எழும்பூர் ரயில் நிலையம் மாற்றம்:கண்டித்து 25ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம் | எழும்பூர் ரயில் நிலையம் மாற்றம்:கண்டித்து 25ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையம் மாற்றம்:கண்டித்து 25ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Updated : நவ 21, 2011 | Added : நவ 21, 2011 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழும்பூர் ரயில் நிலையம் மாற்றம்:கண்டித்து 25ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

சென்னை:"ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டியும், எழும்பூர் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றாமல், தொடர்ந்து இயக்கவும் கோரி, பா.ஜ., சார்பில் 25ம் தேதி தர்ணா நடைபெறும்' என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை வாசிகளின் வாழ்வின் ஓர் அங்கமாக இணைந்துவிட்ட எழும்பூர் ரயில் நிலையம், இட நெருக்கடியைக் காரணம் காட்டி தாம்பரத்துக்கு மாற்றப்பட உள்ளது.

வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் 16 ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அங்கேயே வந்தடைவதால் தான் இடநெருக்கடி எனக் கூறப்படுகிறது.ராயபுரம், இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம். இதை, சென்ட்ரல், எழும்பூர் போல மூன்றாவது முனையமாக மாற்றி, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் 16 ரயில்களையும் அங்கிருந்து இயக்கினால், எழும்பூர் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.தாம்பரம் ரயில் நிலையத்தில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டால், 40 ஆயிரம் பயணிகள் மட்டுமின்றி, அவர்களுடன் வருபவர்கள் என, தினம் ஒரு லட்சம் பேர் வருவதும் போவதும், சொல்லி மாளாத அவதியை ஏற்படுத்தும்.


சாதாரணமாகவே கூட்ட நெரிசலாலும், போக்குவரத்து நெரிசலாலும் திணறும்போது, அதிகப்படியான பயணிகளால் தாம்பரம் பகுதி மேலும் கடும் நெருக்கடியைச் சந்திக்கும். இதற்கு மாற்று வழியாக, 72 ஏக்கர் பரப்பளவுள்ள ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3.5 கி.மீ., நீளமும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வந்து போவதற்கு சாலை வசதிகளும் உள்ள இடம் ராயபுரம். சென்ட்ரல் ரயில் நிலையம், 12 நடைமேடைகளுடன் 950 மீட்டர் நீளமுள்ளது.


ஒன்பது நடைமேடைகள் கொண்ட எழும்பூர் ரயில் நிலையத்தின் நீளம் 750 நீளம். ஆனால், 16 மேடைகள் அமைப்பதற்கு வசதியுள்ள ராயபுரம் ரயில் நிலையத்தின் நீளம் 1,015 மீட்டர். அகலம் 420 மீட்டர் என, விரிவாக்கம் செய்ய இடவசதி உள்ளது.ஆகவே, ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டியும், எழும்பூர் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றாமல், தொடர்ந்து இயக்கவும் கோரி, பா.ஜ., சார்பில் 25ம் தேதி மாலை 3 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில், எனது தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெறும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish Kumar - Schaumburg,யூ.எஸ்.ஏ
22-நவ-201119:44:40 IST Report Abuse
Sathish Kumar இந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும்.ராயபுரம் தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்,அதை போற்றி,மேம்படுத்துவது நம் கடமை.
Rate this:
Share this comment
Cancel
Gautham - chennai,இந்தியா
22-நவ-201119:35:21 IST Report Abuse
Gautham ரயில்வே அதிகாரிகளுக்கு என்ன யோசிக்கும் திறன் குறைந்து விட்டதா சென்னை வாசிகள் ஒரு முறை ஆட்டோ வில் அல்லது பஸ்ஸில் தாம்பரம் செல்ல ஆகும் செலவு , நேரம் ,அலைச்சல் இதையெல்லாம் கணக்கிடவேண்டும் . அதானே அதிகாரிகள் என்று பஸ்ஸில் போனார்கள் மக்கள் நலனை முதலில் கவனிக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
22-நவ-201114:34:04 IST Report Abuse
manoharan தமிழ்நாடு அந்த காலம் முதலே ரயில்வே நிர்வாகத்துடன் ஒற்றுமை இன்றி நடந்து கொண்டு தான் தமிழ்நாடு நிறைய முன்னேற்றத்தை இழந்துள்ளது. மேலும் கெடுக்காதீர்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் இடநெருக்கடியை தவிர்க்க வில்லிவாக்கத்தில் இன்னொரு டெர்மினல் உருவாக்க நினைத்தார்கள். அப்போது இருந்த எம் ஜி ஆர் அரசு அந்த திட்டத்தை நிராகரித்தது. சென்ட்ரல் ஸ்டேஷன் இப்போதே நிரம்பி விட்டது. போக போக என்ன செய்யபோகிறோம்? பறக்கும் ரயில் (MRTS ) மூலமாக பட்டணத்திற்குள் இருக்கும் பஸ் நெருக்கடியை தவிர்க்க திட்டம் தந்தனர். அப்போது இருந்த தி மு க அரசு அதற்கு இடம் கொடுக்காமல் (ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்) இழுத்தடித்தனர். இதற்கு காரணம், பறக்கும் ரயில் வந்தால் பஸ் மூலம் மாநிலத்திற்கு கிடைக்கும் வருமானம் மத்திய அரசுக்கு சென்று விடும் என்று இவர்களுக்கு யாரோ துர்ஆலோசனை கொடுத்திருந்தனர். ICF போன்றே இன்னொரு மத்திய நிறுவனம் அமைக்க இடம் கேட்டனர். அப்போதைய எம் ஜி ஆர் அரசு இடம் ஒதுக்க தாமதித்தனர். அந்த நிறுவனம் வடக்கே சென்று விட்டது. இது மாதிரி நடந்தவை சாதாரண மக்களுக்கு தெரியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X