சங்க காலப் பாண்டிய மன்னர் "செழியன்' நாணயம் கண்டுபிடிப்பு | சங்க காலப் பாண்டிய மன்னர் "செழியன்' நாணயம் கண்டுபிடிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்க காலப் பாண்டிய மன்னர் "செழியன்' நாணயம் கண்டுபிடிப்பு

Added : டிச 02, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சங்க காலப் பாண்டிய மன்னர் "செழியன்' என்ற பெயர் பொறிக்கப்பட்ட செப்பு நாணயத்தை கண்டுபிடித்துள்ளதாக, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றில் கிடைத்தது என்றும், ஆனால் எந்த ஊரில் கிடைத்தது என்று தெரியாது என்றும் கூறினார். திருநெல்வேலி நகரில் கீழ ரத வீதியில் உள்ள சிறு பாத்திரக் கடையில், இருபது ஆண்டுகளுக்கு முன் தான் வாங்கிய சில நாணயங்களை, ஆய்வு செய்வது கடினமாக இருப்பதாக் கருதி, ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்ததாகவும், பத்து தினங்களுக்கு முன் அந்தக் குவளையைச் சுத்தம் செய்ய எடுத்த போது, அதில் ஒரு நாணயம், அதன் வடிவமைப்பில் வித்தியாசமாக இருப்பதாக் கருதி அதை தேர்வு செய்து சுத்தம் செய்ததாகவும் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாணயம் ஆற்று மணலில் புதையுண்டு கிடந்ததால், அதன் மேல் கடினமான ஒரு பூச்சு இருந்ததாகவும், அந்தப் பூச்சை எளிதில் அகற்ற முடியாமல் ஒரு வாரம் அந்த நாணயத்தை மெதுவாக சுத்தம் செய்ததாகவும், அவ்வாறு சுத்தம் செய்யும் போது சில எழுத்துக்கள் தெரிந்ததாகவும் கூறினார். ரசாயன கலப்படம் இல்லாத பகுதியில் அந்த நாணயம் நீண்ட காலம் மண்ணில் புதைந்து கிடந்ததால், அதை ரசாயனக் கலவைகள் அரிக்காமல் விட்டது என்றும், இந்த நாணயம் சங்க கால தமிழக வரலாற்றுக்கு ஓர் அணிகலனாகத் திகழும் என்றும் கூறினார்.இந்த செப்பு நாணயம் மிகச் சிறிதாக இருப்பதாகவும், அதன் எடை 0.900 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மி., என்றும், அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்' என்று பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், நாணயத்தின் பின்புறம் தேய்ந்து இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை என்றும் கூறினார்.
இந்த நாணயத்தின் காலம் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு என்றும் அவர் கருதுகிறார். 1984 ஆம் ஆண்டு, மதுரையில் சங்க காலப் பாண்டியன் "பெருவழுதி' பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தைத் தான் கண்டுபிடித்ததாகவும், அதன் பின் சுமார் கால் நூற்றாண்டுக்கு பிறகு இந்த நாணயம் கிடைத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் ஏற்கனவே சங்க காலச் சேரர்கள் வெளியிட்ட "மாக்கோதை', "குட்டுவன் கோதை' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ள வெள்ளி நாணயங்களை 1990 மற்றும் 1994 ஆண்டுகளில் கரூர் அமராவதியாற்றில் கண்டுபிடித்தாகக் கூறினார். சங்க கால இலக்கியமான புறநானூற்றில் காணப்படும் மன்னர்களின் பெயர்கள் உள்ள நாணயங்கள் வெளிப்படுவது, அந்த இலக்கியத்தில் குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்கள், கற்பனைப் பெயர்கள் அல்ல என்று உறுதியாகிறது என்று தெளிவுபடுத்தினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
&2980&3014&2985&3021&2965&3006&2970&3007 &2970&300 - Coimbatore,இந்தோனேசியா
24-ஜூலை-201214:35:46 IST Report Abuse
&2980&3014&2985&3021&2965&3006&2970&3007 &2970&300 அந்த காசின் படத்தை நீங்கள் வெளியிடலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X