abuse leased temple land was acquired | முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்

Added : ஆக 31, 2011 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்

சென்னை : ""கடந்த ஆட்சியில் முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,'' என்று அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதம்: சம்பத்குமார் - தே.மு.தி.க: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மண்டலங்களாக பிரித்து, பக்தர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க பஸ் வசதி செய்ய வேண்டும். ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கவும், கேபிள் கார் வசதியும் செய்ய வேண்டும். நீலகிரியில் மலைரயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், வெளிநாட்டு பயணிகள், நம் தமிழகத்தின் நிலையை பற்றி தவறாக பேசுவர்.

அமைச்சர் கோகுல இந்திரா: மலை ரயில், மத்திய அரசின் ரயில்வே துறையால் இயக்கப்படுவது. எனினும், இதுபற்றி முதல்வரின் அனுமதியோடு, ரயிலை சீரமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கேபிள் கார் வசதியை பொறுத்தவரை, அதற்கான முயற்சி அல்லது ஆய்வு செய்யும் போது, அவை வனப்பகுதியில் உள்ள இடங்களாக உள்ளன. அவற்றை கேட்டு மத்திய அரசிடம் அனுமதி பெற நீண்டகாலமாகிறது.

கிருஷ்ணமூர்த்தி - அ.தி.மு.க: இந்த சட்டசபையில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 95 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, முயன்று முயன்று பார்த்தேன் சதம் போட முடியவில்லை என்றார். ஆனால், இன்று ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடிக்கு போட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள திட்டங்களை பார்த்து, இந்திய துணைக் கண்டமே மலைத்துப் போய் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் படங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும். அன்னதான திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு, புத்துணர்வுடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

உலகநாதன் - இந்திய கம்யூனிஸ்ட்: கோவில் நிலத்தில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது.

அமைச்சர் சண்முகநாதன்: யார் யார் எந்தெந்த இடத்தில் குடியிருக்கின்றனர் என்று கண்டறிந்து, அவற்றை வரன்முறை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சுரேஷ் குமார் - தே.மு.தி.க: சாத்தனூர் அணை பராமரிப்பின்றி உள்ளது. செஞ்சிக்கோட்டைக்கு, மாநில அரசு மூலம் அடிப்படை வசதிகள் செய்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில், சுற்றுலா பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலித்ததால், சுற்றுலா பயணிகளுக்கும், குத்தகைக்காரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் வரவே தயங்கினர். நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் பணிகளில் வேகமில்லை.

அமைச்சர் சண்முகநாதன்: திருசெந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பணிகளை துவக்கினார். ஆனால், இதுவரை முடிக்காமல், கடந்த ஆட்சியில் இழுத்தடித்தனர். தற்போது பணிகளை துரிதப்படுத்தியதால், முடியும் நிலையில் உள்ளது. அனைத்து கோவில்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

சுரேஷ் குமார்: எங்களது தொகுதியில் கோவில் நிலம் ஒன்று, தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த நிலம் போல, வணிக வளாகங்கள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். கோவில் கோபுரத்தை விட, அவரது கட்டடம் உயரமாக உள்ளது.

அமைச்சர் சண்முகநாதன்: கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் தவறான வழியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவற்றை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சில நிலங்களின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AA Jeyaseelan - Sivagangai,இந்தியா
01-செப்-201114:44:20 IST Report Abuse
AA Jeyaseelan சிவகங்கை தொகுதி இருந்தும் தான் அமைச்சர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினோம், சட்ட சாபில் அவர்களிடம் எந்த கோரிக்கையும், வேண்டுதல்களும் இல்லவே இலையா? சட்ட சபைக்குதான் வருகின்ரர்களா? அம்மா அவர்களாவது தயவு செய்து கண்டுகொள்ள வேண்டும்.... பாவம் எங்கள் சிவகங்கை மாவட்டம்... ஆனதை ஆகிவிட்டது போல் ஒரு வேதனை தோன்றுகிறது.... மேல் இடத்துக்கு அனுப்பின ஆலும் எதுவுமே கண்டுகொள்ள வில்லை ....
Rate this:
Share this comment
Cancel
B.Madhavan, N.G.O. WING, B.J.P. - chennai ,இந்தியா
01-செப்-201110:24:02 IST Report Abuse
B.Madhavan,   N.G.O. WING, B.J.P. கோயில் நிலங்களை தவறுதலாக பயன்படுத்தியதால் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் பூங்காவை ஆக்கிரமித்து கோயில் கட்டிய சம்பவம் சென்னை சோழங்கநல்லூர் புதிய குமரன் நகரில் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை