VILUPPURAM NEWS | விழுப்புரம் சாலாமேட்டில்அஷ்ட வராகி அம்மன் கோவில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் சாலாமேட்டில்அஷ்ட வராகி அம்மன் கோவில்

Added : அக் 16, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விழுப்புரம் அடுத்த சாலாமேட்டில் உலகிலேயே வராகி அம்மனுக்காக முதன் முதலில் அமைக்கப்பட்ட கோவில் அஷ்டவராகி கோவிலாகும்.
வராகி தான் இந்த பூமாதேவி என்பதால், வராகி அம்மனை வழிபட்டாலே பிறவி பிணி அகலும். வராகி தாய் ராஜ ராஜேஸ்வரியின் குதிரை படைதலைவியாகவும், திருப்பதி அலர்மேல் மங்கா என்று அழைக்கப்படும் பத்மாவதி தாயின் அந்தப்புற காவல் தெய்வமாய் இருப்பவளே வராகி என புராணத்தில் கூறப்படுகிறது.

அருள் ஆற்றலையும், அஷ்டமாதி சித்தியையும் தரும் மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி ஆக இந்த எட்டு வராகி தேவிகளுக்கு கட்டப்பட்டுள்ள கோவில் ஸ்ரீ அஷ்டவராகி கோவிலாகும்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு செல்லும் வழியில் அமைந்துள்ள இக் கோவிலில் வராகி சிலை அத்தி மரத்தால் 8 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளது.இது வராகி அம்மனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில்.பஞ்சமி பூஜை: ஆன்மிக வழிபாட்டில் முக்கியத்துவமாக கருதப்படுவது திதி வழிபாடு.இதில் வராகி தேவிக்கு செய்யும் பூஜை பஞ்சமி திதி ஆகும். வராகி அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் பஞ்சமியன்று பஞ்சமி பூஜை நடந்து வருகிறது.திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி உச்சிகால பூஜை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை மகா அபிஷேகமும் நடக்கிறது.இருப்பிடம் : விழுப்புரம் அடுத்த சாலாமேட்டில் அமைந்துள்ள இத்தலத்திற்கு விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு.போன் : சாக்த ஸ்ரீ ஸ்ரீ மகேஷ்ராம் 98414 10070.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X