இன்று 11-11-11 | இன்று 11-11-11| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 11-11-11

Added : நவ 11, 2011 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இன்று 11-11-11

இன்றைய தினம் (11-11-11). இன்று கடிகாரத்தில் 11 மணி, 11 நிமிடம், 11 வினாடியில் பார்க்கும் போது 11:11:11 11-11-11 என்று ஒரே எண்ணில் இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த தேதி வருகிறது. இந்த தேதியை வலமிருந்து இடமாக பார்த்தாலும், இடமிருந்து வலமாக பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இதற்கு முன் கடந்த 1911ம் ஆண்டு இதே தேதி (11-11-11) வந்தது. ஆனால் அப்போது இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போது இருப்பர். மனித வாழ்க்கையில் ஒரே ஒருமுறை இந்த தேதி வருவது பெரிய விஷயம் தான். எனவே இந்த தேதியில் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு நிறைய பேர் விருப்பப்படுகின்றனர்.


இன்று பிறக்கும் சூப்பர் குழந்தைகளுக்கு 100 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு பிறந்த நாள்: ஒற்றை இலக்க எண்ணான "1' ராணுவ வீரர்களைப் போன்று, 11.11.11 என்ற எண்கள் அணி வகுத்திருப்பதை, இன்று காலண்டரில் பார்த்து ரசிக்க முடியும். இன்று பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள், மறக்க முடியாத நாளாக அமைந்து விடும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் சிறப்பாக கருதப்படும். கடந்த அக்டோபர் 31ம் தேதி, உலகின் 700வது கோடி மக்கள் தொகையை குறிப்பிடும் குழந்தை, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள தனாவூர் கிராமத்தில் பிறந்ததாக கூறப்பட்டது. அக்குழந்தைக்கான சிறப்பு போல், இன்றைய தேதியில் பிறக்கும் குழந்தைகள் அல்லது அவர்களது உறவினர்கள், 11.11.2111 அன்று, அதாவது நூறாண்டுகளுக்குப் பின், "சிறப்பு பிறந்த நாளை' கொண்டாடி நினைவு கூரலாம். அதனால் இன்று பிறக்கும் குழந்தைகளின் சிறப்பு தேதிக்காக, அவர்களுக்கு சூப்பர் குழந்தைகள் என்று செல்லப்பெயரிட்டும் அழைக்கலாம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohamed amanullah - tamil nadu,இந்தியா
11-நவ-201112:06:05 IST Report Abuse
mohamed amanullah 11 11 11 11 11 11 11 11 ......this is only numbers there is no good and bad in numbers, if any one die today go and tell to there family with happy face its a good day! for them and then we can see what happens next. U people blind in your eyes and brain.
Rate this:
Share this comment
Cancel
Endrum Naanayam - Das Island,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-201111:46:21 IST Report Abuse
Endrum Naanayam பத்திரிகை என்பது ஜனநாயகத்தில் மிக முக்கிய பணி ஆற்றக்கூடிய சாதனம். அது மக்களுக்கு நல்ல போதனைகளை வழங்கி, அவர்கள் தம் நல்வாழ்விற்கு தம்மை அர்ப்பணிப்பதாக இருக்க வேண்டுமே அன்றி இது போல மூட நம்பிக்கைகளை வளர்த்துவிடுவதாக இருக்கக்கூடாது. மிகக்கேவலமான கட்டுரை.
Rate this:
Share this comment
Cancel
sami - Tirupur,இந்தியா
11-நவ-201110:14:52 IST Report Abuse
sami இரவும் பகலும் மாறிமாறி வருவது இயற்கை. மனிதனால் அதனை பகுத்தறிய இயலாத காரணத்தினாலே காலெண்டர் என்ற சூத்திரத்தை அமைத்து காலத்தின் நினைவில் மனிதன் தன் அனைத்துவிதமான எண்ணங்களையும் பதித்து வாழ்கிறான். அதில் இப்படி சில மூடநம்பிக்கைகளும் இருப்பது வருந்த செய்கிறது. படித்தவன் சிந்திப்பதில்லை. ஏனெனில் அவன் படிப்பதை உணர்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ksk - boston,ஆப்கானிஸ்தான்
11-நவ-201103:46:01 IST Report Abuse
ksk எத்தனை பெரியார் வந்தாலும் நாங்கள் அப்படியே தான் இருப்போம் ............ உண்மையை சொன்னால், அப்படி இறை நம்பிக்கை, சாஸ்திரங்கள் நம்பினாலும், நம் தமிழ் அல்லது இந்து காலண்டர் படி இந்த நாள் ஒன்னும் முக்கியம் இல்லை.......... இது முற்றிலும் தெரு கோடியில் ஜோசியம் பார்க்கும் டப்பா ஜோசியர் முதல் கோடிகள் குவிக்கும் அரசியல் ஜோசியர்களுக்கு வேண்டுமானால் அதிர்ஷ்ட நாலா இருக்கலாம், அவங்க மக்களை ஏமாத்தி பணத்தை புடுங்குவாங்க...
Rate this:
Share this comment
Cancel
A.Sivakumar - New Jersey,யூ.எஸ்.ஏ
11-நவ-201102:27:46 IST Report Abuse
A.Sivakumar இன்னும் 396 நாள் கழிச்சு இதே மாதிரி ஒரு நியூஸ் போடுங்க. 12 .12 .12 ரெம்ப அரிதான நாள். 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் வரும்னு.
Rate this:
Share this comment
krishnaamma - Faridabad,இந்தியா
11-நவ-201112:40:23 IST Report Abuse
krishnaammaWell Said :)...
Rate this:
Share this comment
jayaprakash - Chennai,இந்தியா
11-நவ-201113:37:03 IST Report Abuse
jayaprakashயோவ் சிவகுமார் நீ அமெரிக்காவுல என்னத்த கலடுற?..அதன் நியூஸ்-ல சொல்லிருக்குல இந்த தேதியை வலமிருந்து இடமாக பார்த்தாலும், இடமிருந்து வலமாக பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இதற்கு முன் கடந்த 1911ம் ஆண்டு இதே தேதி (11-11-11) வந்தது..நீ சொல்ற 12.12.12 திருப்பி போட்டு பாரு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை