் மேல் பாசம் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் அவர்கள் ஓர் குடும்பம். ஆனால் அது அவர்களை நிரபராதி ஆக்கி விடாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்ற நக்கீரன் வாழ்ந்த தமிழகம் இது என்பது எல்லோருக்கும் நினைவிருக்கட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
R. RAJAMANI - Mumbai,இந்தியா
29-ஆக-201117:53:16 IST Report Abuse
R. RAJAMANI Dear Tamilians, I am just asking one question to the supporter to the criminal ( to be hanged), if any of their family is suffered such as Rajiv family, whether they will support the criminals. Just imagine the position of the young Ragul , Priyanka who lost the father love in the younger age and widow of Sonia who lost her husband half way of her life. Leave all the politics here, being a human, criminal should be punished then only crime will come down. Rajamani Mumbai.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Gunasekaran Gubendran - pudukkottai,இந்தியா
29-ஆக-201117:36:34 IST Report Abuse
Gunasekaran Gubendran அன்னா ஹசாரே போன்ற, காந்தியவாதிகளை காப்பாற்றவா அம்மா அதிகாரம் இல்லை என்று சொன்னார்கள். நம் நாட்டின் பிரதமரை, அதுவம் தமிழ் நாட்டில் வைத்து கொன்றவர்களை காப்பாற்ற தமிழ்நாட்டு முதல்வர் எவ்வாறு முயற்சிக்க முடியும். பிறகு, நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன. அவற்றை எல்லாம் மூடிவிட்டு, பிரதமர், முதல்வர் போன்றோர்களை தண்டனை கொடுக்க சொல்லலாமே,, அதே சமயம், 21 வருடம் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பிறகு தூக்கு என்பதும் கொடுமையான விசயம்தான். முன்பே வழக்கை முடித்திருந்தால் இந்த போராட்டங்கள் எழ வாய்ப்பே இல்லை......................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்
29-ஆக-201117:32:33 IST Report Abuse
SARAN தூக்கில் ஈடு படுவது தமிழன் இறந்தது வட இந்தியர் என்று பாராமல் இறந்தது நம் நாட்டின் பிரதமர் அதை செய்தவருக்கு மரண தண்டனை சரியே. தண்டனைகள் அதிகமக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். மரண தண்டனை இல்லை என்றால் குற்றங்கள் அதிகமாகும். தவறு செய்தவருக்கு தண்டனை நிச்சயம் வேண்டும். அவர் செய்த தவறு நியாயமாக இருந்தால் கூட. நாட்டின் பிரதமரை கொன்றவருக்கு தூக்கு கிடைக்க வேண்டும். இதை அரசியலாக பார்க்காமல் இந்தியனாக பாருங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Balachandran - chennai,இந்தியா
29-ஆக-201117:29:59 IST Report Abuse
Balachandran முதல்வர் சொன்னா அதை மாற்றி சொல்ல செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் முதல்வர் வழி தனி வழி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajasekaran - Coimbatore,இந்தியா
29-ஆக-201117:27:24 IST Report Abuse
rajasekaran 1. யாசர் அராபத் ராஜிவ் உயிருக்கு ஆபத்து என்றும், அவரது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கைகளில தெரிவித்திருந்தார். ஆக, ராஜிவ் கொலை என்பது மத்திய கிழக்கு நாட்டில் ( இஸ்ரேலாக இருக்கலாம்) ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அல்லது திட்டமிடப்பட்டிருக்கிறது. 2. ராஜிவ் அப்போது அமெரிக்க எதிர்ப்பு நிலையையும்,ரஷ்ய ஆதரவு நிலையும் கொண்டிருந்தார். எனவே அமெரிக்க அடிப்பபொடிகளின் கைவண்ணம் இந்த கொலையில் இருக்கலாம். 3. ராஜிவ் இறந்தபோது இன்று அமெரிக்காவுக்கு பல்லக்கு தூக்கும் மன்மோகன் சிங், அன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர். ராஜிவுக்கு அடுத்த கட்ட தலைவராக அவர் அப்போது இல்லை. ராஜிவுக்கு அடுத்த கட்ட தலைவராக அப்போது இருந்தவர்கள் முறையே "ராஜேஷ் பைலட்" ( இவர் சந்திரா சாமியை சிறையில் தள்ளியவர் ) மற்றும் "மாதவராவ் சிந்தியா". 4. மேற்சொன்ன இருவரும் சொல்லிவைத்தாற்ப போல அகால மரணத்தை தழுவுகின்றனர். இதனால் சோனியா தலையிட்டு மன்மோகனை பிரதமராக்குகிறார். இங்கே தான் இடிக்கிறது. ராஜிவ் அமெரிக்க எதிர்ப்பாளராக இருந்த காரணத்தால் அவரை நீக்கிவிட்டு, அமெரிக்க அடிமையாக இருக்கும் மன்மோகனை அரியணையில் அமர்த்த "அமெரிக்கா - சி.ஐ.ஏ - மொசாட் - சந்திராசாமி,சு.சாமி - மன்மோகன் சிங் - சோனியா" கூட்டணி ஏன் முயற்சித்திருக்க கூடாது? ஏன் விசாரணை அந்த தொணியில் நடக்கவில்லை? நோண்டி தின்னவன் ( என்று சொல்லப் படும் ) மூவர தூக்குகொட்டடிக்கு அனுப்பும் சி.பி.ஐ, நொங்கை தின்னவனை தப்பவிட காரணம் என்ன? 3. ராஜிவ் கொலையை தடா சட்டத்தின் கீழ் விசாரித்ததே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. அப்படி இருக்க அந்த தடா சட்டத்தின் கீழ் பெற்ப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 'மரண தண்டனை' தீர்ப்பே எழுதப் பட்டுள்ளது. இது முரண் அல்லவா? 4. இந்த வழக்கை பொருத்தவரை 4ம் தர குற்றவாளியான நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம், 18ம் தர குற்றவாளிகளான இந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. இது முரண் அல்லவா? 5. தனு'வின் பெல்ட் பாமை யார் செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்று சி.பி.ஐ ரகோத்தமன் கூறுகிறார். அது மட்டும் இன்றி பேரறிவாளன் வாங்கி தந்த பேட்டரி அந்த குண்டை வெடிக்க வைக்கத் தான் பயன்படுத்தப் பட்டது என்பதும் தெளிவாக நிரூபிக்கப் படவும் இல்லை. நிலைமை இப்படி இருக்க, பேட்டரி வாங்கி தந்த பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையா? அப்படியானல் பேட்டரி விற்ற கடை காரனை ஏன் சி.பி.ஐ விசாரிக்கவில்லை ? அந்த பேட்டரியை உற்பத்தி செய்த கம்பெனியை ஏன் சி.பி.ஐ விசாரிக்கவில்லை ? இந்த வழக்கில் ஏதொ நாளு பேரை பிடித்து 'பிடித்து விட்டோம் ' என்று மார்த்தட்ட மட்டுமே சி.பி.ஐ செயல்பட்டதே ஒழிய உருப்படியான,நேர்மையான விசாரணை இதில் நடக்கவில்லை என்று ரகோத்தனும் ஒத்துகொள்கிறார் ,தேவராஜும் ஒத்துகொள்கிறார் . ( குறிப்பு: இவ்விருவரும் ராஜிவ் கொலையை விசாரித்த குழுவில் இருந்த சி.பி.ஐ அதிகார்கள் )
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
aacchani - Chennai,இந்தியா
29-ஆக-201117:27:08 IST Report Abuse
aacchani தூக்கு தண்டனையே பாவச் செயல், நம் நாட்டில் யாருக்கும் தூக்கு தண்டனை கிடையாது. அதிகபச்ச தண்டனையே ஆயுள் தண்டனை தான் என்ற சூழல் இருந்தால் எப்படி இருக்கும். யோசித்து பாருங்கள் சாப்பாடிற்கு வழி இல்லாத எல்லா வெறும் கைகளும் வெளிநாட்டவரின் கை கூலிக்கு ஆசை பட்டு தப்பை செய்து அதில் வரும் பணத்தில் குடும்பத்தை முன்னேற்றி விடலாம். வெறும் 8 -10 வருடம் தானே நிம்மதியாக பொழுதை ஜெயிலில் கழித்து விட்டு வரலாம் என்று தானே நினைப்பான். ஒரு இயக்கம் நம் நாட்டிற்குள் புகுந்து நம் நாட்டின் பெரும் தலைவரை (ராஜீவ் என்று சொல்லவில்லை prime minister என்று தான் சொல்கிறேன்) இல்லாமல் செய்ய முடியும் என்று நிரூபித்தால் அது எவ்வளவு பெரிய பயங்கரம். காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும். நமக்கு நியாயமாக படும் காரனத்திகாக இவ்வளவு பெரிய கொடுமை இளைப்பது நியமா.பாகிஸ்தான் காரனுக்கு அவன் செய்யும் காரணங்கள் நியமாக படலாம் அதற்காக அவர்கள் புரியும் கொலைவெறி போராட்டம் நியமகுமா? அந்த கூடத்தில் உன் பிள்ளை இருந்திருந்தால் நீ இப்படி போராடுவாயா? வெறும் battery தானே வங்கி கொடுத்தான் என்று வாதாடுகிறாய், இந்த இளைங்கர்கள் வாங்கி கொடுக்காமல் இருந்திருந்தால் வேறு ஒருவன் வாங்கி கொடுத்திருப்பான் என்று வாதாடுகிறார்கள். அப்போ உங்களுக்கே தெரிகிறது அல்லவா எப்படியும் தப்பு நடந்திருக்கும் என்று, இனிமேலாவது இதை தடுக்க வேண்டும் என்றால் தண்டனை நிறைவேற்ற படவேண்டும் இனி ஒருவன் சிந்திக்க கூடாது தீமைக்கு கைகோர்க்க. நான் நிச்சயம் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற விரும்புகிறேன், தயவுகூர்த்து நாட்டிற்கு தீங்கு செய்தவனை நாட்டின் நலனுக்காக விட்டுக் கொடுங்கள். நான் சொல்வதில் தவறு இருக்கலாம், நான் புரிந்துக் கொண்டதில் தவறு இருக்கலாம் அனால் எண்ணத்தில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.