Advertisement
பீளமேட்டின் பெருமை: ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2011,08:49 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 12,2011,09:06 IST

அமைதிக்கு மட்டுமின்றி, ஆன்மிகத்துக்கும் பெயர் பெற்றது கோவை. மருதமலை முருகன், பேரூர் பட்டீஸ்வரர், கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் என இந்த மண்ணைக் காக்கின்ற தெய்வங்கள் பல; அந்த தெய்வங்களுக்காக வடிக்கப்பட்ட கோவில்களும் பல. அந்த வரிசையிலே, பெரும் பெயர் பெற்ற கோவில், பீளமேடு ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில்.
"கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்' என்பதில் உறுதியாக இருந்த அக்கால மக்கள், நடை கிணறுக்கு வட கிழக்கில் ஆதி விநாயகர் கோவிலையும், அதற்கும் வட கிழக்கில் கரிவரதராஜ பெருமாள் கோயிலையும் அமைக்க முகூர்த்தக்கால் இட்டனர். கோயிலுக்கு வடக்கிலும், கிழக்கிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், நந்தன ஆண்டு, புதன்கிழமை, அமர பட்சத்து ரோகிணியில் பூளைமேடு கிராம அமைப்பாளர்கள் தென்னங்கீற்று பர்ணசாலையில் கரிவரதராஜ பெருமாளை ஆவாஹனம் செய்து, முறைப்படி பூஜைகளை நடத்தி தங்களுடைய கிராமத்தையும் ஆரம்பித்தனர். அந்த தென்னங்கீற்று பர்ணசாலை, விரைவிலேயே ஓட்டுவில்லையாக மாறியது. அதன்பின், 90 ஆண்டுகளுக்கு பின்னரே கோயிலாக மாறியதாகச் சொல்கிறது வரலாறு.
தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத்துறையின் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பூங்குன்றன், 1981ம் ஆண்டில் ஓர் ஆய்வறிக்கை எழுதினார். அதில், பூளைமேடு கரிவரதராஜப் பெருமாள் கோவில், மதுரை நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
1529ம் ஆண்டு விஸ்வநாத நாயக்கரின் காலத்தில், மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆட்சி துவங்கி, 1736ம் ஆண்டில் ராணி மீனாட்சி ஆட்சியுடன் முடிந்தது. அந்தக்கால கட்டத்தில் சிற்பக் கலை செழுமையுற்றிருந்தது. தற்போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தென்பகுதி சுவற்றில் உள்ள யானை, மீன் உருவங்கள் இதற்கு இப்போதும் சாட்சியம் கூறுகின்றன.
அந்தக் காலகட்டத்தில்தான், பெருமாள் கோவில் உருவாகியுள்ளதாகக் கூறுகிறார் பூங்குன்றன். மரத்தால் செய்யப்பட்டிருந்த கோவிலின் தீபகம்பம் 1861ல் அகற்றப்பட்டு கல் கம்பம் நிறுவப்பட்டது.
கோயில் முன்னிலையில் தற்போதுள்ள கல் தீப கம்பம், வைணவ சம்பிரதாய ஆகம விதிப்படி இல்லை எனக்கருதி, அதை 10 அடிக்கும் கிழக்கே தள்ளி நிறுத்தினர்.
கம்பத்தின் அடியில் இருந்த பீஜாட்சர சக்கரத்தையும் மாற்றி அமைத்து, 1906ல் திருப்பணிகளை நடத்தி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். அந்த சக்கரத்தை மாற்றி அமைத்த பின் தான், பூளைமேடு மக்களுக்கு அமோக யோகம் பிறந்ததாக ஒரு நம்பிக்கை, இன்னும் நிலவுகிறது. இந்த கோவில் பராமரிக்கும் புனிதப் பணியை, பி.எஸ்.ஜி., குடும்பத்தினர் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மற்றொரு கோவில், ரேணுகாதேவி கோவில்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.