நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி | நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி

Added : ஜன 11, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு, மாதம்தோறும் இலவச பயிற்சி வழங்கப்படும் என, கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி தெரிவித்தார். சேலத்தில், கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம், சுகுணா நிறுவனம் சார்பில் நாட்டுக் கோழி பண்ணையாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி பேசுகையில், ""சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 300 நாட்டுக்கோழி பண்ணையாளர்கள் உள்ளனர். இவர்கள், நேரடியாக வியாபாரிகளுக்கு கோழிகளை விற்க வேண்டும். அப்போதுதான் லாபம் கிடைக்கும். கடைகளில், ஒரு கிலோ கோழி, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே, பண்ணையில் 120 ரூபாய்க்கு கிடைக்கும். கோழிக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசியும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு நீக்குவதும் அவசியம். இதுகுறித்த இலவச பயிற்சி மாதம்தோறும் ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு, 0427-2440408 என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். கால்நடை பராமரிப்புத்துறை முன்னாள் இணை இயக்குநர் ஜெகத் நாராயணன், கால்நடை உணவியல் துறை தலைவர் சந்திரசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியம், சுகுணா நிறுவன கிளை மேலாளர் செங்கதிர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASAMI - KANDERKULAMANICKAM,இந்தியா
11-ஜன-201210:54:57 IST Report Abuse
RAMASAMI நாட்டுகோழி வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X