Real Story- 1 | திம்மக்கா| Dinamalar

திம்மக்கா

Updated : நவ 07, 2011 | Added : நவ 05, 2011 | கருத்துகள் (343)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.


-எல்.முருகராஜ்.


அன்பான வாசகர்களே


உங்களை சுற்றிலும் இது போன்ற நிஜக்கதைகள் நிறைந்து காணப்படலாம்.அதனை எங்களுடம் பாசத்துடன் பகிர்ந்து கொள்ளுங்களேன், பிரசுரிக்கிறோம். நன்றி!

தகவல் தரவேண்டிய முகவரி

murugaraj@dinamalar.in


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (343)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dhanasekaran - Delhi,இந்தியா
16-பிப்-201221:18:20 IST Report Abuse
dhanasekaran மிக்க நன்றி தாயே , என்னையும் ஒரு மரமாகவே உணர்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Perumal Gounder - bangalore,இந்தியா
07-பிப்-201215:23:28 IST Report Abuse
Perumal Gounder அன்புள்ள அம்மாவிற்கு உங்கல் பிள்ளைகள் எழுதிக்கொள்வது அம்மா இங்கு நாங்கள் எல்லோரும் நலம் உங்கள் நலனில் அக்கறைஉள்ள ஆலமரம் அரசமரம் மாமாமரம் தென்னைமரம்
Rate this:
Share this comment
Cancel
Xavier Ilango - thoothukudi,இந்தியா
29-ஜன-201221:22:40 IST Report Abuse
Xavier Ilango இந்திய தாயின் உத்தம் புதல்வி திம்மக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். ஆடு மாடு மேய்ப்பவர்கள் மரங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ilangovan - london,யுனைடெட் கிங்டம்
25-ஜன-201216:49:46 IST Report Abuse
ilangovan திம்மக்கா கடவுளை கண்டேன் முதன் முறையாக
Rate this:
Share this comment
Cancel
stephen - Thinadhoo,மாலத்தீவு
20-ஜன-201221:04:31 IST Report Abuse
stephen Really you are great ...........mother,,,,,,,,,I am proud of u......
Rate this:
Share this comment
Cancel
Kanagaraj - Chennai,இந்தியா
09-ஜன-201213:19:10 IST Report Abuse
Kanagaraj மனிதருள் மாணிக்கம், தனது செயலால் உயர்த்து நிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
shankar - avinashi,இந்தியா
07-ஜன-201215:23:39 IST Report Abuse
shankar இதே போல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திம்மக்கா வேணும் கடவுளே
Rate this:
Share this comment
Cancel
Murugan Alagarsamy - Chennai,இந்தியா
03-ஜன-201216:35:50 IST Report Abuse
Murugan Alagarsamy அம்மா மனம் சந்தோசம் அடைகின்றது இப்படிக்கு அ. முருகன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
u.m.krishnamoorthy - umanagar,இந்தியா
02-ஜன-201221:05:39 IST Report Abuse
u.m.krishnamoorthy ஒரு இந்திய தாய்.அவரை காக்க வேண்டியது நம் கடமை .
Rate this:
Share this comment
Cancel
Subbarayan Swaminathan - Chennai,இந்தியா
01-ஜன-201217:52:41 IST Report Abuse
Subbarayan Swaminathan மனித பிறவிகளில் உயர்ந்த அம்மா ஒப்புவமை இல்லாதவர். அம்மாவுக்கு நோபெல் பரிசு கூட சிறியது. அம்மாவை போன்றவர்கள் அவதரிப்பது அரிது. அவரை வணங்குவது தெய்வத்தை வணங்குவது போலாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை