Truth and hype behind the Koodankulam row : We help you to be informed! | கூடங்குளம் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வாசகர்‌களே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு| Dinamalar

கூடங்குளம் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வாசகர்‌களே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 Readers! it is an oppurtunity, கூடங்குளம் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வாசகர்‌களே நீங்களே கேட்டுத் தெரிந்த��

தனி நபர்களை விட நாட்டு நலனே முக்கியம். இது அனைவரும் அறிந்த ஒன்று; ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும். தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் அதை எப்படியாவது சரி செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிய நிலையில், கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியைத் துவக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக ஒரு போராட்டம் துவங்கியது. இதனால் கூடங்குளம் மின்திட்டம் செயல்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியமான திட்டத்திற்கு ஏன் இந்த அளவு எதிர்ப்பு என்பது எவருக்குமே புரியாத ஒரு புதிராக உள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். எனவே எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் குறித்த தகவல்களும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. நீங்களே அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தினமலர் இணையதளத்தில் பதிவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உதயகுமார்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் உதயகுமார், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பறக்கை ஜங்ஷன் அருகே உள்ள இசங்கன்விளையை சேர்ந்தவர். உயர்கல்வி பயின்றுள்ள இவர், வெளிநாடுகளிலும் படித்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் இவரும், இவரது மனைவியும் அமெரிக்காவில் குடியிருந்தனர். இவர்களது குழந்தைகளும், இவர்கள் அமெரிக்காவில் இருந்தபோதே பிறந்தவர்கள் என்பதால், அங்கேயே குடியுரிமை பெற்றவர்கள்.ஆரம்பத்தில் உதயகுமார், தமக்கு பழக்கமான வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு, "ஆராய்ச்சிக்காக' நிதி பெற்றுத் தருவதை தொழிலாகக் கொண்டிருந்தார்.


கூடங்குளம் அணு உலை போராட்டத்தின் துவக்கத்தில், அந்தப் பக்கமே வராதவர், உற்பத்தி துவங்கும் காலத்தில், இங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை நடத்தி வருகிறார். உதயகுமார், "சாக்கர் மெட்ரிக் பள்ளி' என்ற பள்ளிக் கூடத்தை, கன்னியாகுமரி மாவட்டம், பழவிளை அருகே நடத்தி வருகிறார். அண்மைக் காலமாக, கூடங்குளம் போராட்டத்தால், இடிந்தகரை ஆலய வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்.


இவர் வீட்டு முகவரி: எஸ்.பி.உதயகுமார், 27, இசங்கன்விளை, மணி வீதி, பறக்கை ரோடு ஜங்ஷன், நாகர்கோவில் - 629 002. சாக்கர் பள்ளியிலும், இவரைச் சந்திக்கலாம்.


இவரது மொபைல் எண்: 98656 83735. இவரது நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567.


இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com


புஷ்பராயன்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், உதயகுமாருக்கு அடுத்தபடியாக, முக்கிய பங்கு வகிக்கும் புஷ்பராயன், கிறிஸ்தவ பாதிரியாக இருந்தவர். பின், இல்லற வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்.இவரும், தூத்துக்குடியில் கடல் ஆராய்ச்சி என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று தொழில் செய்து வருகிறார்.நெல்லை மாவட்டம், என்.ஜி.ஓ.காலனியில் பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.


இவரது பங்களா முகவரி: 107/1, 14வது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ., காலனி, நெல்லை - 627 007.தூத்துக்குடி முகவரி: 19/1 மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி.அலுவலக முகவரி: 11/106, கேப்டன் குடியிருப்பு, ஆரோக்கியபுரம், முதன்மை சாலை, தூத்துக்குடி.


மொபைல் எண்: 98421 54073. வீட்டு தொலைபேசி எண்: 0461 2361699.


இ-மெயில்: pushparayan@hotmail.com, eastcoast@dataone.in, cpfsouth@gmail.com


மைபா ஜேசுராஜன்: அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள, மூன்றாவது முக்கிய நபர், மை.பா.ஜேசுராஜன். இவர், நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார்.ஆனால், தமிழர் களம் உள்ளிட்ட அமைப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கிறார். பெரும்பான்மையாக, இடிந்தகரையில்தான் இருக்கிறார். இடிந்தகரை போராட்ட செய்திகளை சேகரிக்க, செய்தியாளர்கள்செல்லும் போதெல்லாம், அவர்களை, "அங்கே நிற்காதே... இங்கே நிற்காதே...' என, அவமதித்து, ஏக வசனத்தில் திட்டி அனுப்புபவர். உண்ணாவிரதத்தை முடித்துவைக்க வந்த, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோசையும் கூட, மரியாதை இல்லாமல் நடத்தியவர்.


இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சேரன்மகாதேவி தூயமைக்கேல் ஆலயத்தில் சந்திக்கலாம்.


இவரது மொபைல் எண்: 94439 62021.- நமது சிறப்பு நிருபர்


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (263)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Ambalavanan - bellary,இந்தியா
15-ஜன-201211:13:55 IST Report Abuse
Subramanian Ambalavanan சமுதாயத்தின் மீது என்ன ஒரு அக்கறை உங்களுக்கு ஆயிரம் பேர் கேட்டாலும் அவர்களது பதில் ஒவ்வொருத்துக்கும் ஒவ்வொன்றாக இருக்காது .அதை நீங்களே கேட்டு சொன்னால் எவ்வளவு நேரம் மிச்சம் . உங்களது நோக்கம் பாமரனுக்கும் புரியும் , உங்கள் பரமனுக்கும் புரியும் . கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களே இதை வெளியிட்டால் நீங்கள் புத்திசாலி.
Rate this:
Share this comment
Cancel
anduvan 2000 - Peravurani,இந்தியா
01-டிச-201114:28:07 IST Report Abuse
anduvan 2000 நானும் தமிழ் மக்களில் ஒருவன்தான் ....2002 -யில் கூடங்குளம் அணு மின் நிலைய கட்டுமானம் தொடங்கப்பட்டது ...அப்போதெல்லாம் இந்த விஜயகுமார் எங்கே சென்றார் என்று அவரால் விளக்க முடியுமா? 13000 கோடி முதலீடு செய்து கட்டுமானம் முடிவுபெற்று விட்ட நிலையில் எங்கிருந்து வந்து குதித்தார் இந்த விஜயகுமார்? அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் அவர் வெளிநாட்டு கையாளாக இருப்பாரோ என்ற எனது கருத்தினை இம்மன்றத்தில் பதிவுசெய்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
shankar - Bangalore,இந்தியா
29-நவ-201112:55:09 IST Report Abuse
shankar ஒருவரும் கைபேசியை ஏடுத்து பேசவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
Rate this:
Share this comment
Cancel
Ekanathan - chennai,இந்தியா
28-நவ-201100:36:04 IST Report Abuse
Ekanathan பத்திரிக்கை தர்மம், சுதந்திரம் பற்றிய விமர்சனமெல்லாம் வேண்டாம், உங்களுக்கு எதிர்க்க உரிமை உள்ளதோ அதே அளவிற்கு ஆதரிக்கவும் மற்றவர்களுக்கு உரிமை உள்ளது. நிருபரின் குறிப்புக்களை வேண்டுமானால் புதிய தலைமுறை இல் போட சொல்லி கேளுங்கள்... சென்னை - ஏகநாதன்
Rate this:
Share this comment
Cancel
Ekanathan - chennai,இந்தியா
28-நவ-201100:23:37 IST Report Abuse
Ekanathan மத்திய அரசு ஏனோ இதில் அவ்வளவு அக்கறை காட்டாதது போல் தெரிகிறது. பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா வை எளிதாக திக் விஜய் சிங் வைத்து சமாளித்த காங்கிரஸ், இந்த விசக்கிருமிகளை எதோ உள்நோக்கத்துடன் வளர்கிறதோ என்ற அச்சம் உண்டாகிறது. மின்சாரம் கிடைத்தால் மாநில அரசின் கை ஓங்கி விடும் என்ற எண்ணத்தில் திட்டத்தை தாரை வார்க்க பார்க்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. போராட்டம் நடுத்துவது உரிமை தான் என்றாலும், அரசு பணியில் உள்ளோரை தடுப்பது என்பது தண்டனைகுரியது, இதையும் நடுவண் அரசு மிக சாதரணமாக பார்த்துகொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது. சென்னை - ஏகநாதன்
Rate this:
Share this comment
Cancel
tamil - pondicherry,இந்தியா
26-நவ-201121:47:40 IST Report Abuse
tamil இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் , தொலைகாட்சி வாங்கினால் படிப்பு பாழாகிடும் , இணையத்தளம் இருந்தால் கலாசாரம் சீரழிந்து விடும் என்று சொன்ன மூடர்களின் வாதாம் போல் தான் இந்த போராட்டக்காரர்களின் வாதமும்....குறுகிய நோக்கோடு பார்க்காமல் மின்சார பயன்பாட்டை கருத்தில் கொண்டு பார்க்க கற்று கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Abdul Raqueeb - Dammam,சவுதி அரேபியா
26-நவ-201117:27:19 IST Report Abuse
Abdul Raqueeb நண்பர்களே, உங்கள் கருத்தை சொல்லும் போது, அனைவருக்கும் புரியும்படி எளிதாக இருக்க வேண்டும். அல்லாட்டி எம்புட்டு பெருசா எழுதுனா, தலைவா, தலை சுத்துது.
Rate this:
Share this comment
Cancel
SEETHA RAM - madurai ,இந்தியா
24-நவ-201123:46:29 IST Report Abuse
SEETHA RAM சுப்பிரமணி சார் உதயகுமார் செல் ரிங் ஆகுது
Rate this:
Share this comment
Cancel
GAA - tirunelveli,இந்தியா
24-நவ-201122:40:10 IST Report Abuse
GAA சேது சமுத்திரம் வராமல் தடுத்தவர்கள் தேச துரோகிகளா என்பதை தினமலர் தெளிவுபடுத்தினால் நல்லது
Rate this:
Share this comment
muthu rajan - Monrovia,லைபீரியா
26-நவ-201101:07:02 IST Report Abuse
muthu rajanபதிமூணாயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம் , அனைத்தையும் வீணடிக்க முடியுமா என்று நாராயணசாமி கூறுகிறார். அவர்கள் ஐக்கிய முன்னணி அரசு 176௦௦௦௦ கோடி ரூபாயை ஏப்பம் விட்டார்களே, அதில் இந்த செலவு ஒரு சதவீதம் கூட இல்லையே , ஏன் இதையும் ஒரு செலவு போன்று விட்டுவிட வேண்டியதுதானே. மேலும் சில அன்பர்கள் இந்த போராட்டத்தை கேலி செய்கின்றனர். அவனவன் ஊரில் இந்த பிரச்சனை இருக்காது என்கிற மமதையில் பேசுகின்றனர். ஆபத்தில் இருப்பவனுகுதான் அதன் வலி தெரியும் , நீங்கள் தொலை தூரத்தில் இருந்து கொண்டு நமக்கு எந்த பதிப்பும் இல்லை என்பது தெரிந்து பேசுகிறீர்கள் . அதில் எத்தனை பேர் தங்கள் ஊரில் இந்த அனு உலயை நிறுவ தயாராக இருக்கிறீர்கள் . கருத்தை பகிர்ந்து கொள்ளும் சமயம் உங்கள் சகோதரர்களைய்ம் நினைத்து பாருங்கள் . உரைகல்லுக்கு எந்த பிரச்சனை பெருதும் உதவுகிறது , அதன் ரேட்டிங்கை உயர்திகொள்ள . நண்பர்களே கண்ணை மூடிகொண்டு கருத்துகளை தயவு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம் ....
Rate this:
Share this comment
Cancel
Velmurugan - Tirunelveli,இந்தியா
24-நவ-201122:39:43 IST Report Abuse
Velmurugan யாரப்பா அந்த நிருபர்? அசத்திட்டீங்க போங்க.. ஏதாவது ஒரு பத்திரிக்கை இந்த செய்தியை போடாதா என்று கடந்த நூறு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். இங்கு விமர்சனம் எழுதி இருக்கும் சகோதரர்கள் அதிகம் பேர் உண்மை நிலவரம் அறியாமல் பேசுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது.. நீங்கள் அனைவரும் கூறும் கருத்துக்கள் மிகையல்ல. மேலே உள்ள செய்தி நூற்றுக்கு நூறு செய்தி சரியானது. உள்ளூர்காரன் எனக்கு தெரியாததா வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருக்கிற உங்களுக்கு தெரிந்து விட போகிறது.. மீண்டும் ஒரு முறை நிருபித்துவிட்டாய் தினமலரே.. உண்மையின் உறைவிடம் என்று.. வாழ்த்துக்கள் சொல்ல மாட்டேன்.. நன்றி உமக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.