உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் நேரில் ஆதரவு | கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் நேரில் ஆதரவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் நேரில் ஆதரவு

Added : செப் 18, 2011 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருநெல்வேலி :கூடங்குளம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த விஜயகாந்த் "பிடி' கொடுக்காமல்நழுவினார்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 14 ஆயிரம்கோடி ரூபாய் செலவில் ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் கட்டுமான பணிகள் நடக்கிறது. முதல் அணுஉலையில் மின் உற்பத்திவிரைவில் துவங்க உள்ளது. அண்மையில் ஜப்பானில் பிகுஷிமா அணுஉலை, பிரான்ஸ் நாட்டில் அணுஉலை பாதிப்புஆகியவை காரணமாக கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியை துவக்க கூடாது என வலியுறுத்தி கூடங்குளத்தை அடுத்துள்ளஇடிந்தகரையில் லூர்துஅன்னை ஆலயம் முன்பாக செப்.,11 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். வைகோ, சீமான், பா.ம.க.,ஜி.கே.மணி உள்ளிட்டோர் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.க.,வை சேர்ந்தவர். அவரும் கடந்த மூன் று தினங்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இடிந்தகரைக்கு வந்தார். 8 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு பந்தலில் படுத்திருப்பவர்களுக்கு கை கொடுத்தார். பின்னர் போராட்டத்தை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு திட்டத்தை துவக்கும்போது அதுகுறித்துமக்களிடம் கருத்து கேட்பது வழக்கம். இதே பகுதியில் டாடாவுக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்தபோதும் மக்களிடம்கருத்து கேட்டனர். ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு ஏன் மக்களிடம் கருத்து கேட்கவில்லை.இந்த மக்களின் போராட்டத்திற்கு தே.மு.தி.க.,ஆதரவு தெரிவிக்கிறது. மக்களின் கோரிக்கை மனுவை மாநில, மத்திய அரசிடம் அனுப்பிவைப்போம் என்றார். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்யவேண்டும்.உங்களுக்கு ஆதரவாக எங்கள் எம்.எல்.ஏ.,இங்கேயே இருப்பார் என்றார்.அணுஉலைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவீர்களா.. போராட்டம் தொடர்பாகதே.மு.தி.க.,நிலைப்பாடு என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விஜயகாந்த் பதிலளிக்காமல் "அரசியல் பேசுவதானால் வெளியே வேறு இடம் உள்ளது..இங்கே அரசியல் பேச மாட்டேன் ' என நழுவினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dhas - chennai,இந்தியா
19-செப்-201111:17:28 IST Report Abuse
dhas this is problem with the basic human rights of idinthakarai people. The DMK and all communist parties silent against these issue. this is basic livelihood the fellow citizens. All the tamil people should react against the issue. yes electricity is basic thing. But it shoud not burn the poor fisherman and get it
Rate this:
Share this comment
Cancel
Devaraj - Aveiro,போர்ச்சுகல்
18-செப்-201123:41:16 IST Report Abuse
Devaraj கேப்டனின் ஆதரவு அங்கு போராடும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. எனவே அதை குறை கூறாமல் அனைத்து அரசியல்வாதிகளும் போரட்டத்திற்கு ஆதரவு தாருங்களேன் பார்க்கலாம்...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை