chennai district news | நாகப்பட்டினம் துறைமுகம் ரூ.380 கோடியில் மேம்பாடு| Dinamalar

தமிழ்நாடு

நாகப்பட்டினம் துறைமுகம் ரூ.380 கோடியில் மேம்பாடு

Added : ஜன 21, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : நாகப்பட்டினம் துறைமுகத்தை, 380 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து தமிழக அரசின் அறிக்கை: நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தினை பொது - தனியார் கூட்டாண்மை அடிப்படையில், 380 கோடி ரூபாய் செலவில், அனைத்து பருவ கால நிலைக்கேற்ப, ஆழ்கடல் கப்பலணை மற்றும் பசுமைச் சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, அதனுடைய செயல்பாடுகள் துவங்கும் முதல் ஆண்டில், 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும். இதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு, 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது படிப்படியாக வளர்ச்சி பெற்று, ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், 60 லட்சம் டன் சரக்குகளை கையாளும் நிலைக்கு, துறைமுகம் உயரும். இந்த துறைமுக மேம்பாட்டினால், இதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான, துறைமுக இணைப்பு வசதி கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இப்பகுதியில், வேலைவாய்ப்பு வசதியும், பொருளாதார வசதியும் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X