E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

16 செப்
2011
05:38
பதிவு செய்த நாள்
செப் 14,2011 23:04

புதுடில்லி: "இந்தியாவை பொறுத்தவரை, திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது' என, அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்கு குழு (சி.ஆர்.எஸ்.,) அந்த நாட்டின் எம்.பி.,க்களுக்காக, இந்தியாவின் முக்கிய விஷயங்களை விளக்கும் அறிக்கையை தயாரித்துள்ளது. 94 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இந்திய மாநிலங்களை பொறுத்தவரை, திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், சிறந்த முன் உதாரணமாக, குஜராத் மாநிலம் திகழ்கிறது. இந்த மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடி, 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும், அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டி, செயல்படுத்தினார்.
இதன் காரணமாக, குஜராத் மாநிலம், பல்வேறு துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்பு நாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது போன்ற நடவடிக்கை மூலம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, மோடி விளங்குகிறார். சாலை மேம்பாடு, மின்சார வசதி ஆகியவற்றுக்காக, பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்தார், மோடி. இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி, சமீப ஆண்டுகளில், 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், குஜராத் மாநில அரசு, முதலிடத்தில் உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ், மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்துள்ளன. ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், வெறும் 5 சதவீதம் பேர் தான், குஜராத்தில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், குஜராத் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், ஐந்தில் ஒரு பங்கு, குஜராத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிதிஷ் குமாருக்கும் பாராட்டு: குஜராத்துக்கு அடுத்தபடியாக, பீகார் மாநிலமும், நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலம், நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்ற பின், நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தது, கட்டமைப்பு மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது ஆகியவை, நிதிஷ் குமாரின் சாதனைகள். இதன் மூலம், பீகார் மாநில மக்கள், நேரடியாக பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், உ.பி., முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா விவகாரம் ஆகியவை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலா, மோடியா? : வரும் 2014ம் ஆண்டில் காங்., பொதுச் செயலர் ராகுல் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே பிரதமர் பதவிக்காக, நேரடி போட்டி ஏற்படலாம் என, அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்குழு (சி.ஆர்.எஸ்.,) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, அரசியல் சார்பற்ற சுயேச்சையான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக் குழு அறிக்கை : பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்பு நாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது போன்ற நடைமுறைகளை குஜராத்தில் செயல்படுத்தி, அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்ததன் மூலம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும், முக்கிய காரணமாக நரேந்திர மோடி விளங்குகிறார்





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (189)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muzibur Rahman - chennai,இந்தியா
21-செப்-201122:18:02 IST Report Abuse
Muzibur Rahman ஒரு கொலைகாரனுக்கு இவ்வளவு பாராட்டுக்கள்,இது தான் இந்திய தேசத்தின் பெருமை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Mekala Ramesh - Mumbai,இந்தியா
22-செப்-201112:20:30 IST Report Abuse
Mekala Rameshகசாப் ரொம்ப தியாகியா.அப்சல் குரு என்ன அஹிம்சாவாதியா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Muzibur Rahman - chennai,இந்தியா
24-செப்-201110:42:29 IST Report Abuse
Muzibur Rahmanஎந்த கொலைகாரனையும் நான் ஆதரிக்கப்போவதில்லை.அப்போ நீங்கள் இந்த கொலைகாரனை ஆதரிக்கிறீர்கள் என்பதை பார்க்கும்போது முஸ்லிம்களை கொல்பவர்களை ஆதரிக்கிறீர்கள் என்ற வுண்மை தெரிகிறது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ravirao - Madurai,இந்தியா
21-செப்-201121:56:33 IST Report Abuse
ravirao அமெரிக்காவின் மோடி ஆதரவு அறிக்கை இந்தியாவின் அரசியலில் பெரிய மாறுதலை செய்யாது எனினும் இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் சாதனைகள் மக்களின் மததியில் மிகபெரிய ஏமாற்றத்தை ஆழமாக பதித்துள்ளது. மத்திய அரசில் மாற்றம் வேண்டும் எனபது அவசியமாகவும் அவசரதேவையாகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வேளையில் தேசிய அளவில் இன்று வரை ஊழல் சகதியில் சிக்காமல் குஜராத் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் கேவலமான பழிவாங்கும் அரசியலுக்கு இடையிலும் மிகச் சிறப்பாக வழி நடத்தி செல்லும் நரேந்திரா மோடி பாரதத்தின் பிரதமராக வருவதில் மக்களுக்கு மகிழ்ச்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை. ரவி. R.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ibrahim - doha,கத்தார்
21-செப்-201112:18:40 IST Report Abuse
ibrahim அமெரிக்கா உலகின் No.1 தீவிரவாதி, மோடி, பால்தாக்கரே போன்றவர்கள் லோக்கல் தீவிரவாதிகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
arulkumar - chennai ,இந்தியா
20-செப்-201121:35:33 IST Report Abuse
arulkumar மோடி பிரதமரா வந்தா கண்டிபா 2020 இந்தியா வல்லரசுதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vijayalakshmi SPT - Chennai,இந்தியா
21-செப்-201114:22:31 IST Report Abuse
Vijayalakshmi SPTமோடி அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வு செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஒபாமா Vs மோடி என்று அமெரிக்கா விவாதித்தால் நாம் ஓசைப்படாமல் JJ அல்லது MK வை பிரதமராக்கி எல்லோருக்கும் இலவசமாக அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை என்று கொண்டாட்டம் போடலாம். வல்லரசாகி ஏன் நாம் வம்பு சண்டையில் நாசமாக வேண்டும்?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
agni shiva - New Delhi,இந்தியா
20-செப்-201110:59:22 IST Report Abuse
agni shiva வாழ்த்துக்கள் இந்தியாவின் இரும்பு மனிதரே ! சீரழிந்து கொண்டு கொண்டிருக்கும் தற்போதைய இந்தியாவை தடுத்து நிறுத்தி எமது இளம் தலைமுறையாவது வலிமையான வழமையான பாரதத்தில் வளர நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
20-செப்-201106:36:12 IST Report Abuse
Natarajan Ramanathan மோடி மிக நல்ல பிரதமராக அமைய வேண்டும். சோனியா சமீபத்தில் எங்கோ ரகசிய பயணம் சென்றதுகூட ச்விச்சர்லாந்து வங்கி பணத்தை பதுககவே என்று ஒரு நியூஸ். சோனியா கும்பல் ஒழியவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
19-செப்-201113:27:47 IST Report Abuse
s.r.ramkrushna sastri "அமெரிக்கா பாராட்டி விட்டால் அவர் ரொம்ப நல்லவரா?" என்று ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். உண்மைதான்! அப்பொழுது, அமெரிக்கா பாராட்டியவுடனேயே நம்முடைய தலைவர்கள் இந்த பாராட்டுதலுக்கு தைரியமாக ஒரு கண்டனம் தெரிவித்து, "எங்க ஆளை பத்தி உனக்கு ரொம்ப தெரியுமா, சும்மா ....மூடிகினு கெட" அப்பிடின்னு அறிக்கை விட வேண்டியதுதானே? இவர்கள் ஏன் ....மூடிகினு இருக்கிறார்கள்? நாம் ஒசாமா பின் லேடனை "ரொம்ப நல்லவன்" அப்பிடின்னு ஒருவார்த்தை சொல்லி இருந்தால், அமெரிக்கா எப்படி அதற்கு பதில் சொல்லி இருக்கும் என்று நமக்கு தெரியும்! இவ்வளவு ஏன் இது வரை அமெரிக்கா துரத்தி துரத்தி போட்டு தள்ளிய ஒசாமா பின் லேடனை அவனுடைய தீவிரவாத செயல்களுக்காக எந்த ஒரு முதுகெலும்பு இருக்கிற இந்திய அரசியல் வாதியாவது கண்டித்தானா? நாட்டை கொள்ளை அடிக்கவே நேரம் போதவில்லை! .......பசங்க! மோசமான அரசியல் வாதியாக இருந்தால் அவன் மோடியா இருந்தால் என்ன கேடியா இருந்தால் என்ன, எலக்ஷனில் நம்ம கைவரிசையை காட்ட போறோம்! நம்மகிட்டே இருக்கிற ஆயுதம் வோட்டு ஒண்ணுதானே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vijayalakshmi SPT - Chennai,இந்தியா
19-செப்-201104:13:29 IST Report Abuse
Vijayalakshmi SPT மகாராஷ்டிரா அபாரமாக வளர்கிறது என்று கூறிகொண்டிருந்த சரத் பவார் ஊழல் சக்கிரவர்த்தி. தமிழகம் தகவல் தொழில்நுட்பத்தால் தலைதெறிக்க முன்னேற்ற பாதையில் ஓடுகிறது என்ற கருணாநிதி குடும்பமே ஊழல் மன்னாதி மன்னர்கள். குஜராத் வளர்ச்சி ஊழல் இல்லாமல் என்று நம்புவதற்கில்லை. ஆனால் மோதிக்கு சரியான பதவி ஜனாதிபதி பதவியாகத்தான் இருக்கும். இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு நல்லவர் என்றும் வல்லவர் என்றும் முத்திரையை மக்கள் எதிர்பார்க்கவில்லை. திட்டு வாங்க சரியான ஆளாகத்தான் ஒருவர் தேவை. மோதி சரிபட மாட்டார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
A.K.Samy - BrownDeer,யூ.எஸ்.ஏ
19-செப்-201100:57:38 IST Report Abuse
A.K.Samy மொடிஜி, நிதிஷ்ஜி இவர்களது சாதனைகள் பற்றி அவ்வப்போது தினமலரில் படித்தவைதான். இவர்களது சாதனைகளை இந்நாட்டின் எந்த கொம்பனும், ஏன் இவர்கள் சார்ந்த கட்சிகள்கூட இவர்களைப் பெரிதாக புகழவில்லை. அரசு செலவில் கோடிகளை கொட்டி விழா எடுத்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. டாக்டர் அப்துல் கலாம் கூறியது போல், இவர்கள் நடத்துவது மேம்பாட்டு அரசியல், விளம்மர அரசியல் அல்ல. மக்களை வரியால் கசக்கிப் புழிந்து கஜானாவில் சேர்த்த பணத்தை நியாயமான திட்டங்களுக்கு, ஊழல், லஞ்சம், கமிசன் என்ற பெயரில் கொள்ளை அடிக்காமல் செயல்படித்தியதால் அந்த மாநிலங்கள் முன்னேற்றம் கண்டன. அமெரிக்க பார்லி குழு சுயமாக நடத்திய சர்வேயில் இவர்களைப் பாராட்டியிருக்கிரது. அமெரிக்க அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. குஜராத் கலவரத்திர்க்கும் மோடிஜிக்கும் சம்பந்தம் இல்லை. கரசேவர்கள் சென்ற ரயிலை எரித்தற்கு யார் காரணம்? இந்த நாட்டின் வழர்ச்சியைக் கெடுப்பது, மொழி, மத வெறியர்கள், குப்பை-ஆடம்பர அரசியல்வாதிகள். ஆகயால் குப்பையில் கிடைத்த இந்த குன்றிமுத்துக்களை நாம் தலைவணங்கி பாராட்டலாமே!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vijayalakshmi SPT - Chennai,இந்தியா
18-செப்-201123:45:55 IST Report Abuse
Vijayalakshmi SPT ரிலையன்ஸ் என்பது இந்தியாவின் 5 +% GDP . குஜராத் - ரிலையன்ஸ் என்று கணக்கு போட்டு பார்த்தால் மோடி கேள்விக்குறி அல்லவா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.