மெட்ரோ ரயில், மேம்பால ரயில், புறநகர் ரயில்களின் ஜங்ஷனாகிறது பரங்கிமலை ரயில் நிலையம் | மெட்ரோ ரயில், மேம்பால ரயில், புறநகர் ரயில்களின் ஜங்ஷனாகிறது பரங்கிமலை ரயில் நிலையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில், மேம்பால ரயில், புறநகர் ரயில்களின் ஜங்ஷனாகிறது பரங்கிமலை ரயில் நிலையம்

Added : நவ 03, 2011 | கருத்துகள் (1)
Advertisement
மெட்ரோ ரயில், மேம்பால ரயில், புறநகர் ரயில்களின் ஜங்ஷனாகிறது பரங்கிமலை ரயில் நிலையம்

மேம்பால மற்றும் மெட்ரோ ரயில் நிலையம், பரங்கிமலை புறநகர் மின்சார ரயில் நிலையத்தின், இருபுறங்களிலும் அமைவதால், சென்னையில் முக்கிய ரயில் நிலைய ஜங்ஷனாக, பரங்கிமலை ரயில் நிலையம் உயர்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரலிலிருந்து, கோயம்பேடு வழியாக, பரங்கிமலை வரையிலும், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.


சந்திப்பு நிலையம் : சென்னை சென்ட்ரலிலிருந்து, கோயம்பேடு வழியாக, பரங்கிமலை வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதையில், பரங்கிமலை புறநகர் மின்சார ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. சென்னை பீச் - வேளச்சேரி இடையே இயக்கப்படும் மேம்பால ரயில் போக்குவரத்திற்கு, பரங்கிமலை வரை, 484 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போதைய பரங்கிமலை புறநகர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில், மேம்பால ரயில்நிலையம் அமைகிறது. இதனால், மெட்ரோ, மேம்பாலம் மற்றும் தாம்பரம்-பீச் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தின் சந்திப்பு நிலையமாக, பரங்கிமலை ரயில் நிலையம் உயர்கிறது.


இரண்டு மாடி : இந்நிலையங்களை ஒன்றிணைத்து, முதற்கட்டமாக, 78 கோடி ரூபாயில், இரண்டு மாடிகள் கொண்டதாக, 12 மீ., உயரத்தில் மேம்பால ரயில் நிலையமும், 23.03 மீ., உயரத்தில், மெட்ரோ ரயில் நிலையமும் அமைய உள்ளது. தற்போது, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, பில்லர் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், மேம்பால ரயில் திட்டத்திற்கான கட்டடப் பணிகளும், விரைவில் துவங்க உள்ளது. இப்பணி, வரும் 2013 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் போது, தரைத் தளத்தில் தாம்பரம்-பீச் புறநகர் மின்சார ரயில் நிலையமும், முதல் தளத்தில் மேம்பால ரயில் நிலையமும், இரண்டாவது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமையும். பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து, சென்னையில் எந்த பகுதிக்கும் ரயிலில் செல்லும் வசதி ஏற்படும். சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடியும் வெகுவாக குறையும். இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் அளவிற்கு, மக்கள் போக்குவரத்தில், முக்கிய ரயில் நிலையமாக, பரங்கிமலை நிலையம் திகழ உள்ளது.


மூன்றரை நிமிடத்திற்கு ஒரு ரயில்... : பரங்கிமலை ரயில் நிலைய முக்கியத்துவம் குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பீச் - தாம்பரம் இடையே, தினமும், 230 ரயில் சர்வீஸ்களில், 2.5 லட்சம் பேரும், சென்னை பீச் - வேளச்சேரி இடையே, 134 சர்வீஸ்களில், ஒரு லட்சம் பேரும் பயணிக்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள, காலை மற்றும் மாலை வேளைகளில், 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 15லிருந்து 20 நிமிட இடைவெளியில், ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்ததும், முதல் கட்டமாக, நான்கு பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கினால், ஒரு மணிநேரத்திற்கு, 24 ஆயிரத்து 324 பேர் பயணம் செய்யலாம். பயணிகள் பயன்படுத்த லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள், அகலமான மாடிப் படிக்கட்டுகள் மற்றும் பிரமாண்டமான அளவில் வாகன நிறுத்த வசதியுடன் இந்நிலையம் அமைய உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
03-நவ-201106:54:36 IST Report Abuse
ஆரூர் ரங வேளச்சேரி பரங்கிமலை தண்டவாள வேலைகள் நிலப் பிரச்னையால் நின்றுவிட்டது! உடனே சரியான தீர்வு காணப் படாவிட்டால் MRTS போல் இதுவும் காலம் கடந்த நஷ்ட திட்டமாகிடும் !MRTS பறக்கும் ரெயில் இன்னும் பல நேரங்களில் காலியாகப் போவதற்குக் காரணம் முரண்டு பிடிக்கும் அரசு பஸ் கழகமே!அவர்களும் சற்று இறங்கி வந்து, எல்லா ஸ்டேஷன்களிலும் பயணிகள் ஏறி இறங்க வசதியாக பஸ்களை உள்ளே சென்றுவரச் செய்யவேண்டும்!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X