அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்கா கேட்டது மன்னிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில், கலாமின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றும்படி கூறி, அமெரிக்க அதிகாரிகள், அத்துமீறி நடந்து கொண்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்தியா வரும் அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் அதுபோல் நடக்க வேண்டியிருக்கும்' என, எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2009ல் அமெரிக்கா செல்வதற்காக டில்லி விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் அவரை அவமதித்தனர். இந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு அவமதிப்பு சம்பவம், கலாமுக்கு நடந்துள்ளது.கடந்த செப்டம்பரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அப்துல் கலாம், 29ம் தேதி, இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்பின் அவர், டில்லி செல்லும் ஏர்-இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தார்.


விமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமானத்திற்குள் வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்,"உங்களை சோதனையிட வேண்டும். உங்களின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றிக் கொடுங்கள். அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என, சோதனையிட வேண்டும்' என்றனர்.


இதற்கு, அங்கு இருந்த ஏர்-இந்தியா அதிகாரிகளும், மற்றவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அவர், முன்னாள் ஜனாதிபதி. விமான நிலையங்களில் சோதனையிட, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


அமெரிக்க அதிகாரிகள், இதைப் பொருட்படுத்தவில்லை. கலாமும், இதை பெரிதுபடுத்தாமல், தன் கோட் மற்றும் ஷூக்களை கழற்றி, அவர்களிடம் கொடுத்தார்.அவற்றை சோதனையிட்டு விட்டு, சில நிமிடங்களுக்கு பின், கலாமிடம் திருப்பி அளித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் குறித்து, அப்துல் கலாம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர்-இந்தியா அதிகாரிகள் மூலமாக, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


பதிலடி கொடுப்போம்:இந்த சம்பவத்துக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நிருபமா ராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பிரச்னையை உடனடியாக, அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, நிருபமா ராவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர்-இந்தியா அதிகாரிகளிடம், இந்த சம்பவம் தொடர்பாக விவரமான அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.


வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,"பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமான நிலையங்களில், சோதனையிடுவதில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், அவரின் பெயரும் உள்ளது. அதையும் மீறி, அவருக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவுக்கு வரும், அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் இதுபோல் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்' என்றனர்.


மன்னிப்பு கேட்ட அமெரிக்கா:அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அப்துல் கலாம் மற்றும் இந்திய அரசுக்கு, அமெரிக்க தூதரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக, வருந்துகிறோம். வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு சோதனை விதிமுறைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றாததன் காரணமாக, இவ்வாறு நடந்து விட்டது. எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரதிய ஜனதா கண்டனம் : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பை, பொறுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை. கலாம், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால், அவமதிப்புக்கு உள்ளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உசேன் கூறினார்.


Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jothi - Dammam,சவுதி அரேபியா
14-நவ-201109:05:14 IST Report Abuse
Jothi கலாம் அவர்களே காம் ஆக இருக்கார் .......அவன் (அமெரிக்கன்) அவமான படுத்தினால் நாம் என்ன குறைந்தா போய் விட்டோம்.........புத்தியால அடிப்போம் வரும் காலத்தில்
Rate this:
Share this comment
Cancel
jogopi. - ramanathapuram,இந்தியா
14-நவ-201107:53:39 IST Report Abuse
jogopi. ஹலோ அமெரிக்கா., நாங்களும் செக்யூரிட்டி வைத்திரிகிறோம்., அப்புறம் நீங்க யாராவது வந்தால் இதைவிட மோசமான விளைவுகளை சந்திக்கணும்.. அதனால் முதலில் எங்களுக்கு அந்த ஆபீசர சஸ்பெண்ட் செய்யவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
14-நவ-201107:35:25 IST Report Abuse
Asokaraj இது என்ன முதல் முறையா? எத்தனையோ பேருக்கு இது போல நடந்திருக்கிறது. நாமும் கிடைத்தால் போதும் என்று அமெரிக்காவுக்கு நாக்கை தொங்கவிட்டு போய் கொண்டுதான் இருக்கிறோம். இதோ அடுத்து நம்ம முதல்வர் வாயை பிளந்து கொண்டிருக்கிறர் அமெரிக்கா போக... கூடவே அல்லக்கைகளும் போங்க சார். நமக்கும் கொஞ்சம் சூடு சொரனை இருக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201106:51:38 IST Report Abuse
AnandaRajan நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டினருக்கு சிகப்பு கம்பள வரவேற்புதான் எப்போதும், அவன் வெளி நாட்டில் குப்பை பொறுக்குபவனாக இருந்தாலும். ஆனால் நம் நாட்டினர் எல்லா வெளி நாடுகளிலும் இப்படிதான் அவமதிக்கபடுகிறார்கள். திரு கலாம் அவர்கள் செய்தி வெளி வந்துள்ளது, மற்ற செய்திகள் தினமலர் போடுமா!!! உங்கள் பத்திரிக்கை வேறு செய்திகளுக்கு இடம் இருக்காது! வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவர் எங்கள் கலாம். அவருக்கும் இந்த நிலை இரண்டாவது முறை, இல்லை இல்லை மீண்டும் மீண்டும் தொடரும். நாம் கத்திகொண்டுதான் இருக்க வேண்டும். கேட்க யாரும் இல்லை!!!
Rate this:
Share this comment
Cancel
padmanabhan potti - Suchindrum,இந்தியா
14-நவ-201106:44:48 IST Report Abuse
padmanabhan potti அமெரிக்க அதிகாரிகளை பாதுகாப்பு கருதி இந்தியாவும் சோதனை இட்டு பின்னர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bagavathi Govindaraj - tamil nadu,இந்தியா
14-நவ-201106:07:27 IST Report Abuse
Bagavathi Govindaraj சக்தி வாய்த்த ஆட்சி இந்தியாவுல நடுக்குது. இதல்லாம் நம்ம தலை எழுத்து என்ன? பண்ண! எத்தன அடிச்சாலும் தாங்கறோம்
Rate this:
Share this comment
Cancel
singaa - singapore,சிங்கப்பூர்
14-நவ-201106:03:59 IST Report Abuse
singaa ஒரு பிரபல நடிகருக்கு நியூயார்க் விமான நிலையத்தில் அவமதிப்பு நடந்தது. இந்திய மண்ணில் காலடி வைத்த உடனே மீடியாக்களிடம் தெரிவித்த அவர், இனி நான் அமெரிக்கா போகமாட்டேன் என்றார். அதை பின்பற்றியும் வருகிறார். அப்துல் கலாம் அவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அவரிடம் நான் வேண்டிக்கொள்வது எல்லாம் இதுதான் .. மதியாதார் வாசலை மிதியாதீர்..
Rate this:
Share this comment
Cancel
MOHAN - TRICHY,இந்தியா
14-நவ-201104:59:18 IST Report Abuse
MOHAN திமிர் பிடித்த அமெரிக்க ...களின் திமிர் ரொம்ப அதிகம் தான் .
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
14-நவ-201104:21:23 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மதியாதார் வாசல் மிதியாதே ! கலாம் ஏற்கனவே போய் அவமானப்பட்டு இருக்கிறார். அதையும் மீறி மறுபடியும் அங்கே அதுக்கு போகணும் ? உண்மையான தப்பு யார் மேல ? அப்படி அமெரிக்கால என்னதான் இருக்கு? , எதுக்கு இந்த அமெரிக்க மோகம் ?
Rate this:
Share this comment
Cancel
Samir - Trichy,இந்தியா
14-நவ-201102:05:37 IST Report Abuse
Samir அதெல்லாம் எங்களுக்கு பிரச்சனேயே இல்லை. உங்கள் தலைவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்தால் விழுந்து விழுந்து உபசரிப்போம். ( ஒபாமா இந்தியா வந்த போது ஒரு நாளைக்கு 900 கோடி பாதுகாப்பிற்காக செலவழித்துள்ளோம்.)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.