நொய்யலில் வழிந்தோடும் சாயக்கழிவு நீர் : அஞ்சூர் பஞ்.,ல் விவசாயம் கடும் பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

நொய்யலில் வழிந்தோடும் சாயக்கழிவு நீர் : அஞ்சூர் பஞ்.,ல் விவசாயம் கடும் பாதிப்பு

Added : ஜூலை 08, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

க.பரமத்தி: திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருவதால் அஞ்சூர் மற்றும் துக்காச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருவாயன்பாளையம் ஆத்துப்பாலம் கடந்து துக்காட்சி, தொப்பம்பட்டி வழியாக சென்று நொய்யல் கூடுதுறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் செல்வதால் அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பகவுண்டன்வலசு, காஞ்சேரிக்கவலசு, குழந்தாபாளையம், பாப்பாவலசு, துக்காட்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒண்டியூர், தொப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயக்கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் பாதிக்கப்பட்டு நச்சுத்தன்மையடைந்துள்ளன. இதனால் தலைமுறையாக விவசாய தொழிலில் ஈடுபட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வழக்கமாக பயிரிடப்பட்ட நெல், கரும்பு, கடலை, எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டது, தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்க துவங்கிய கடந்த பத்து ஆண்டுகளாக விவசாய நிலம் படிப்படியாக தரிசு நிலமாக மாறத்துவங்கியது. கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயி கந்தசாமி கூறியதாவது: க.பரமத்தி யூனியனுக்குட்பட்ட பகுதியில் விவசாயத்துக்கு புகழ் பெற்றிருந்த அஞ்சூர் பஞ்சாயத்து தற்போது சாயக்கழிவு நீரால் வறண்ட பூமியாக மாறியுள்ளது. திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று விவசாய பாசன சங்கங்கள் பல முறை கோரிக்கை வைத்தும், கோர்ட்டில் வழக்கு போட்டும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை.

அஞ்சூர் மற்றும் துக்காட்சி பஞ்சாயத்து பகுதியில் நொய்யல் ஆற்று பாசனத்தால் ஆண்டு முழுவதும் தானிய விளைச்சலில் பஞ்சம் இல்லாத நிலை தற்போது மாறிவிட்டது. தற்போது விவசாயிகள் தங்களுடைய தேவைக்கும் நெல் விலைக்கு வாங்கும் நிலையேற்பட்டுள்ளது. சாயக்கழிவு பாதிப்புள்ள குடிநீரை பருகி, கரூரில் தற்போது மகப்பேறு மருத்துவமனையை விட மலடு நீக்கும் மருத்துவமனைதான் அதிகரித்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சூர் பஞ்சாயத்து தலைவர் கோபால் கூறுகையில், ""பலமுறை சாயக்கழிவு பிரச்னை குறித்து ஒரத்துப்பாளையம் அணை நிர்வாக பொறியாளரிடம் முறையிட்டும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் அஞ்சூர் பகுதி முற்றிலும் வறண்ட பகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளது,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X