ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 09, 2010 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தது குறித்து, "தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ரூபாய் வினியோகம் செய்து மதமாற்றம் செய்வதற்கு பாதிரியார்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மாவட்ட பெந்தகோஸ்தே ஊழியர்கள் செயலர் ஜான்சான் கூறியதாவது:ரூபாய் நோட்டில் அச்சிடுவது, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. அதிலும், மதமாற்றத்துக்கான வாசகங்களை அச்சிட்டு வினியோகிப்பது கண்டிக்கதக்கது.இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயலை பெந்தகோஸ்தே ஊழியர்கள் ஏற்கமாட்டோம்.இவ்வாறு ஜான்சான் கூறினார்.இதே போல் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும், ரூபாய் நோட்டு பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதமாற்றத்துக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது குறித்து, கடலோர பகுதியில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
போஸ் - Chennai,இந்தியா
09-ஜூலை-201017:51:57 IST Report Abuse
போஸ் Well Said Mr SadhaSivan
Rate this:
Share this comment
Cancel
கக்கன் - Nellai,இந்தியா
09-ஜூலை-201009:06:57 IST Report Abuse
கக்கன் பதிரியார்களா அப்படி சொன்னார்கள். கேப்பையில் நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு புத்தி எங்க போச்சி?
Rate this:
Share this comment
Cancel
Vara - USA,இந்தியா
09-ஜூலை-201008:12:17 IST Report Abuse
Vara இயேசுவின் உண்மையான ஊழியர்கள் எப்படி எங்கிருந்து உருவானார்கள் இந்தியாவில்?
Rate this:
Share this comment
Cancel
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201001:24:46 IST Report Abuse
மு.சதாசிவன். அட நீங்க எல்லாம் கூட்டம் போட்டு திட்டம் போட்டு செய்கின்ற வேலைதான் இது. உங்கள் யோக்கியத்தனம் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் நல்லவர்கள் போல் நடித்து திரிவீர்கள்? ரொம்ப நல்லவர்கள் போல் நடிக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை