கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி சுரேஷ்; இன்ஜினியரிங் படித்துவிட்டு பாங்க் மேனேஜராக இருந்தார். திருமணமாக இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர், குழந்தைகள் நலனே பெரிது என கருதி தான் பார்த்த வேலை, வளர்ந்த ஊர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரபு நாட்டில் (தோகா கத்தார்) இருந்த தனது கணவரிடம் போய்விட்டார்.
பிள்ளைகள் வளர்ந்துவிட, குடும்பம் நன்றாக செட்டிலாகிவிட புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அப்போது அவரது கவனத்தை ஈர்த்தது புகைப்படங்களே.
ஆன் லைனில் போட்டோகிராபி கற்றுக்கொண்டவர் சொந்த மண்ணிற்கு வந்தபோது நிறைய நேரம் செலவழித்து எடுத்த படங்களை "பேஸ்புக்கில்' போட்டார். அந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை இன்னும் ஆர்வமாய் புகைப்படம் எடுப்பதில் ஈடுபடுத்தியது. இப்போது ஸ்ரீதேவி சுரேஷின் படங்களுக்கு நிறைய ரசிகர்களும்,பார்வையாளர்களும் உள்ளனர்.
புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு தியானம் செய்வது போல. புகைப்படம் எடுப்பதால் என் மனஅழுத்தம் குறைந்து மனசு லேசாகிறது. இப்படி புகைப்படம் எடுப்பது எனக்குள் பல விரும்பக்கூடிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீதேவிசுரேஷ்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.