A poor student work in brick factory ,as he got medical seat | டாக்டருக்கு படிக்க "சீட்' கிடைத்தும் செங்கல் சூளையில் வேலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டருக்கு படிக்க "சீட்' கிடைத்தும் செங்கல் சூளையில் வேலை

Updated : ஜூலை 06, 2010 | Added : ஜூலை 04, 2010 | கருத்துகள் (230)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டாக்டர் படிக்க, சீட்,பணம், செங்கல் சூளை, வேலை,ஏழை மாணவர்

இடைப்பாடி : டாக்டர் கனவு கைகூடியும், பணமில்லாததால் இடைப்பாடி மாணவர் ஒருவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.


சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மல்லிபாளையத்தை சேர்ந்தவர் சித்தையன்(47). அவரது மனைவி மாரியம்மாள் (45). போடிநாய்க்கன்பட்டி செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். அவர்களது  மூன்றாவது மகன் கோவிந்தராஜ், கடந்த கல்வி ஆண்டில் இடைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.பொதுத்தேர்வில் தமிழ்- 182, ஆங்கிலம்- 132, கணிதம்- 177, இயற்பியல்- 197, வேதியியல்- 200, உயிரியல்- 191 என 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால்,  மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.


கடந்த 1ம் தேதி நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க  அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி  கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.


இது குறித்து மாணவர் கோவிந்தராஜின் டியூஷன் ஆசிரியர் பிரகாஷ் கூறியதாவது: மாணவர் கோவிந்தராஜ் மிகவும் ஏழை. பொதுத்தேர்வில் மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் 194.75 எடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். செங்கல் சூளையில் வேலை செய்து 7,000 ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அவரது  படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


( படிக்க வசதி இல்லாத இந்த மாணவருக்கு உதவ தினமலர் வாசகர்கள் பலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.


எஸ்.கோவிந்தராஜ், த/பெ. சி்த்தையன், 4/149, மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல், இடைப்பாடி தாலுகா- 637 105; மொபைல்: 96882 26467)


வங்கியின் அக்கவுண்ட் எண் :  SBI N 000221331245117385(வெளிநாட்டினர்)


SBI N 0002213-31245117385(இந்தியா)


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (230)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.palanisamy - salem,இந்தியா
04-ஆக-201021:44:54 IST Report Abuse
g.palanisamy the news and lesson all the matter are very good.
Rate this:
Share this comment
Cancel
kalai - Dubai,இந்தியா
27-ஜூலை-201020:34:42 IST Report Abuse
kalai நீங்கள் உண்மையான டாக்டர் ஆக வாழ்த்துக்கள் கலை
Rate this:
Share this comment
Cancel
k.manav - saudi,இந்தியா
20-ஜூலை-201015:42:10 IST Report Abuse
k.manav நான் இதுவரை வாழ்கையில் மற்ற மனிதர்களை இரக்கம் இல்லாதவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்பொழுது நான் நினைக்கிறேன் நான் ஒரு முட்டாள் . நான் இவர்களுடன் வாழ்ழ்ந்து கொண்டு இருப்பதில் பெருமை அடைகிறேன்
Rate this:
Share this comment
Cancel
சூர்யா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூலை-201000:25:40 IST Report Abuse
சூர்யா Dear all Thanks to all for the supports, we wish Mr.Govindaraj to get enough support financially to join and complete his medical studies in distiction and hope he will do his best to the society and needy people , medical students should dedicate themselves in welfare of society. Shortly we will send some amount to the mentioned number to help some extent .
Rate this:
Share this comment
Cancel
kumar - Chennai,இந்தியா
09-ஜூலை-201010:51:58 IST Report Abuse
kumar Dinamalar, the government have allocated huge budget for education loan, there are thousand of students who are unable to proceed their studies because of lack of money. Not everyone would able to approach news media and get help from public. I wounder why this person can't get education loan!.
Rate this:
Share this comment
Cancel
சி.nagaraj - abudhabi,இந்தியா
09-ஜூலை-201008:43:39 IST Report Abuse
சி.nagaraj நானும் கோவிந்தராஜூக்கு முடிந்த உதவியை செய்ய முயல்கிறேன். இதுபோல் சிரமப்படும் பல மாணவர்களுக்கு தினமலர் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உதவி கிடைத்திட முன்வர வேண்டும். இதற்காக ஒரு தனி அமைப்பை துவக்கவும்......மிக்க நன்றி......
Rate this:
Share this comment
Cancel
shrivishnu - neyveli,இந்தியா
08-ஜூலை-201021:53:15 IST Report Abuse
shrivishnu please contact rotary club of salem they are doing excellant education help to the poor people
Rate this:
Share this comment
Cancel
muthu - chennai,இந்தியா
08-ஜூலை-201020:23:19 IST Report Abuse
muthu any one let me know how to transfer money from my hdfc account to sbi account. is there any way?
Rate this:
Share this comment
Cancel
எ.முஜிபுர் ரஹ்மான் - pudukkottaitamilnadu,இந்தியா
08-ஜூலை-201019:39:54 IST Report Abuse
எ.முஜிபுர் ரஹ்மான் இந்த மாணவனுக்கு உதவி செய்ய வந்த அனைவர்க்கும் முஸ்லிம் ஐக்கிய மன்றம் சார்பில் நன்றி
Rate this:
Share this comment
Cancel
ர.மோகன் ராஜ் - Bangalore,இந்தியா
08-ஜூலை-201019:34:30 IST Report Abuse
ர.மோகன் ராஜ் Congratulations and Best Wishes to Govindaraj on his magnificent achievements. In the past also, I have come across such students. But, what I am wondering is why they have not approached Banks for Education Loan. Govt has made it mandatory to give Education Loans to the needy people. I know many students whom got seats in private Engg colleges but still were able to get Education Loans. While this is the case, why can't Govindaraj, who has got seat in Govt Medical College, approach their local Bank and get the loan. In this way, he is guaranteed to get the monetary support for all his 5 years medical education. Depending on individuals' support would not be an advisable one. Just FYI, currently I am helping a poor girl (bullock cart rider's daughter), who got a seat in NIT, Trichy, to get Education Loan for her higher studies. My suggestion to Govindaraj and all other students in this stature, to approach for Bank loan and become self-reliant. Best Wishes again. RMR
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை