எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி:மருத்துவமனையில் அனுமதி | எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Updated : அக் 17, 2011 | Added : அக் 16, 2011 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி:மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு:நில ஊழல் விவகாரத்தில் சிக்கி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், பெங்களூரு ஜெயதேவா இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நில மறு அறிவிப்பு மோசடியில் சிக்கிய முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் மாலை லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை, வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதே சிறையில், ஊழல் வழக்கில் சிக்கிய மற்ற இரு முன்னாள் அமைச்சர்களான கட்டா சுப்பிரமணியநாயுடு, கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.


சிறையில் அடைக்கப்பட்ட எடியூரப்பாவுக்கு, தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் நள்ளிரவில் வாந்தி எடுத்தார். இதனால், உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். நெஞ்சுவலி ஏற்பட்டதால், அதிகாலை 1.30 மணியளவில், ஜெயதேவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்று காலையில், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத், எடியூரப்பா உடல்நிலை குறித்து பரிசோதித்தார்.


அவர் கூறுகையில், ""மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள எடியூரப்பாவின் ரத்த அழுத்தம், இதய சோதனை நடத்திய பின், எக்கோ, நியூக்ளியர், இ.சி.ஜி., உட்பட ரத்த சோதனைகள் நடத்தப்படும். 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை டாக்டர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும். எடியூரப்பாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது சோதனை நடத்தி, அவரது உடல்நிலையில் எந்த மாறுபாடும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள, டாக்டர்கள் பிரசாத், ரவீந்திரநாத், நரசிம்ம ஷெட்டி, ஜெகதீஷ் ஆகியோர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பின், இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அறிக்கை வெளியிடப்படும்.


ரத்த அழுத்தம், முதுகுவலி, நெஞ்சுவலி ஆகியவற்றுக்காக, எடியூரப்பாவுக்கு, இன்று "ஆஞ்சியோகிராப்' செய்யப்படும்,'' என்றார்.முதல்வர் சதானந்த கவுடா உட்பட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எடியூரப்பாவை சந்தித்து, அவரது உடல்நலத்தை விசாரித்த வண்ணம் இருந்தனர். மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் வழக்கறிஞர், இன்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யவுள்ளார்.


விஜய் கோயல் பா.ஜ., பொதுச் செயலர்:எடியூரப்பா கைதால், ஊழலுக்கு எதிரான அத்வானியின் யாத்திரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்தை வலுவடையச் செய்யும். தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற செய்தியை சொல்ல காங்கிரஸ் தவறி விட்டது. டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எதிராக மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டும், அவருக்கு எதிராக காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சித்தராமய்யாகர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்:கர்நாடக பா.ஜ., அரசில் உள்ள பல அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே, மாநிலத்தில் உள்ள பா.ஜ., அரசு, பதவியில் தொடர தார்மீக உரிமையில்லை. உடனடியாக சட்டசபையை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தலை நடத்த வேண்டும்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
17-அக்-201114:11:17 IST Report Abuse
rajan அது எப்படி உங்களுக்கு மட்டும் இந்த நேரத்தில போய் நெஞ்சு வலி அது இதுன்னு இந்த அளவுக்கு சீரியஸ் ஆகிடறீங்க. நீங்க பண்ணுன ஊழல்களை நினைத்து மக்களுக்கல்ல இந்த மாதிரி அட்டாக் வரணும். எதுக்கும் உடம்ப நல்ல பாத்துகோங்க. அப்புறம் மேல ஒகனேகல் கிருஷ்ணா ராஜா சாகர் தண்ணி என ஷோ பண்ணலாம்.
Rate this:
Share this comment
Cancel
ksjagan1 - chennai,இந்தியா
17-அக்-201113:28:16 IST Report Abuse
ksjagan1 இது போன்றவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை...
Rate this:
Share this comment
Cancel
RAMALINGAM MANI - Chennai,இந்தியா
17-அக்-201108:35:31 IST Report Abuse
RAMALINGAM MANI எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துள்ள சிறப்பு வியாதிதான் இவருக்கும் வந்துள்ளது கவலை பட ஒன்றும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Rajunadar Rangaraj - Erode,இந்தியா
17-அக்-201107:58:22 IST Report Abuse
Rajunadar Rangaraj அரசு மருத்துவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு நல்கி இதைபோல் பெரிய மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க கட்டாய சட்டம் வேண்டும்;;அதிலும் கைதானவுடன் நெஞ்சு வலி ,வயிற்று வலி ஞாபக மறதிவருபவர்களுக்கு உடனே அரசு ஆஸ்பத்திரியில் அல்லது ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்தனியார் மருத்துவமனைக்கு ;எந்த காரணத்தை கொண்டும் கொண்டு போக கூடாது ;
Rate this:
Share this comment
Cancel
Nagarajan.Su - Chennai,இந்தியா
17-அக்-201107:53:08 IST Report Abuse
Nagarajan.Su ஐயோ வந்துவிட்டதா நெஞ்சுவலி! என்னடா இது கைது செய்யும்போதே வரவில்லையே என நினைத்தேன். இதை..இதை.. தான் எதிர்பார்த்திருந்தேன். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
siva - Farmington,யூ.எஸ்.ஏ
17-அக்-201100:53:07 IST Report Abuse
siva Politicians always get sick and heart attack if they stay in jail. more over in karnataka ruling party ex-CM ......no comments. He was healthy when being CM so better to make him the CM again considering his health condition.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை