மாமூல் தர மறுத்த கடைக்காரருக்கு கத்தி வெட்டு | மாமூல் தர மறுத்த கடைக்காரருக்கு கத்தி வெட்டு| Dinamalar

இந்தியா

மாமூல் தர மறுத்த கடைக்காரருக்கு கத்தி வெட்டு

Added : பிப் 04, 2012
Advertisement

புதுச்சேரி:முதலியார்பேட்டை அருகே மாமூல் தர மறுத்த வாகன உதிரிபாக கடை உரிமையாளரை தாக்கிய நொள்ள பாலா கும்பலை போலீசார் தேடி வருகின்
றனர். முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகர், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு சொந்தமான வாகன உதிரிபாக கடை, முதலியார்பேட்டை 100 அடிரோட்டில் உள்ளது. கடந்த ஆண்டு இவரை மிரட்டி, நொள்ள பாலா கும்பல் 12 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளது.மீண்டும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாமூல் கேட்டு மிரட்டவே, அதிர்ச்சியடைந்த தங்கமணி, முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு கடைக்கு வந்த நொள்ள பாலா கும்பல், ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டியது. கொடுக்க மறுக்கவே, அக்கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அவர் மனைவி ஹேமாமாலினிக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது. தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியது நொள்ள பாலா மைத்துனர் டிங்கர் செல்வம், முனியாண்டி மற்றும் இரண்டு பேர் என தெரிந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement