"புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

" நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், "இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்' என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, ""புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.


புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,


கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


- த.காளிப்பாண்டி -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik * - sydney,ஆஸ்திரேலியா
21-அக்-201205:57:43 IST Report Abuse
Karthik * உலகின் பல நாடுகளில் புகையிலை நிறுவனங்கள் பெண்களை நம்பித்தான் வியாபாரம் நடத்துகின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா ?
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan - dharmapuri,இந்தியா
19-அக்-201215:48:52 IST Report Abuse
Balakrishnan அவளுங்க பண்ற தொல்ல தாங்க முடியலடா சாமீ .......... பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை நிருபித்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Panneer - chennai,இந்தியா
17-அக்-201219:49:41 IST Report Abuse
Panneer பெண்களா இவர்கள் . பிசாசுகள் வெறிபிடித்த கேவலமான பிறவிகள் சாபக்கேடு. இருப்பதைவிட கான்செர் வந்து சாவதே மேல் .
Rate this:
Share this comment
Cancel
Panneer - chennai,இந்தியா
17-அக்-201219:30:22 IST Report Abuse
Panneer பெண்மையை சக்தியாக வணங்கும் தமிழ்நாட்டில் இப்படியும் ஈன பிறவிகள் இருப்பது வெட்ககேடு. .
Rate this:
Share this comment
Cancel
G Senthil Kumar - bangalore,இந்தியா
17-அக்-201216:05:33 IST Report Abuse
G Senthil Kumar முடிந்தால் அரசாங்கம் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mani.A - tirupur,இந்தியா
17-அக்-201212:01:50 IST Report Abuse
Mani.A என்ன கொடுமை சார் ...
Rate this:
Share this comment
Cancel
N.Varadharajan - Pondicherry,இந்தியா
17-அக்-201206:56:03 IST Report Abuse
N.Varadharajan புகை உடல் நலத்திற்கு தீங்கானது.
Rate this:
Share this comment
Cancel
N.Varadharajan - Pondicherry,இந்தியா
17-அக்-201206:50:14 IST Report Abuse
N.Varadharajan பெண் விடுதலை இதுதான்
Rate this:
Share this comment
Cancel
vjay - uganda,அல்பேனியா
16-அக்-201222:14:44 IST Report Abuse
vjay ஆண் பெண்ணு சம உரிமை பேச எவ்ளோ விஷயம் இருக்கு. தப்பு பண்ணா எல்லாருக்கும் ஒண்ணு தான். ஆனா ஒண்ணு, பசங்க பண்றாங்க நு பொண்ணுங்க எல்லாத்தையும் பண்ணிட முடியாது, நாங்க வீட்ல சொல்லிட்டு தம் போடறோம் நீங்களும் பண்ணி பாருங்க
Rate this:
Share this comment
Cancel
rajadurai - bangalore,இந்தியா
16-அக்-201220:51:43 IST Report Abuse
rajadurai இந்த சர்வே பெங்களூர்-ல் எடுத்தாகி விட்டதா? எனக்கென்னமோ சென்னையை விட பெங்களூர்-இல் அதிகம் என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்