சொல்கிறார்கள் | சொல்கிறார்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : நவ 01, 2011
சொல்கிறார்கள்

"டிவி'யோடு மட்டும் மூழ்குவதில்லை பெண்கள்! ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைமையான, பென்னிங்டன் நூலகத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆண்டாள்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த, பென்னிங்டன் என்ற ஆங்கிலேயரால் துவக்கப்பட்ட இந்நூலகம், 136 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கு, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன.மிகப் பழைமை யான, சட்ட நுணுக்கங்கள் அடங்கிய நூல்கள் இங்கே இருப்பதால், வழக்கறிஞர்கள் தான் அதிகளவில் இந்நூலகத்தைத் தேடி வருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர், வரலாற்று ஆய்வாளர்கள், மதம் சம்பந்தமான தேடல் உள்ளவர்களுக்கும், இந்நூலகம் அரிய பொக்கிஷமாக உள்ளது. இந்நூலகத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், 1920ம் ஆண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட நூல்களைக் கூட இங்கு காண முடியும். இங்கு வேலை பார்க்கும் அனைவரும், "லைப்ரரி இன்பர்மேஷன் சயின்சில்' மாஸ்டர் பட்டம் பெற்ற பெண்களாக இருப்பதால், நூலகத்தை தங்கள் வீட்டைப் போல, சுத்தமாகப் பராமரிக்கின்றனர்.கோல்கட்டாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை, இந்நூலகத்தை சிறந்த நூலகமாகத் தேர்வு செய்து கவுரவித்துள்ளது. கூடவே, தூய்மையான நூலகம் என்னும் சிறப்பு விருதையும் அளித்துள்ளது."டிவி' சீரியல்களில் தான், பெண்கள் அதிகம் மூழ்கிக் கிடக்கின்றனர் என்ற எண்ணத்தை உடைப்பது போல, ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்கள், அதிகளவில் இந்நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஞாயி றும், "வீடியோ கேசட்'டின் மூலம், குழந்தைகளுக்கென ஆன்மிகக் கதைகள், வரலாற்று விளக்கப் படங்கள் திரையிடப்படுகின்றன.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X