vilupuram district news | ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா

Added : டிச 27, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் 38வது ஆராதனை விழா நேற்று துவங்கியது. இவ்விழா வரும் ஜனவரி 10ம் தேதி வரை நடக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மூர்த்தி வழிபாடு, கணபதி ஹோமம், பாத பூஜை மற்றும் இரவு சென்னை கல்யாணியின் பஜனை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், இரவு பஜனை நடக்கிறது. 29ம் தேதி காலை கிருஷ்ண யஜீர்வேத பாராயணம், மகாருத்ர ஜபம், மகா சங்கல்பத்துடன் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 30ம் தேதி காலை முருகன் காவடி உற்சவம், மாலை பகவதி சேவை, 31ம் தேதி காலை சுதர்சன ஹோமம், இரவு சென்னை விஜய், பாலாஜியின் உபன்யாசம் நடக்கிறது.


ஜனவரி 1ம் தேதி காலை சூர்ய நமஸ்காரம், நவக்ரஹ ஹோமம், மாலை அகண்டதாரா நாமஜபம் துவங்குகிறது. மறுநாள் (2ம் தேதி) சுக்ல யஜூர் வேதம், ரிக், சாம வேதம், தேவி பாகவதம், சங்கர பாஷ்யம், சிவகாமம், ஸ்ரீ மத்ராமாயணம் பாராயணங்கள் துவங்கப்பட்டு 9 நாட்கள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அகண்டதாரா நாமஜபம் பூர்த்தி, 3ம் தேதி மாலை 3 மணிக்கு பரனூர் ஸ்ரீ கிருஷ் ணப்ரேமி சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக பிரவசனம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, 10.15 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜையும், இரவு லால்குடி கிருஷ்ணன், விஜயா குழுவினரின் வயலின் கச்சேரி நடக்கிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X