குஜராத் முதல்வர் மோடி துவாரகாவில் உண்ணாவிரதம் | குஜராத் முதல்வர் மோடி துவாரகாவில் உண்ணாவிரதம்| Dinamalar

குஜராத் முதல்வர் மோடி துவாரகாவில் உண்ணாவிரதம்

Added : அக் 16, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத் முதல்வர் மோடி  துவாரகாவில் உண்ணாவிரதம்

துவாரகா:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இரண்டாவது சுற்று உண்ணாவிரதத்தை துவாரகாவில் நேற்று மேற்கொண்டார். இவருக்குப் போட்டியாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும் உண்ணாவிரதம் இருந்தார்.குஜராத்தின், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை (சத்பாவனா மிஷன்) பலப்படுத்தும் வகையில், கடந்த மாதம் 17ம் துவங்கி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார் மோடி. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும், தன் உண்ணாவிரதம் நடக்கும் என அறிவித்தார்.


அதன்படி, துவாரகா நகரில், நேற்று இரண்டாவது சுற்று உண்ணாவிரதத்தை மோடி மேற்கொண்டார். அப்போது, அவர், ""எந்த ஒரு லாப நோக்கோடும், நான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவில்லை.குஜராத்தின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான், இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன், பூகம்பத்தால் பாகிஸ்தானும், காஷ்மீரும் பாதிக்கப்பட்ட போது, முதலில் உதவிக் கரம் நீட்டியது குஜராத் தான்' என்றார்.


துவாரகா நகரில், மோடி உண்ணாவிரதம் இருந்த, 3 கிலோ மீட்டர் தொலைவில், இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விக்ரம் மடம் உண்ணாவிரதம் இருந்தார்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆதரவாகச் செயல்பட்ட வழக்கறிஞர் வி.எச்.கனராவை கைது செய்ய, மோடி அரசு முயற்சி செய்வதற்கு, விக்ரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Ramesh - kanyakumari,இந்தியா
17-அக்-201108:30:45 IST Report Abuse
N. Ramesh Fasting against unemployment to be solved all the problem of India.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை