செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.

இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (654)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.t.shekar - chennai,இந்தியா
24-நவ-201107:21:28 IST Report Abuse
n.t.shekar தினமலர் இத்தகைய கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டும். மட்டமான கட்டுரை. தினமலர் தரம் தாழ்த்தி கொள்ள வேண்டாம். வெகு பலர் பார்ப்பதால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று கருத கூடாது. கட்டுரையை உடனடியாக நீக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ragupathy Padmanaban - Bangalore,இந்தியா
23-நவ-201112:25:31 IST Report Abuse
Ragupathy Padmanaban ஜாதி, மதம் எல்லாம் என்ன வேலை பன்னறான்றத சொல்லறது தானே, ஒழிய அரசியல் பண்ண இல்ல சார்.... ப்ளீஸ் ஒரு மீடியா பவர் தவறான வழிகாட்டுதலா இருக்கக்கூடாதுன்னு தமிழர்கள் எல்லாரும் விரும்பறோம்...
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Dindigul,இந்தியா
23-நவ-201100:46:27 IST Report Abuse
sivakumar நீங்கள் தமிழனாக பார்கவேண்டம் , ஒருவேளை குற்றவாளி அதே தவறை நம் வீடு அல்லது உறவினர் மீது செய்து இருந்தால் நீங்கள் விடுதலை செய்ய சொல்வீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
soundararajan - Thrissur,இந்தியா
22-நவ-201116:50:53 IST Report Abuse
soundararajan ஒரு மாற்று திறனாளி இந்த கட்டுரை எழுதிய நிருபரின் உறவு பெண்களை பலாத்காரம் செய்து படுகொலை செய்து கொன்றால் ரொம்ப மகிழ்ச்சியோடு வரவேற்பார் என்று நினைக்க தோன்றும் வண்ணம் இவருடைய கட்டுரை இருக்கிறது. எப்படி இப்படி ஒரு மனநிலை உள்ள நிருபர்களை தினமலர் தனது பத்திரிகையில் வைத்து இருக்கிறது ? மேலும் இதுபோல ஒரு கட்டுரை எப்படி வெளியாகிறது ? கட்டாயம் இந்த கட்டுரை தினமலருக்கு ஒரு கரும்புள்ளி. தயவு செய்து இனிமேலாவது இப்படி ஒரு கட்டுரை வரும் முன் ஆசிரியர் படித்து பார்ப்பது மிகவும் நல்லது. காரணம் இது போல வருகின்ற கட்டுரைகள் கட்டாயம் மக்கள் மத்தியில் தினமலர் பற்றிய அபிப்பிராயத்தை அடியோடு மாற்றி விடும்..கட்டாயம் இதற்க்கான மறுப்பு செய்தி வரும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். நன்றி.
Rate this:
Share this comment
Abdul Sukkur - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-201122:02:14 IST Report Abuse
Abdul Sukkurதினமலர் இன் இந்த செய்தி 717 கருத்துகளில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எடுத்து காட்டுகிறது, ஒருபோதும் இந்த அளவுக்கு மக்கள் கொந்தளிப்பு ஒரு செய்திக்கும் கிடைத்தது இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
Henry baskar - ipoh,மலேஷியா
22-நவ-201106:39:37 IST Report Abuse
Henry baskar இந்த கட்டுரை எழுதியவன் ஒரு தமிழனாக இருக்கவே முடியாது , மிக அநியாகமாக ஒரு அப்பாவி பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக அவன் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
pg karuppannan - Dxb,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-201123:08:36 IST Report Abuse
pg karuppannan இந்த மாதிரி செய்திகள வச்சிதான் மக்களின் என்னங்கள தெரிஞ்சிகிரங்கன்னு நினைக்கிறேன் மக்கள் இந்த விஷியத்த அப்படி எடுதுக்குரங்க சோதனை செய்றாங்க. அதனால கருத்து சொன்ன எல்லாரும் வாழ்க. எல்லாரும் அவங்க கட்டுபட்ல இருக்குரதணல் நல்ல இருக்காங்க. கோவிந்த் இல்ல அதனால அவருக்கு இந்த தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
21-நவ-201117:21:47 IST Report Abuse
R.சுதாகர் இது வஞ்சப்புகழ்ச்சியாக எழுதப்பட்டது என்று கூட சிந்திக்கத் தெரியாத அளவுக்கு இத்தனை பேர் இருக்கும்போது தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறுவது நிச்சயமாக சரியல்ல.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
23-நவ-201112:42:19 IST Report Abuse
Nallavan Nallavanஅண்டை, அயலாரிடம் மிகவும் சாமர்த்தியமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளும் தமிழர்கள் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவது சகஜம்!...
Rate this:
Share this comment
Cancel
archana - coimbatore,இந்தியா
20-நவ-201109:39:50 IST Report Abuse
archana You are right, but the way you have conveyed should be changed. I suggest then all rapist should be sentenced to death irrespective of their caste, state they belong, disabilities.
Rate this:
Share this comment
Cancel
archana - coimbatore,இந்தியா
20-நவ-201109:30:52 IST Report Abuse
archana You are right, but the way you had conveyed is wrong.
Rate this:
Share this comment
Cancel
radhika - California,யூ.எஸ்.ஏ
19-நவ-201111:39:28 IST Report Abuse
radhika You can be sarcastic, but put it in a way that the people understand that, otherwise it will create issues and hurt people feelings.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்